கல்லூரியில் சமத்துவ பொங்கல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கல்லூரியில் சமத்துவ பொங்கல்

Added : ஜன 12, 2018
Advertisement

இளையான்குடி:இளையான்குடியில் உள்ள டாக்டர் சாகிர் உசேன்கல்வியியல் கல்லுாரியில், நேற்று காலை சமத்துவ பொங்கல் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கல்லுாரி செயலாளர்ஜபருல்லாகான் தலைமையேற்றார். கல்லுாரி முதல்வர் சிகாபுதீன்வரவேற்புரை ஆற்றினார். இவ்விழாவில், டாக்டர் சாகிர் உசேன்கல்லுாரி முதல்வர் அப்பாஸ் மந்திரி, கல்வியியல் கல்லுாரிஒருங்கிணைப்பாளர் சபினுல்லாகான் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.கல்லுாரி பேராசிரியர்கள், மாணவ ஆசிரியர்கள், அலுவலர்கள்இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கல்லுாரி துணைமுதல்வர் பேராசிரியர் மகேந்திரன் நன்றியுரை கூறினார்.

Advertisement