வத்திராயிருப்பில் இ.கம்யூ., மாநாடு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வத்திராயிருப்பில் இ.கம்யூ., மாநாடு

Added : ஜன 12, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

வத்திராயிருப்பு:இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 29 வது தாலுகா மாநாடு வத்திராயிருப்பில் நடந்தது. நகர செயலாளர் கோவிந்தன் தலைமை வகித்தார். மாவட்ட மகளிரணி செயலாளர் பாண்டிச்செல்வி முன்னிலை வகித்தார். கீழக்கோட்டையூர் கிளை செயலாளர் தங்கவேல் வரவேற்றார். ஒன்றியக்குழு உறுப்பினர் சுந்தர்ராஜ் கொடியேற்றினார். மாவட்ட துணை செயலாளர் அழகிரிசாமி துவக்கினார். மாவட்ட ெசயற்குழு உறுப்பினர் பழனிக்குமார் தீர்மானங்களை முன்மொழிந்தார். வத்திராயிருப்பில் நீண்டகாலமாக போக்குவரத்து நெருக்கடி கடுமையாக உள்ளது . அடிக்கடி விபத்துகளும் நடக்கின்றன. சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நிரந்தர தீர்வுகாண வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட செயலாளர் தி.ராமசாமி, முன்னாள் எம்.பி., லிங்கம் தீர்மானங்களை விளக்கி பேசினர். ஒன்றிய செயலாளர் சரவணன் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை