ஜெயலலிதா மரணம்: ஆவணங்களை தாக்கல் செய்தது அப்பல்லோ - Jayalalitha | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஜெ., மரணம்: ஆவணங்களை தாக்கல் செய்தது அப்பல்லோ

Updated : ஜன 13, 2018 | Added : ஜன 12, 2018 | கருத்துகள் (16)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
ஜெயலலிதா மரணம்,Jayalalithaa death, ஆறுமுகசாமி விசாரணை கமிஷன்,  Arumugamasi inquiry commission,  அப்பல்லோ மருத்துவமனை, Apollo Hospital, இதய சிகிச்சை டாக்டர் சுவாமிநாதன், Cardiovascular treatment Dr. Swaminathan, வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன்,Advocate Raja Senthur Pandian,  அப்பல்லோ,Apollo,விசாரணை கமிஷன், Investigation Commission,

சென்னை: ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து அப்பல்லோ மருத்துவமனை சார்பில் இரண்டு சூட்கேஸ்களில் ஆவணங்கள் விசாரணை தாக்கல் செய்யப்பட்டது.


ஆவணங்கள் தாக்கல்

ஜெ.,க்கு அளித்த சிகிச்சைகள் குறித்த, அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய, சென்னை, அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்திற்கு, நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவிட்டு இருந்தது. இதைதொடர்ந்து, இரண்டு சூட்கேஸ்களில், சிகிச்சை தொடர்பான அனைத்து ஆவணங்களையும், அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம், கமிஷனில், நேற்று சமர்ப்பித்தது. இது தொடர்பாக, சென்னை, அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்ட செய்தி குறிப்பு: கடந்த, 2016, செப்., 22ம் தேதி, மருத்துவமனையில், ஜெ., அனுமதிக்கப்பட்டதில் இருந்து, டிச., 5ம் தேதி வரையிலான, அனைத்து அசல் மற்றும் நகல் மருத்துவ ஆவணங்களை, 30 தொகுப்புகளாக தாக்கல் செய்துள்ளோம். மேலும், இது தொடர்பான பிரமாண பத்திரத்தையும் தாக்கல் செய்துள்ளோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஆவணங்கள் தாக்கல்


இழுத்தடிக்க சசி தரப்பு சதி!

மறைந்த தமிழக முதல்வர், ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையை, இழுத்தடிக்கும் முயற்சியில், சசிகலா தரப்பு ஈடுபட்டுள்ளதாக, கமிஷன் வட்டாரங்கள் புகார் கூறியுள்ளன.ஜெ., மரணம் குறித்து விசாரித்து வரும், ஓய்வுபெற்ற நீதிபதி, ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை கமிஷன், சசிகலா தரப்பு விளக்கத்தை கேட்டு, 2017 டிச., 21ல், பெங்களூரு சிறைக்கு, 'சம்மன்' அனுப்பி இருந்தது. இதையடுத்து, சசிகலா தரப்பு வழக்கறிஞர், ராஜா செந்துார்பாண்டியன், சசிகலா மீது புகார் அளித்தவர்கள் பட்டியலை தருமாறும், பட்டியல் கிடைத்த, 15 நாட்களில் ஆஜராகி அறிக்கை சமர்ப்பிப்பதாகவும், கமிஷனில், ஜன., 5ல், மனு தாக்கல் செய்திருந்தார்.

இம்மனு மீதான விசாரணைக்கு, கமிஷனில், ராஜா செந்துார்பாண்டியன் ஆஜரானார். அதன்பின், அவர் கூறியதாவது: விசாரணை கமிஷன், சசிகலாவிற்கு, 'சம்மன்' அனுப்பி இருந்தது. விசாரணைக்கு, நாங்கள் ஒத்துழைக்க தயார் என்றும், சசிகலா மீது புகார் கூறியவர்கள் குறித்த தகவல்களை அளிக்க கோரியும், மனு தாக்கல் செய்திருந்தோம். இந்நிலையில், நாங்கள் மனு அளித்த பின்னும், பலரிடம் விசாரணை நடந்து வருகிறது. எனவே, அனைவரிடமும் முழுமையாக விசாரணை முடிந்த பின், இயற்கை நீதி அடிப்படையில், அவர்களிடம், நாங்கள் குறுக்கு விசாரணை நடத்துவதற்கு, மற்றொரு புதிய மனுவையும் தாக்கல் செய்துள்ளோம்.

அதனால், சசிகலா மீது புகார் அளித்தவர்கள் யார்; என்ன புகார் கூறினர் போன்ற தகவல்கள் கிடைத்த, 16வது நாள், கால அவகாசமின்றியும், தாமதமின்றியும், கமிஷன் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிப்போம். மேலும், இந்த மனு மீதான வாதம், ஜன., 22ம் தேதி நடைபெற உள்ளது. இந்த விவகாரத்தில், தமிழக அரசு மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. ஆனால், சட்டத்தின் மீதும், கமிஷன் மீதும், எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.சசிகலா தரப்பு, முதலில் மனு தாக்கல் செய்தபோதே, அனைத்து தகவல்களையும் தர, கமிஷன் தயராக இருந்தது. ஆனால், சசிகலா, தங்களிடம் உள்ள ஆவணங்கள் எதையும், இதுவரை தாக்கல் செய்யவில்லை. ஆனால், மற்றவர்களிடம் விசாரணை முழுமையாக முடிந்த பின், விசாரணைக்கு ஒத்துழைப்பதாக, மனு தாக்கல் செய்துள்ளனர். இதனால், விசாரணையை இழுத்தடிக்கும் முயற்சியில், சசிகலா தரப்பு ஈடுபட்டுள்ளதாக, கமிஷன் வட்டாரங்கள் கூறுகின்றன.
டாக்டர் ஆஜர்

இந்நிலையில், ஜெயலலிதாவுக்கு இதய சிகிச்சை அளித்த டாக்டர் சுவாமிநாதன், விசாரணை கமிஷன் உத்தரவுப்படி, நீதிபதி ஆறுமுகசாமி முன்பு ஆஜராகி விளக்கமளித்தார். பின்னர் 'மறைந்த தமிழக முதல்வர், ஜெயலலிதா, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த போது, அவரை நான் பார்க்கவில்லை; அவருக்கு, சிகிச்சை அளிக்கவில்லை' என, ஜெ.,க்கு சிகிச்சை அளிப்பதை கண்காணிக்கும் குழுவில் இருந்த, அரசு டாக்டர் சுவாமிநாதன் கூறியுள்ளார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Amma_Priyan - Bangalore,இந்தியா
13-ஜன-201804:55:30 IST Report Abuse
Amma_Priyan பென் ட்ரைவில் கொடுக்க உத்தரவு போடவும்.
Rate this:
Share this comment
Cancel
12-ஜன-201818:34:54 IST Report Abuse
அப்பு இட்லி சாப்பிட்டதுக்கான பில் ஒரிஜினல் இருக்கான்னு பாருங்க எசமான்.
Rate this:
Share this comment
Cancel
anbu - Coimbatore,இந்தியா
12-ஜன-201817:57:01 IST Report Abuse
anbu இதுவரை விசாரணை நடத்தி இருக்கும் ஐயா இனி நீங்கள் பத்திரங்கள் களவு போகாமலும் பிரதி எடுக்காமலும் பத்திரமாக பாதுகாக்கவும் இல்லை என்றால் கருப்பு ஆடுகள் உங்களையும் பதம் பார்க்கும்......
Rate this:
Share this comment
Cancel
kundalakesi - VANCOUVER,கனடா
12-ஜன-201817:48:27 IST Report Abuse
kundalakesi இதெல்லாம் மரண துப்பு துலக்குவதை விட, ஆணிக் கட்டை போட்ட கொலைகார கும்பலை பிடிக்க உதவினால் சரி. ஹ்ம்ம், அது எங்கே.
Rate this:
Share this comment
Cancel
Muthuselvakumar Palani - CHENNAI,இந்தியா
12-ஜன-201815:35:31 IST Report Abuse
Muthuselvakumar Palani விசாரணை விரைவாகட்டும் ... .உண்மை மர்மம் இல்லாமல் வெளியாகட்டும் ...........எவரேனும் தப்பு செய்து இருந்தால் ..பாரபச்சமின்றி தண்டனை கிடைக்கவேண்டும் .
Rate this:
Share this comment
Cancel
Sangeedamo - Karaikal,இந்தியா
12-ஜன-201815:27:56 IST Report Abuse
Sangeedamo தெய்வமே போன பின்னே ஆரத்தி எதற்கு, அபிஷேகம் தான் எதற்கு? சும்மா கெடந்த சங்கெல்லாம் இப்போ ஊத கெளம்பிடுச்சிங்க அம்மா இருந்திருந்தால், நம் தமிழ்நாடு கொடுத்துவைக்கவில்லை அவ்வளவுதான்
Rate this:
Share this comment
skv - Bangalore,இந்தியா
13-ஜன-201803:38:01 IST Report Abuse
skv<srinivasankrishnaveni>அகம்பாவம் கோவம் ஆத்திரம் கர்வம் சுயகௌரவம் (100 %)பிடிவாதம் என்று பல வேண்டாத குணம்களும் உண்டு , IAVARUKKU எவரையும் எளிதில் நம்பவே மாட்டார் என்பது ஸ்பெஷல் தகுதி (ஆனால் இந்த ஜென்மத்து சனியை) சசிகலாவை எப்படித்தான் நம்பினாங்க என்று தான் மர்மமாயிருக்கு நம்பிக்கை துரோகி சசிகலா இளவரசியை அவ பெற்ற வாரிசுகள் எல்லாம் , சசியின் மொத்த கொள்ளையர்க்கூட்டமுமே தான் ஜெயாவின் மரணத்துக்கு மெயின் ஸ்விச் நடராசன் ஆரம்பம் முதலே போயஸ் தோட்டத்தைக்கவரா வே பலவழிகளிலும் பிளான் போட்டுட்டான் , அது தெரிஞ்சு ஜெயா முதல் கல்தா அவனுக்கும் தினகரன் பிராடுகளை புடிஞ்சுந்ந்து அவனை போயஸ் பக்கமே வரவிடவே இல்லீங்களே அந்தம்மா அப்போலோ அட்மிட் ஆனதும் தான் கள்ளர் கூட்டத்தையே கொண்டாந்துட்டா சதிகளா...
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
12-ஜன-201815:25:45 IST Report Abuse
தமிழ்வேல் ரெண்டு பொட்டியா....
Rate this:
Share this comment
Cancel
12-ஜன-201813:49:18 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் சிகிச்சை முடிந்து போகும்போதே /மரணமடைந்து உடலை தரும்போதே டிஸ்சார்ஜ் சான்றிதழ் கொடுத்துவிடுவார்கள். இத்தனை நாட்கள் எடுத்துக்கொண்டு இரண்டு பெட்டிகளில் ஆவணங்கள் கொடுத்திருக்கிறார்கள் என்றால் இது கண்டிப்பாக ஏமாற்று வேலை , இதை படிப்பவர்களை குழப்புவதற்கு உருவாக்கப்பட்ட ஆவணங்கள்.
Rate this:
Share this comment
Sanny - sydney,ஆஸ்திரேலியா
12-ஜன-201814:37:03 IST Report Abuse
Sanny பெட்டியில் ஆவணங்களா அல்லது டயமண்ட்ஸ் இருந்ததா?...
Rate this:
Share this comment
Cancel
Rpalnivelu - Bangalorw,இந்தியா
12-ஜன-201813:23:04 IST Report Abuse
Rpalnivelu பொய்யிலே பிறந்து, பொய்யிலே வாழும் அய்யய்யோ ஆஸ்பத்திரியே ரெட்டியே உண்மையை கக்கு, வேதனையை உதறு
Rate this:
Share this comment
Cancel
kowsik Rishi - Chennai,இந்தியா
12-ஜன-201813:01:03 IST Report Abuse
kowsik Rishi ஐயா ஆறுமுகசாமி அவர்களே எங்கள் தங்கம் செல்வி ஜெ ஜெ வின் மரணம் - அரசியல் ஆக்கப்படுகிறது - நீங்களே சொல்லுங்கள் எங்கள் தங்கம் செல்வி ஜெ ஜெ மக்கள் தலைவி - அமோக ஆதரவில் மக்கள் நேசித்த தலைவி அவர் தொடர் ஆட்சி என்று வந்த பிறகு வாழ்ந்து ஆட்சி செய்யவேண்டிய அவர் ஏன் சார் இப்படி விடை பெற்றார் செல்வி ஜெ ஜெ வை பலமுறை பார்த்தவன் நான் - அவர் ஆளுமை கெம்பீரம் ஆட்சி நிர்வாகம் ஆற்றல் உடல் நலம் - நடை பேச்சு எதுவுமே குறை இல்லை அப்படிப்பட்டவர் தீடிரென்று தொடர் ஆட்சி என்று வந்தபிறகு ஏன் சார் இப்படி ????? - இது தான் கேள்வி மு கருணாநிதி, சுப்பிரமணியம் ஸ்வாமி, அப்பாவு, பி எச் பாண்டியன் என்று பட்டியல் நீளும் செல்வி ஜெ ஜெ ஒரு ருபாய் சொத்து வழக்கில் சிக்கவைத்து வாய்தா ராணி, ஊழல் வாதி - ஆட்சி செய்யவிடமாட்டோம் என்று அவரை அரசியல் வன்கொடுமை செய்து அலைக்கழித்தார்கள் தொடர் ஆட்சி என்று வந்தபிறகும் - அவர் வாழ்ந்தால் - குமாரசாமி விடுவித்த பிறகும் மேல்முறையீடு என்று போய் அவரை தற்போது சிறையில் தான் வைத்து இந்த அரசியல் வன்கொடுமை காரர்கள் மகிழ்ந்திருப்பார்கள் செல்வி ஜெ ஜெ விற்கு அது அரசியல் சூன்யம் - அதற்க்கு பிறகு அவர் அரசியல் தலைவி மக்கள் நேசித்த தலைவி என்ற முறையில் வாழ்ந்து ஒரு பயனும் இல்லை என்று சிறைக்கு சென்றால் பிறகு அவர் மீண்டும் முதல்வர் ஆகமுடியாது அரசு மரியாதை எம்.ஜி.ஆர் சமாதியில் ஒண்டக்கூட முடியாத ஒரு மரணம் என்று எல்லாம் எங்கள் தலைவி நினைத்து நினைத்து பார்த்து தான் இந்த முடிவில் விடை பெற்றுக்கொண்டார் தொடர் ஆட்சி என்று வாழந்து தனி பெரும் அரசு மரியாதை தனி பெரும் சமாதி நினைவிடம் என்று சீரோடு போக வேண்டியா எங்கள் தலைவி செல்வி ஜெ ஜெ இன்று இப்படி அவசரமாக தன்னிச்சையாக போய் எம்.ஜி.ஆர். சமாதியில் ஒண்டிக்கொண்டார் ஐயா ஆறுமுக சாமீ அவர்களே எங்கள் தங்கம் செல்வி ஜெ ஜெ வை இன்னும் ஏன் சார் இந்த வன்கொடுமை - சசிகலா ஓ வேறே யாரும் இதில் காரணம் இல்லை ஒரு ருபாய் சொத்து வழக்கு தான் காரணம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை