மைத்துனருக்காக மரியாதையில்லாத பேச்சு: எஸ்.ஐ.,யை மிரட்டிய ஐகோர்ட் அரசு வக்கீல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மைத்துனருக்காக மரியாதையில்லாத பேச்சு: எஸ்.ஐ.,யை மிரட்டிய ஐகோர்ட் அரசு வக்கீல்

Added : ஜன 12, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருநெல்வேலி: தனது மைத்துனர் மீது விசாரணை நடத்தக்கூடாது என சப் இன்ஸ்பெக்டரை ஐகோர்ட் அரசு வக்கீல் மிரட்டும் ஆடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலை அடுத்துள்ள சின்னக்கோவிலான்குளம் போலீஸ் ஸ்டேஷனில் சப் இன்ஸ்பெக்டராக இருப்பவர் கற்பகராஜா. அதே ஊரைச்சேர்ந்த வெள்ளப்பாண்டியன் மகன் சந்திரன் 35, என்பவர் அதே ஊரைச்சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரை தாக்கிய சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.சந்திரனின் மைத்துனரான பாலசுப்பிரமணியன் என்பவர் சென்னையில் ஐகோர்ட்டில் அரசு வக்கீலாக பணியாற்றுகிறார். அவர், சப் இன்ஸ்பெக்டர் கற்பகராஜாவுக்கு அலைபேசியில் போன்செய்து,ஒருமையில் பேசியுள்ளார். எனது மைத்துனர் சந்திரன் வெட்டுவான், குத்துவான், ஐகோர்ட் வக்கீல் நான் சொல்றேன்என மிரட்டியுள்ளார்.
அந்த வழக்கை தொடர்ந்தால், உன் வேலைக்கு உலை வைத்துக்கொண்டதாக அர்த்தம் எனவும் மிரட்டியுள்ளார். இந்த ஆடியோ தற்போது நெல்லை மாவட்ட போலீசாரிடையே பரபரப்பாக பகிரப்பட்டுவருகிறது.
இந்த மிரட்டல் குறித்து மாவட்ட எஸ்.பி.,அருண்சக்திகுமாரிடம் கேட்டபோது, இதுகுறித்து சப் இன்ஸ்பெக்டர் என்னிடம் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் அரசு வக்கீல் மீது மிரட்டியது உள்ளிட்ட சம்பவங்களுக்காக நடவடிக்கை எடுப்போம் என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
12-ஜன-201817:33:00 IST Report Abuse
தமிழ்வேல் அந்த ரெண்டு மச்சியையும் புடிச்சி உள்ளே போட முடியாதா ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை