டிரைவர் யூனிபார்ம் அணியாததால் நடுவழியில் பஸ்சை நிறுத்திய எஸ்.ஐ., கை குழந்தைகளுடன் தவித்த பயணிகள்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

டிரைவர் யூனிபார்ம் அணியாததால் நடுவழியில் பஸ்சை நிறுத்திய எஸ்.ஐ., கை குழந்தைகளுடன் தவித்த பயணிகள்

Added : ஜன 12, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

திருப்புவனம்:அரசு பஸ் டிரைவர், கண்டர்கள் யூனிபார்ம் போடாமல் பஸ் எடுத்து வரும் நிலையில், திருப்புவனத்தில் நேற்று தனியார் பஸ் டிரைவர் யூனிபார்ம் அணியவில்லை என கூறி நடுவழியில் பஸ்சை நிறுத்தி பயணிகளை பெண் எஸ்.ஐ., இறக்கி விட்டதால் கைகுழந்தையுடன் தவித்த பெண்கள் அரசு பஸ்சும் இல்லாததால் சிரமமடைந்தனர்.அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்வதால் பெரும்பான்மையான பஸ்கள் இயங்காமல் மக்கள் சிரமமடைந்து வருகின்றனர். இதனால் பொதுமக்கள் தனியார்பஸ்களையே நம்பியே பயணம் செய்கின்றனர்.நேற்று காலை கட்டிகுளத்தில் இருந்து மதுரை மாட்டுத்தாவணிக்கு தனியார் பஸ் சென்றது. பஸ்சில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது. திருப்புவனம் பஸ் நிறுத்தத்தில் எஸ்.ஐ., ஜெயக்கொடி தனியார் பஸ் டிரைவர் காக்கி சட்டை போடவில்லை என கூறி பஸ்சை நிறுத்த சொல்லியுள்ளார். டிரைவர் கவனிக்காமல் பஸ்சை கிளப்பவே எஸ்.ஐ., போனில் வாரச்சந்தை அருகே பஸ்சை மடக்கி ஸ்டேசனுக்கு கொண்டு வரச்சொல்லி உத்தரவிட்டார். பஸ்சில் ஏராளமான பயணிகள் கைக்குழந்தைகள், முதியோர்கள் இருந்துள்ளனர்.போலீசாரிடம் பயணிகள் வாக்குவாதம் செய்துள்ளனர். டிரைவரும் காக்கிச்சட்டை வைத்துள்ளேன், புழுக்கமாக இருந்ததால் அணியவில்லை என கூறியுள்ளார். ஆனால் போலீசார் எஸ்.ஐ., உத்தரவு என பயணிகளை வலுக்கட்டாயமாக இறக்கியுள்ளனர். ஆத்திரமடைந்த பயணிகள் மறியல் செய்ய போவதாக கூறியுள்ளனர். தகவலறிந்து பத்திரிக்கையாளர்கள் வந்த உடன் வேறு வழியின்றி பஸ்சை போலீசார் விடுவித்தனர்.இதனால் 30 நிமிடமாக தனியார் பஸ் வாரச்சந்தை அருகே நிறுத்தப்பட்டதுடன் சாலையின் இருபுறமும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.கார்த்திக் என்பவர் கூறுகையில், அரசு பஸ்களில் யார் டிரைவர், கண்டக்டர் என்றே தெரியவில்லை, சீருடை அணியாமல் பஸ்சை இயக்குவதுடன் தினசரி விபத்துகளை ஏற்படுத்துகின்றனர். அதை பற்றி போக்குவரத்து துறை அதிகாரிகளும், போலீசாரும் கண்டு கொள்வதில்லை. பொதுவாக பயணிகளுடன் செல்லும் பஸ் டிரைவர் மீது போலீசார் நடடிக்கை எடுக்கும் போது சம்பந்தப்பட்ட பேருந்து நிறுத்தம் வரை சென்று பயணிகளை இறக்கிவிட்ட பின் பஸ்சை ஸ்டேசனுக்கு கொண்டு செல்வது வழக்கம்,ஆனால் தற்போதய சூழ்நிலையை கருத்தில் கொள்ளாமல் எஸ்.ஐ., தனது உத்தரவிற்கு பஸ்சை டிரைவர் நிறுத்தவில்லை என்பதால் பயணிகளை நடு ரோட்டில் நிறுத்த செய்தார். இதனால் கைகுழந்தைகளுடன் பெண்கள் பரிதவித்தனர். மறியலுக்கு முயன்ற பின் தான் பஸ்சை விடுவித்தார். எஸ்.ஐ.,யின் மனசாட்சியற்ற இச் செயல் மக்களிடையே போலீஸ் துறை மேல் வெறுப்பையே ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை