பாரம்பரிய கலை சின்னங்கள் ரசாயனங்கள் மூலம் தூய்மை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பாரம்பரிய கலை சின்னங்கள் ரசாயனங்கள் மூலம் தூய்மை

Added : ஜன 12, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் உள்ள பாரம்பரிய கலைச்சின்னங்கள், ரசாயன கலவை மூலம் துாய்மைப்படுத்தப்படுகின்றன.
பல்லவ சிற்பக்கலைச்சின்னங்கள் அமைந்துள்ள மாமல்லபுரம், சர்வதேச பாரம்பரிய கலை இடமாக விளங்குகிறது.
கி.பி., 7ம் நுாற்றாண்டில், இங்குள்ள பாறைகளில், கடற்கரைக்கோவில், ஐந்து ரதங்கள், அர்ச்சுனன் தபசு, குடவரை மண்டபங்கள் ஆகிய கலைச்சின்னங்களை, பல்லவர்கள் படைத்தனர்.
தொல்லியல் துறை, பராமரித்து பாதுகாக்கும் இவற்றை, ஐக்கிய நாடுகள் சபையின் கலாசாரக்குழு, சர்வதேச பாரம்பரிய கலைச்சின்னங்களாக அங்கீகரித்துள்ளது. கடற்காற்றின் உப்பு, சுற்றுப்புற
மாசுவால், இவை பொலிவை இழக்கின்றன.
இத்தகைய பாதிப்பிலிருந்து பாதுகாத்து, பொலிவுடன் பராமரிக்க, இத்துறையின் ரசாயன பிரிவினர், சில ஆண்டுகளுக்கு ஒருமுறையோ, தேவைக்கேற்பவோ, சின்னங்களில் ரசாயன கலவை பூசி, அழுக்கு நீக்கி, துாய்மைப்படுத்துகிறது.
தற்போதும், ஐந்து ரதங்களை துாய்மைப்படுத்த, கலைச்சின்னத்தில் சாரம் அமைக்கப்பட்டுள்ளது.
சுத்திகரிப்பு நீரில் தயாரித்த காகித கூழ்மத்துடன், ரசாயன திரவம் கலந்த கலவை, பாறை விளிம்பில், தேவைக்கேற்ற தடிமனில் பூசப்படும்.
இக்கலவை, அழுக்கு, வவ்வால் எச்சம் உள்ளிட்ட மாசுகளை உறிஞ்சும். சில நாட்களில் நன்கு உலர்ந்து, அதை பெயர்க்கும்போது, மாசு நீங்கி கலைச்சின்னம் பொலிவடையும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை