மானாமதுரையில் ஜல்லிக்கட்டு காளைகளோடு பயமின்றி சகஜமாக பழகும் 3 வயது சிறுவன்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மானாமதுரையில் ஜல்லிக்கட்டு காளைகளோடு பயமின்றி சகஜமாக பழகும் 3 வயது சிறுவன்

Added : ஜன 12, 2018
Advertisement

மானாமதுரை:மானாமதுரை அருகே முல்லைக்குளத்தில் போலீஸ் தம்பதியரின் மகனான 3 வயது சிறுவன் ஜல்லிக்கட்டு காளைகளோடு பழகி மற்றவர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளான்.சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே முல்லைக்குளத்தைச் சேர்ந்த கற்பூரசுந்தரபாண்டியன்33, இவரது மனைவி ஈஸ்வரி30, இவர்கள் இருவரும் மதுரையில் போலீசாக பணியாற்றி வருகின்றனர். இவர்களது 3 வயது மகன் ஹர்சத் தங்களது வீட்டில் வளரும் 3 ஜல்லிக்கட்டு மாடுகளோடு சகஜமாக பழகி வருகிறான்.கற்பூர சுந்தரபாண்டியனின் அப்பா கிட்டுவின் வீட்டில் ஜல்லிக்கட்டு மாடுகளை வளர்த்து வருகின்றனர். தற்போது அவரது வீட்டில் பெரிய மருது, சின்னமருது, ராஜா என்ற 3 ஜல்லிக்கட்டு மாடுகள் வளர்ந்துவருகின்றன. இவற்றில் தற்போது மூன்றரை வயதுடைய 'சின்னமருது' என்ற ஜல்லிக்கட்டு காளையோடு சிறுவன் ஹர்ஷத் மிகவும் அன்போடும்,பாசத்தோடும் பழகிவருகிறான்.
அந்த மாட்டிற்கு தகுந்த நேரத்தில் உணவு வழங்குவது, தண்ணீர் காட்டுவது, மேய்ச்சலுக்குகூட்டிச் செல்வது என அதனை ஒரு குழந்தை போல பாவித்து இந்த சிறுவன் பழகி வருகிறான்.இந்த 'சின்னமருது' ஜல்லிக்கட்டு காளை கடந்த ஆண்டு முதல் முறையாக அவனியாபுரம், அலங்காநல்லுார் ஆகியஇடங்களில் களம் கண்டு முதல் தடவையே இரண்டு இடங்களிலும் யாரிடமும்பிடிபடாமல் பரிசுகளை வென்று வந்தது.
அப்படிப்பட்ட இந்த காளை சிறுவனின் அன்புக்கு கட்டுப்பட்டு அவனிடம் ஒரு குழந்தை போல பழகி வருவதாக கிட்டு குடும்பத்தினர் கூறுகின்றனர்.சிறுவனின் சித்தப்பா அருண் கூறுகையில், எனது அண்ணன் போலீஸ், வேலையில் சேர்வதற்கு முன்பு ஜல்லிக்கட்டு மாடுகளை ஆர்வமாக வளர்த்து வந்தார். தற்போது அவரைப் போன்றே அவரது மகன் ஹர்சத், சிறுவயதிலிருந்து ஜல்லிக்கட்டு காளையிடம் மிகவும் அன்பாக பழகி வருகிறான்.
வீட்டில் தாத்தா, சித்தப்பா, சிறுவன் ஆகியோர் மட்டும் தான் 'சின்னமருது' காளையிடம் நெருங்க முடியும். இக் காளையோடு ஹர்சத் மிகவும் அன்போடும், பாசத்தோடு பழகி வருவதை சுற்று வட்டார கிராமத்தினர் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். ஜல்லிக்கட்டு காளை அருகே பொதுவாக பெரியவர்கள் மற்றும் தான் செல்ல முடியும். மற்றவர்கள் காளை பக்கத்தில் நெருங்க முடியாது. தற்போது ஒரு சில இடங்களில் பெண்களும் ஜல்லிக்கட்டு மாடுகளை வளர்த்து வருகின்றனர்.
அப்படி இருக்கையில் மானாமதுரை அருகே உள்ள முல்லைக்குளத்தில் ஜல்லிக்கட்டு மாடுகளோடு சிறுவன் ஒருவன் பழகி வருவதைஅக்கம், பக்கம் உள்ள மற்ற கிராம மக்களும்,ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும், மாடுபிடி வீரர்களும்ஆச்சரியத்துடன் பார்த்து அந்த சிறுவனை பாராட்டி வருகின்றனர்.நீங்களும் அவனை பாராட்ட 89405 65676.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை