பொங்கலுக்கு சுவை கூட்ட வெல்லம் தயார்! : இரவு பகலாக இயங்கும் கரும்பு ஆலைகள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பொங்கலுக்கு சுவை கூட்ட வெல்லம் தயார்! : இரவு பகலாக இயங்கும் கரும்பு ஆலைகள்

Added : ஜன 12, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement

ஆர்.கே.பேட்டை: பொங்கலுக்கு இனிப்பு கூட்டும் வெல்லத்தை உற்பத்தி செய்வதில், கரும்பு விவசாயிகள் அயராது பாடுபட்டு வருகின்றனர். தீபாவளிக்கு முன் இயங்க துவங்கிய ஆலைகள், பொங்கல் பண்டிகையுடன் உற்பத்தியை நிறைவு செய்கின்றன.
ஆர்.கே.பேட்டை அடுத்த, தியாகாபுரம், ஜனகராஜகுப்பம், கதனநகரம், ஆனந்தவல்லிபுரம் உள்ளிட்ட பகுதிகளில், கரும்பு பயிர் செய்யும் விவசாயிகள், சொந்தமாக ஆலைகளை நிறுவி, வெல்லம் தயாரிப்பதில் பாரம்பரியமாக ஈடுபட்டு உள்ளனர்.
விவசாயிகள், தங்
களுக்கு சொந்தமான வயலில் விளையும் கரும்புகளை, வயல்வெளியில் அமைக்கப்பட்டுள்ள கரும்பு
ஆலைகளில், பிழிந்து சாறு எடுக்கின்றனர்.
இதற்காக, பிரத்யேகமான குடில் அமைக்கப்பட்டு, கைதேர்ந்த தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தி, வெல்லம் தயாரிக்கின்றனர்.
ஆலையில் பிழிந்தெடுக்கப்படும் சாறு, பாகு பதத்திற்கு காய்ச்சப்
படுகிறது. பின், அச்சில் வார்த்து, வெல்லம்
உருண்டைகள் தயாரிக்கப்படுகின்றன.
வெல்லத்தில் துாசு, கரும்பு சக்கைள் அனைத்தும் அதற்கே உரித்தான முறையில் பிரித்தெடுக்கப்பட்டு, சுத்தமான, நல்ல நிறத்துடன் கூடிய வெல்லம் விற்பனைக்கு அனுப்பி
வைக்கப்படுகிறது.
கரும்பு சக்கை உள்ளிட்டவற்றை பிரித்தெடுக்க, வெண்டை செடியின் சாறு, சுண்ணாம்பு உள்ளிட்டவை பயன்படுத்தப்படுகின்றன.
தீபாவளி பண்டிகைக்கு முன்பாக, செயல்பட துவங்கிய ஆலைகள், தற்போது உச்சகட்ட உற்பத்தியை அடைந்துள்ளன. சில நாட்களின் நடப்பு பருவத்திற்கான உற்பத்தி நிறைவடையும்.
ஒரு டன் கரும்பில் இருந்து, 400 லிட்டர் சாறு கிடைக்கும், அந்த சாறு, பாகு பதத்திற்கு காய்ச்சினால், அதிலிருந்து, 70 கிலோ வெல்லம்
கிடைக்கும். ஒரு ஆலையில் இருந்து நாளொன்றுக்கு, அதிகபட்சமாக, 200 கிலோ வெல்லம் தயாரிக்கப்படும்.
உற்பத்தி செய்யப்படும் வெல்லம், நாள்தோறும் வியாபாரிகளால், கொள்முதல் செய்யப்பட்டு
விடுகிறது.
தீபாவளி பண்டிகையின் போது, இனிப்பு தயாரிப்பிற்காக, வெல்லத்தின் தேவை அதிகம் இருந்ததால், ஒரு கிலோ வெல்லம், 60 ரூபாய் வரை கொள்முதல் செய்யப்பட்டது.
தற்போது, 40 ரூபாய் என, விலை குறைந்து
உள்ளது.
இதனால், விவசாயிகளின் அசலுக்கு மோசம் இல்லாத லாபம்
கிடைக்கும். மக்களுக்கு, பொங்கலுக்கு தேவையான வெல்லம் குறைந்த விலையில் கிடைக்கும் என்பது மகிழ்ச்சியான விஷயம்.
பொங்கல் பண்டிகையின் போது வெல்லத்தின் தேவை அதிகம் இருக்கும் என்பதால், வெல்லம் உற்பத்தியாளர்கள், இரண்டு வாரங்களாக, இரவு பகலாக ஆலைகளை இயக்கி வருகின்றனர்.

சுவை சேர்ப்பது வெல்லம்; பெயர் பெறுவது சர்க்கரை
சர்க்கரை பொங்கல் என, பொதுவாக அனைவராலும் குறிப்பிடப்படும் இனிப்பு பொங்கல், வெல்லத்தை கலந்து செய்யப்படுவது தான்.
வெல்லத்திற்கு இனிப்பு சுவை என்பது மட்டும் சிறப்பு அல்ல. அதற்கு தனிப்பட்ட மணமும் உண்டு. வயல்வெளியில், வெல்லம் தயாரிக்க காய்ச்சப்படும் போது, அதன் மணம், சுற்றுப்பகுதியில் ஒரு கிலோ மீட்டர் துாரம் வரை பரவியிருக்கும். பொங்கலுக்கு சுவை சேர்ப்பது வெல்லம். ஆனால், அந்த பெயரை தட்டிச் செல்வதோ, சர்க்கரை. வெல்லம், சுக்கு, ஏலக்காய் சேர்த்து செய்யப்படும், சர்க்கரை பொங்கல்... இல்லை... இல்லை... வெல்ல பொங்கல்' இந்த பொங்கல் திருநாளில் ஆர்.கே.பேட்டை சுற்றுப்பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு, உள்ளூர் தயாரிப்பு வெல்லத்தால், மண் மணமும் சேர்ந்தே கிடைக்கும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை