மணல் திருட்டில் ஈடுபட்ட டிராக்டர், டூ வீலர் பறிமுதல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மணல் திருட்டில் ஈடுபட்ட டிராக்டர், டூ வீலர் பறிமுதல்

Added : ஜன 12, 2018
Advertisement

சத்திரப்பட்டி:சத்திரப்பட்டி அருகே கீழராஜகுலராமன் பகுதியில் எஸ்.ஐ., ஹாரூன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். கீழராஜகுலராமனிலிருந்து வடகரை செல்லும் கோபாலபுரம் ரோட்டில் மணல் ஏற்றி வந்த டிராக்டர் மற்றும் அதன் முன் டூ வீலரில் வந்த நபரை நிறுத்தி சோதனையிட்ட போது வண்டியில் வந்த நால்வரும் தப்பினர். டூ வீலர் மற்றும் டிராக்டரை கைப்பற்றி விசாரித்ததில் டிராக்டர் உரிமையாளர் செந்தட்டியாபுரத்தை சேர்ந்த திருப்பதி, மாடசாமி, மாரிமுத்து, ஸ்ரீரெங்கம் என்பது தெரிந்தது.

Advertisement