அதிக வட்டி வசூலித்தால் நடவடிக்கை: கலெக்டர்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அதிக வட்டி வசூலித்தால் நடவடிக்கை: கலெக்டர்

Added : ஜன 12, 2018
Advertisement

சென்னை: கடன் பெற்ற நபர்களிடம், அதிக வட்டி வசூல் செய்பவர்கள் மீது, நீதிமன்ற நடைமுறைப்படி, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, சென்னை மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.
இது குறித்த கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:
கடன் கொடுத்தவர்கள், தமிழக வட்டிவிதிப்பு சட்டத்தின் படி, அனுமதிக்கப்பட்ட தொகையை விட, அதிக வட்டி வசூலிப்பது சட்ட விரோதம்.
அவ்வாறு அதிக வட்டி வசூலித்தால், மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும், 30 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்.
கடன் பெற்றவர்கள், அதிக வட்டி கேட்கும் பட்சத்தில், கடன் வாங்கிய தொகை, உரிய
வட்டியை நீதிமன்றத்தில் உரிய மனுவுடன்
செலுத்தலாம்.
மனு மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு, நீதிமன்றங்களால் உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும்.
அதிக வட்டிக்காக, கடன் கொடுத்தவரால் அபகரிக்கப்பட்ட அசையும், அசையா சொத்துகள், கடன் பெற்றவருக்கு நீதிமன்றம் மூலம் திரும்ப பெற்றுத் தரப்படும்.
இது தொடர்பான மனுவுக்கு, 100 ரூபாய்
மட்டுமே நீதிமன்ற கட்டணமாக வசூலிக்கப்படும்.
பொது மக்கள், தாங்கள் பெற்ற கடனுக்கு, மிக அதிக வட்டி வசூலிக்கப்பட்டால், சட்ட விதிமுறைகள் படி, உரிய நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement