தங்கும் வசதியுடன் பயிற்சி விளையாட்டு வீரர்களுக்கு அழைப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தங்கும் வசதியுடன் பயிற்சி விளையாட்டு வீரர்களுக்கு அழைப்பு

Added : ஜன 12, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

விருதுநகர்:சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு அரங்கத்தில் சகல வசதிகளுடன் ஒரு ஆண்டு பயிற்சி பெற தமிழகத்தில் உள்ள 13 வயது முதல் 16 வரை உள்ள வீரர்கள், வீராங்கனைகள் விண்ணப்பிக்கலாம்.மகாத்மா காந்தி விளையாட்டு அரங்கத்தில் சிறந்த பயிற்றுனர்கள் மூலம் வீரர்கள், வீராங்கனைகளுக்கு திட்டமிட்ட பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சியில் சேர ஜனவரி 1, 2002 க்கு பின் பிறந்தவர்களாக இருக்கவேண்டும். 13 வயது பெண்கள் 171 செ.மீ., உயரம், ஆண்கள் 172 செ.மீ., 14 வயது உள்ள பெண்கள் 175 செ.மீ., ஆண்கள் 174 செ.மீ., 15 வயது உள்ள பெண்கள் 178 செ.மீ., ஆண்கள் 181 செ.மீ., 16 வயது உள்ள பெண்கள் 180 செ.மீ., ஆண்கள் 186 செ.மீ., இருக்க வேண்டும். தனிநபர் விளையாட்டு, அணி விளையாட்டு என பங்கு பெற்று குறிப்பிட்ட இடங்களில் வெற்றி பெற்றிருக்கவேண்டும்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் விளையாட்டு செய்திகள், பிறந்த தேதி சான்றிதழ்கள், மருத்துவ சான்றிதழ் (ஒரிஜினல்), ரேஷன் கார்டு மற்றும் ஆதார் கார்டு நகல், பத்து பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்கள், நன்னடத்தை சான்றிதழ் இணைத்து இந்திய விளையாட்டு ஆணையம், பயிற்சி மையம், காந்தி ஸ்டேடியம், சேலம் 636 007 என்ற முகவரிக்கு அனுப்பலாம். மேலும் தகவல் பெற 0427 241 9789 என்ற தொலைபேசியில் பேசலாம். தகுதியுடையவர்கள் மட்டும் தகுதிதேர்வுக்கு அழைக்கப்படுவர். தங்கும் வசதியுடன் கூடிய பயிற்சி, தங்கும் வசதியில்லாத பயிற்சி என இரு பிரிவுகள் உள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X