போலீஸ் தேர்வுக்கு இலவச பயிற்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

போலீஸ் தேர்வுக்கு இலவச பயிற்சி

Added : ஜன 12, 2018
Advertisement

விருதுநகர்:தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமத்தால் போலீஸ் பணியில் 6140 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. எழுத்துத் தேர்வு வரும் மார்ச், ஏப்ரலில் நடைபெற உள்ளது. ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி ஜன.27 . மேலும் விபரங்களை www.tnusbonline.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இத்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தன்னார்வ பயிலும் வட்டம் மூலமாக ஜன.12 ம் தேதி துவக்கப்பட உள்ளது. அதை தொடர்ந்து ஜன.15 முதல் வார நாட்களில் திங்கள் முதல் புதன் கிழமை வரை காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் தங்களது ஆன்லைன் விண்ணப்பத்துடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வந்து, தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளலாம் என, கலெக்டர் சிவஞானம் தெரிவித்துள்ளார்.

Advertisement