போக்குவரத்து துறைக்கு ரூ.30.39 லட்சம் வருவாய்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

போக்குவரத்து துறைக்கு ரூ.30.39 லட்சம் வருவாய்

Added : ஜன 12, 2018
Advertisement

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து துறை சார்பில், கடந்த ஆண்டு வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட வரி மற்றும் அபராத தொகை, 30.39 லட்சம் ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது.
வட்டார போக்குவரத்து துறை சார்பில், கடந்த ஆண்டு ஜனவரி முதல் டிச., 31 வரை, 9,402 வாகனங்கள் சோதனை செய்யப்பட்டன. அதில், பல குற்றங்களுக்காக, 1,597 வாகனங்களுக்கு தணிக்கை அறிக்கை
வழங்கப்பட்டன.
அவற்றில், வரி மற்றும் அபராதம் சேர்த்து மொத்தம், 30 லட்சத்து, 39 ஆயிரத்து, 286 ரூபாய் அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளது.
மேலும். குடிபோதையில் வாகனங்கள் ஓட்டிய, 603 ஓட்டுனர்கள் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டன.
சாலை விதிகளை மீறி ச்சென்ற வாகன ஓட்டிகள், 167 பேர், உயிரிழப்பு ஏற்படுத்திய, 129 ஓட்டுனர்கள், கைபேசியில் பேசியபடி வாகனங்கள் ஓட்டிய,
756 பேருக்கு மூன்று மாதங்கள் முதல் ஆறு மாதங்கள் வரை ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
வாகன சோதனையில் வட்டார போக்குவரத்து அலுவலர் உத்தரவின் படி, ஆய்வாளர்கள் சிவ
குமார், சக்திவேல் ஈடுபட்டனர்.

Advertisement