How safe is Delhi? Here's the Delhi Police annual report card | பெண்களுக்கு பாதுகாப்பான நகரமா டில்லி? : என்ன சொல்கிறது டில்லி போலீஸ்| Dinamalar

பெண்களுக்கு பாதுகாப்பான நகரமா டில்லி? : என்ன சொல்கிறது டில்லி போலீஸ்

Added : ஜன 12, 2018 | கருத்துகள் (6)
Advertisement

புதுடில்லி : 2017ம் ஆண்டில், நாள் ஒன்றுக்கு 5 பெண்கள் மீதான பாலியல் வன்முறை குறித்த வழக்குகள் டில்லி போலீசாரால் பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம், தலைநகர் டில்லியில், பெண்களுக்கான பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது.

மக்களுக்கு பாதுகாப்பான நகரம் டில்லியா? என்பதனடிப்படையில் நடத்தப்பட்ட ஆய்வு தொடர்பாக, டில்லி போலிசாரிடம் இருந்து திரட்டிய தகவல்கள் பேரதிர்ச்சியை அளித்துள்ளன.


நாளொன்றிற்கு 5 வழக்குகள் :


கடந்த ஆண்டில், பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை தொடர்பாக நாளொன்றிற்கு 5 வழக்குகள் பதிவாகியுள்ளன.


அதிர்ச்சியோ அதிர்ச்சி :


பெண்களுக்கு ஏற்படும் பாலியல் வன்கொடுமை விவகாரங்களில் 96.63 சதவீதம் தெரிந்தவர்களாலேயே பெண்ணிற்கு பாதிப்பு ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் சதவீதம் பின்வருமாறு...

38.99 சதவீதம் - நண்பர்கள் மற்றும் குடும்ப உறவுகள்

19.08 சதவீதம் - அண்டை வீட்டுக்காரர்கள்

14.20 சதவீதம் : உறவுமுறையினர் மற்றும்

3.86 சதவீதம் - முதலாளிகள் மற்றும் சக ஊழியர்களால், பெண்கள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


சற்று ஆறுதல் :


இதில் சற்று ஆறுதலான விசயம் என்னவென்றால், 2016ஐ ஒப்பிடும்போது, 2017 ம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் சற்று குறைவு என்பதே ஆகும்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raju - jersi,யூ.எஸ்.ஏ
12-ஜன-201822:49:30 IST Report Abuse
Raju ஆண்களுக்கே பாதுகாப்பு இல்லாத நரகம் sorry நகரம் என்பது உலகம் அறிந்த விசயம்
Rate this:
Share this comment
Cancel
JeevaKiran - COONOOR,இந்தியா
12-ஜன-201815:20:01 IST Report Abuse
JeevaKiran இதில் முக்கியமாக அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், டெல்லி போலீசார் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அதனால் தான் டெல்லி முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் பொறுப்பேற்ற போது டெல்லி போலீசாரை மாநில அரசின் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவர முயற்சி செய்தார். ஆனால் மத்திய அரசு (மோடி அரசு) தரவில்லை.
Rate this:
Share this comment
Cancel
thiru - Chennai,இந்தியா
12-ஜன-201812:24:14 IST Report Abuse
thiru , 2016ஐ ஒப்பிடும்போது, 2017 ம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் சற்று குறைவு என்பதே ஆகும்" இது ஆறுதல் அல்ல பெண் பெரியவளான உடன் மக்கள் குடும்பத்துடனோ அல்லது அவளை மட்டும் தென்னிந்தியாவில் படிக்க அல்லது வேலைக்கு அனுப்பி விடுகின்றனர்... அங்கிருக்கும் போதே திருமணம் பேசி முடித்து டில்லியில் இல்லாத மாதிரி பாத்து கொள்கிறார்கள்.. இளம் பெண்கள் ஊரை காலி செய்வதால் இன்னும் ஒரு ஐந்து அல்லது பத்து வருடங்களிள் குற்றம் மிகவும் குறைந்து விடும்...
Rate this:
Share this comment
Cancel
venkat - Puducherry,இந்தியா
12-ஜன-201811:51:14 IST Report Abuse
venkat மனோதத்துவ ரீதியான பாலியல் கல்வியும் விழிப் புணர்வும் மேலதிகமாக பெண் வன்கொடுமைக்கு கடும் தண்டனையும் அவசியம். வன்கொடுமைக்கு சாட்சியம் கோருவது நம் நாட்டி ன் இழி நிலை. தலை நகர் டெல்லியில் குற்றங்கள் அதிகம் என்பது மிக வெட்கக்கேடு,இந்தியாவின் அவமானம்.
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
12-ஜன-201811:30:06 IST Report Abuse
Pasupathi Subbian இரவு தாமதமாக, தனியாக திரும்பும் பெண்களிடம் அறிமுகமில்லாதவர்களால் பாலியல் வன்முறை செய்யப்படுவது குறைந்திருக்கிறது. அறிந்தவர் , தெரிந்தவர் நடத்தும் வன்முறைகள் , அத்துமீறல்களை தடைசெய்வது கடினம்.
Rate this:
Share this comment
Cancel
ushadevan -  ( Posted via: Dinamalar Android App )
12-ஜன-201809:08:46 IST Report Abuse
ushadevan பாதுகாப்பு இன்னும் அதிகரிக்கப்பட வேண்டும். தண்டனை தீவரமக்கப் பட வேண்டும் வழக்குகள் இழுத்தடிக்கப் படாமல்.தற்காப்புகலையும் தைரியமும் வேண்டும்.படித்தவர்களை விட குடித்தவர்களால் பாதிப்பு அதிகம் ஏற்படுகிறது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை