ஆதார் இணையதளத்தில் பாதுகாப்பு குறைபாடு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

ஆதார் இணையதளத்தில் பாதுகாப்பு குறைபாடு

Added : ஜன 12, 2018 | கருத்துகள் (20)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
ஆதார், Aadhaar,ஆஸ்திரேலியா, Australia, இணையதள பாதுகாப்பு , Internet Security, டிராய் ஹன்ட்,Troy Hunt, ஆதார் தகவல்கள்,  Aadhaar Information,இணையதளம்,Website, இந்தியா, India,

புதுடில்லி : ஆதார் இணையதளத்தில் அடிப்படை பாதுகாப்பில் குறைபாடுகள் உள்ளதாக ஆஸ்திரேலியாவின் தகவல் பாதுகாப்பு அமைப்பான "டிராய் ஹன்ட்" எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக டிராய் ஹன்ட் தனது வலைபக்கத்தில் வெளியிட்டுள்ள தகவலில், இந்தியாவின் ஆதார் முறை உண்மையில் பாதுகாப்பு நிறைந்ததாக இல்லை. யார் வேண்டுமானாலும் அதில் உள்ள தகவல்களை இயக்கும் வகையிலேயே அதன் பாதுகாப்பு உள்ளது. நாங்கள் இந்தியாவின் ஆதார் கொள்கைக்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால், அதன் பாதுகாப்பில் குறைபாடு உள்ளதை சுட்டிக்காட்ட வேண்டிய தேவையும், மாற்றி அமைக்கப்பட வேண்டிய கட்டாயமும் உள்ளது என தெரிவித்துள்ளது.
மேலும், ஹேக்கர்கள் இத்தகைய குறைப்பாட்டை தங்களுக்கு சாதகமாக எடுத்துக் கொள்ள வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் ஆதார் இணையதள சர்வரில் உள்ள தகவல்களை திருடி, அவற்றை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளவும் வாய்ப்பு உள்ளது. ஆதார் இணையதள தகவல்களை பாதுகாக்க இந்திய அரசு சரியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளது.ஆதார் வெப்சைட்டில் குறைபாடு

Advertisement
வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
12-ஜன-201822:16:51 IST Report Abuse
Pugazh V குழப்பாச்சாரிகளின் அரசு. ஆதாருக்கு பதிலாக16 இலக்க தற்காலிக நம்பர் தருவாங்களாம். பேங்க்கில் அதை குடுத்தா போதுமாம். குடுத்துட்டு மறுநாளே வேற நம்பர் வாங்கிகிட்டா. பேங்க் என்ன செய்யும்?
Rate this:
Share this comment
Cancel
gmk1959 - chennai,இந்தியா
12-ஜன-201820:36:33 IST Report Abuse
gmk1959 இது செய்தி உள்நோக்கம் கொன்டது.. ஆஸ்திரேலியா என்றாலே அல்லேலூயா உன்மையிலே இந்தியா மீது பாசம் இருந்தால் அரசிடம் இரகசியமாக பகிர்ந்து கொன்டு இருக்க வேனடும் யாருக்கோ ரகசியமாக வால் பிடிக்கும் வேலை
Rate this:
Share this comment
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
12-ஜன-201823:27:22 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்அதானே.. அவன் எப்படி சொல்லலாம்....
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
13-ஜன-201802:28:49 IST Report Abuse
தமிழ்வேல் இதில் என்ன ரகசியம் இருக்கின்றது ? இது எல்லோருக்குமே 6 மாதங்களுக்கு முன்பே தெரியும். இதுகாறும் எவ்வளவோ விபரங்கள் திருடப் பட்டிருக்கும். இதனால் விரைவில் மத்திய அரசு ஆதாருக்கு டபுள் நம்பர் சிஸ்டம் கொண்டுவர போகுதாம். முக்கியமற்றவர்களுக்கு (டெலிபோன், வங்கி, கக்கூசு .....) இரண்டாவது நம்பரை தந்தால் போதுமானது....
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
12-ஜன-201819:34:09 IST Report Abuse
தமிழ்வேல் டெலிபோன் ஆப்ரேட்டர்ஸ், வங்கிகள்...... இவர்கள் கையில் இவைகளைக் கொடுத்தது தவறு ..
Rate this:
Share this comment
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
12-ஜன-201823:33:32 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்நீங்கள் இரண்டாம் கட்ட திருடர்களை சொல்கிறீர்கள். ஆனால் முதல் கட்ட முட்டாள்களை மறந்து விட்டீர்கள். ஆதார் விவரங்கள் வாங்க, திருந்த வைத்திருக்கும் லட்சக்கணக்கான மையங்கள் தனியார் வசம் ஒப்பந்த ஊழியர்களால் நடத்தப்படுகிறது. மிக மிக பலவீனமான பாதுகாப்பு. ரூ 500 க்கு அனைத்து விவரங்களும், கைரேகை, கருவிழி படம் உள்பட பதிவிறக்கம், மற்றும் பிரிண்டும் செய்யமுடியுமென்று காட்டினார் ஒரு பெண் பத்திரிக்கையாளர். வசதியாக அந்த செய்திகளை எல்லாம் நல்ல பத்திரிக்கையில் இருட்டடிப்பு செய்து விட்டார்கள்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X