போகியில் டயர், ரப்பர் எரிக்காதீங்க காத்திருக்கு கடும் நடவடிக்கை | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

போகியில் டயர், ரப்பர் எரிக்காதீங்க காத்திருக்கு கடும் நடவடிக்கை

Added : ஜன 12, 2018
Advertisement

விருதுநகர்:''போகி பொங்கலுக்காக பழைய மரம், வறட்டி தவிர வேறு எந்த பொருளையும் எரிக்காதீர்கள். இதை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது ,'' என, விருதுநகர் கலெக்டர் சிவஞானம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.அவரது செய்திக்குறிப்பு: பொங்கல் பண்டிகைக்கு முதல் நாள் கொண்டாடப்படும் போகிப் பண்டிகையில் கிழிந்த பாய்கள், பழைய துணிகள், தேய்ந்த துடைப்பங்கள், தேவையற்ற விவசாய கழிவுகளை தீயிட்டு கொளுத்துவார்கள். பெரும்பாலும் கிராமங்களில் கடைபிடிக்கப்படும் இப்பழக்கம் சுற்றுச் சூழலுக்கு பெரும் தீமையை ஏற்படுத்தாத ஒன்றாகும்.ஆனால் தற்போது போகி பண்டியன்று மக்கள் நெருக்கம் மிகுந்த நகரங்களில் டயர், ரப்பர், பிளாஸ்டிக் மற்றும் செயற்கைப் பொருட்களை எரிக்கும்போது நச்சுப் புகைமூட்டம் ஏற்பட்டு சுவாச நோய்கள், இருமல் மற்றும் நுரையீரல், கண், மூக்கு எரிச்சல் உட்பட பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. நச்சுக்காற்றாலும், கரிப்புகையாலும் காற்று மாசுபட்டு நகரமே கருப்பு நகரமாக மாறுகிறது.பழைய மரம், வறட்டி தவிர வேறு எதையும் எரிக்ககூடாது, இதை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கலாம் என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. போகிப் பண்டிகையன்று தடை விதிக்கப்பட்ட பொருட்களை எரிப்பதை தவிர்த்து விடுங்கள்,என,கேட்டுள்ளார்.

Advertisement