மாற்றுவழியில் அரசு பேருந்து : கிராம மக்கள் கடும் பாதிப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாற்றுவழியில் அரசு பேருந்து : கிராம மக்கள் கடும் பாதிப்பு

Added : ஜன 12, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கிராமங்களுக்கு செல்ல வேண்டிய அரசு பேருந்துகளை, மாற்று வழித்தடத்தில் இயக்குவதால், கிராமப்புற மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
காஞ்சிபுரம் மண்டல போக்குவரத்து பணிமனையில் இருந்து, 15க்கும் மேற்பட்ட கிராம வழித்தடங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தால், தற்காலிக ஓட்டுனர்கள் நியமித்து, குறைவான அரசு பேருந்துகளே இயங்குகின்றன.
இந்த வாய்ப்பை பயன்படுத்தி, தனியார் பேருந்து உரிமையாளர்கள், பிற வழித்தடங்களில், கூடுதல் பேருந்துகளை அனுமதி இல்லாமல் இயக்கி, அதிக லாபம் பார்க்கின்றனர்.
இந்நிலையில், கிராம தடத்தில் இயக்கப்பட்ட பேருந்துகள், மாற்று வழித்தடத்தில் இயக்கப்படுகின்றன.
உதாரணமாக, காஞ்சிபுரத்தில் இருந்து புரிசை கிராமம் வழியாக, செல்லம்பட்டிடை செல்லும் கிராமப்புற அரசு பேருந்து, காஞ்சிபுரம் - அரக்கோணம் சாலையில் இயக்கப்படுகிறது.
இதனால், செல்லம்பட்டிடை, புரிசை, வளத்துார், பரந்துார், காரை ஆகிய பல கிராமங்களைச்
சேர்ந்த மக்களின் போக்குவரத்து கேள்விக்குறியாகி உள்ளது.
மாணவர்கள் உட்படப பல தரப்பினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
கிராமங்களுக்கும் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X