புகையில்லா போகி குறித்த விழிப்புணர்வு பேரணி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

புகையில்லா போகி குறித்த விழிப்புணர்வு பேரணி

Added : ஜன 12, 2018
Advertisement

கடம்பத்துார்: கடம்பத்துார் பகுதியில், புகையில்லா போகி குறித்து, பள்ளி மாணவர்கள் கல்நது கொண்ட விழிப்புணர்வு பேரணி நடந்தது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட புகையில்லா போகி குறித்த விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. பேரணிக்கு, பள்ளி தலைமையாசிரியர் நசீர் தலைமை வகிக்க, என்.எஸ்.எஸ். ஆசிரியர் பரந்தாமன் மற்றும் என்.சி.சி., ஆசிரியர் அருணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த விழிப்புணர்வு பேரணியில், என்.எஸ்.எஸ்., மற்றும் என்.சி.சி., மாணவர்கள் பங்கேற்றனர். இதில் சுற்றுச்சுழ்ல் பாதிக்காதவாறு போகி பண்டிகை கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவர்கள் கையில் ஏந்தி பேரணியாக சென்றனர். பள்ளி நுழைவு வாயிலில் தொடங்கிய பேரணி, முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து, பின்
மீண்டும் பள்ளியை அடைந்தது.

Advertisement