பொங்கல் பரிசாக அனுபூதி சொகுசு பெட்டி : மைசூரு சதாப்தி எக்ஸ்பிரசில் இன்று முதல் அறிமுகம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பொங்கல் பரிசாக அனுபூதி சொகுசு பெட்டி : மைசூரு சதாப்தி எக்ஸ்பிரசில் இன்று முதல் அறிமுகம்

Added : ஜன 12, 2018
Advertisement
பொங்கல் பரிசு,Pongal Gift, மைசூரு சதாப்தி எக்ஸ்பிரஸ்,Mysore Shatabdi Express,  தெற்கு ரயில்வே, Southern Railway,அனுபூதி சொகுசு ரயில் பெட்டி, Anubhuti Luxury Railway,சென்னை ஐ.சி.எப், Chennai ICF,  எல்.சி.டி டிஜிட்டல் டிவி, LCD Digital TV,

சென்னை: தெற்கு ரயில்வேயில், முதன் முறையாக, சென்னை சென்ட்ரல் - மைசூரு சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில், பொங்கல் பரிசாக, இன்று முதல், அனுபூதி சொகுசு ரயில் பெட்டி, அறிமுகம் செய்யப்படுகிறது. சென்னை சென்ட்ரலில் இருந்து, கர்நாடக மாநிலம் மைசூருக்கு, சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில், சென்ட்ரலிலிருந்து, வாரத்தில் புதன்கிழமை தவிர, மற்ற நாட்களில், காலை, 6:00 மணிக்கு புறப்பட்டு, மதியம், 1:00 மணிக்கு மைசூரு சென்றடையும். அங்கிருந்து, மதியம், 2:15 மணிக்கு புறப்பட்டு, இரவு, 9:25 மணிக்கு, சென்னை சென்ட்ரல் வந்தடையும். இந்த ரயிலில், இருவழி போக்குவரத்திலும், இன்று முதல், தலா ஒரு, அனுபூதி சொகுசு ரயில் பெட்டி இணைத்து இயக்கப்படுகிறது. சென்னை, ஐ.சி.எப்., பில், அனுபூதி, 'ஏசி' சேர் கார், சொகுசு பெட்டி தயாரிக்கப்பட்டுள்ளது. இப்பெட்டியில், ஒவ்வொரு இருக்கைக்கு பின்புறமும், மையப்பகுதியில், சிறிய அளவில், எல்.சி.டி., டிஜிட்டல், 'டிவி' பொருத்தப்பட்டுள்ளது.
இத்துடன், பெட்டியின் மையப்பகுதியில், தனியாக எட்டு எல்.சி.டி., டிஜிட்டல்,'டிவி'யும் பொருத்தப்பட்டுள்ளன. 'டிவி' திரையை தொட்டால், படம் பார்க்கலாம்; பாட்டு கேட்கலாம். 'ஹெட் போன்' பயன்படுத்தும் வசதி, மொபைல் போன் சார்ஜ் வசதி உள்ளது.
ஜி.பி.எஸ்., தொழில்நுட்ப வசதியில், ரயில் போக்குவரத்து குறித்த, அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம்.பெட்டி முழுவதும், எல்.இ.டி., விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.
தானியங்கி கதவு வசதி உள்ளது. நட்சத்திர ஓட்டல்களில் உள்ளது போல், நவீன கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இருக்கையில் உள்ள பட்டனை அழுத்தினால், உதவி செய்வதற்கு ஊழியரும் உண்டு.பெட்டியில் பூசப்பட்டுள்ள வண்ணங்கள்,எப்போதும் மாறாது; கீறல் ஏற்படாது.
அழுக்கு படிந்தால் துடைத்துவிடலாம். 130 கி.மீ., வேகத்தில் இயங்கக்கூடியது.
இப்பெட்டியில் பயணம் செய்வது, விமானத்தில் பயணம் செய்வது போன்ற உணர்வை ஏற்படுத்தும். இந்த ரயிலில், 'ஏசி' எக்சிகியூடிவ் வகுப்பில் பயணம் செய்ய, 1,835 ரூபாய் கட்டணமாகும்.
அனுபூதி பெட்டியில் பயணிக்க, 2,135 ரூபாய் கட்டணம். இப்பெட்டிகள், 6 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த சொகுசு பெட்டிக்கு, பயணியரிடம் உள்ள வரவேற்பையொட்டி, படிப்படியாக கூடுதல் பெட்டிகள் அறிமுகம் செய்யப்படும் என, தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை