குடியரசு தின விழாவில் பாராட்டு அரசு ஊழியர் பாரபட்சம் மாறுமா?| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குடியரசு தின விழாவில் பாராட்டு அரசு ஊழியர் பாரபட்சம் மாறுமா?

Added : ஜன 12, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

காஞ்சிபுரம்: 'அரசு ஊழியர்களுக்கு, குடியரசு தின விழாவில் வழங்கப்படவுள்ள பாராட்டு சான்றிதழ்களை, ஒருதலை பட்சமாக இல்லாமல் தேர்வு செய்ய வேண்டும்' என, அரசு ஊழியர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.
நாடு முழுவதும், ஆகஸ்ட், 15ல், சுதந்திர தின விழாவும், ஜனவரி, 26ல் குடியரசு தின விழாவும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
மாவட்ட தலைநகரங்களில் நடைபெறும் இந்த விழாவின் போது, அரசு அலுவலகங்களில் அப்பழுக்கற்ற முறையில் பணியாற்றும் அரசு அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் வழங்குவார்.
அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்டத்திலும், சுதந்திர மற்றும் குடியரசு தின விழாக்களின் போது சிறப்பாக பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகிறது.
கடந்தாண்டு பாராட்டு சான்றிதழ்களை வழங்கியதில் ஒரு தலைபட்சம் இருந்ததாகவும், முறையாக பணி செய்பவர்களை விடுத்து, அதிகாரிகளுக்கு, 'ஜால்ரா' அடித்த சிலருக்கு சான்றிதழ்களை வழங்கியதாக சிலர் புகார் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், வரும் குடியரசு தின விழாவில், சிறந்த அரசு ஊழியர்களுக்கு சான்றிதழ் வழங்க, அந்தந்த துறை உயர் அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர், பொன்னையா அறிவுறுத்தியுள்ளார்.
இந்தாண்டாவது முறையாக பணியாற்றும் அரசு ஊழியர்களை தேர்வு செய்து, பாராட்டு சான்றிதழ் வழங்க வேண்டும் என, அரசு ஊழியர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.
ஒரு தலைபட்சம் இல்லாமல், சிறந்த ஊழியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்க, துறை உயரதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர், பொன்னையா அறிவுறுத்த வேண்டும் என, வேண்டுகோள் எழுந்துள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை