வீடு கட்டும் பயனாளிகள் கடனாளியாகும் பரிதாபம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வீடு கட்டும் பயனாளிகள் கடனாளியாகும் பரிதாபம்

Added : ஜன 12, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

வாலாஜாபாத்: வாலாஜாபாத் பேரூராட்சியில், அரசு வீடுகள் கட்டும் பயனாளிகளுக்கு, பணம் வழங்கவில்லை என, புகார் எழுந்துள்ளது.
வாலாஜாபாத் பேரூராட்சியில், 31 பசுமை வீடுகள் மற்றும் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ், 414 வீடுகள் என மொத்தம், 445 பயனாளிகள் வீடு கட்டுகின்றனர்.
பெரும்பாலானோர் வீடுகளில் இறுதி கட்ட பணி நடக்கிறது; சிலர் வீடுகளை கட்டி வருகின்றனர். இவர்களுக்குரிய பணம் வழங்கவில்லை என, கூறப்படுகிறது. மேலும், வீடு கட்டிய பயனாளிகள் கடனாளிகளாக உள்ளனர்.
எனவே, வீடு கட்டிய பயனாளிகளுக்கு பணம் விடுவிக்க, பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
இது குறித்து, பேரூராட்சி அதிகாரி ஒருவர்
கூறுகையில், 'கிராம நிர்வாக அலுவலர், புலன் எண் சான்றிதழ் அளிக்க வேண்டும். அதன் பின், பொறியாளர் பரிந்துரைத்த பின், பணம் விடுக்க உரிய
நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை