சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் புகார்: எதிர்க்கட்சிகள் அச்சம்| Dinamalar

சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் புகார்: எதிர்க்கட்சிகள் அச்சம்

Updated : ஜன 12, 2018 | Added : ஜன 12, 2018 | கருத்துகள் (53)
Advertisement
 சுப்ரீம் கோர்ட், Supreme Court,ஜனநாயகம்,democracy, ராகுல்,Rahul,
 முன்னாள் சட்ட அமைச்சர் அஸ்வினி குமார் , Former Law Minister Ashwani Kumar,முன்னாள் சட்ட அமைச்சர் பரத்வாஜ்,former Law Minister Bharadwaj, மேற்கு வங்க முதல்வர் மம்தா,West Bengal Chief Minister Mamata, சீதாராம் யெச்சூரி,Sitaram Yechury,  டி.ராஜா,T Raja, நீதிபதி கங்குலி,Justice Ganguly, நீதிபதி புகார், Judge Complaint, எதிர்க்கட்சிகள், Opposition,காங்கிரஸ், Congress,கம்யூனிஸ்ட், Communist,

புதுடில்லி: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிகள் பேட்டியளித்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன.


ஆலோசனை

காங்கிரஸ் கட்சியின் டுவிட்டர் பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது: சுப்ரீம் கோர்ட் செயல்பாடு குறித்து 4 நீதிபதிகள் தெரிவித்த கருத்துகள் எங்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே, நீதிபதிகள் பேட்டி குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் ராகுல் ஆலோசனை நடத்தினார்.

முன்னாள் சட்ட அமைச்சர் அஸ்வினி குமார் கூறியதாவது: கோர்ட்டில் நடப்பதை பொது வெளியில் கொண்டு வர வேண்டிய சூழ்நிலைக்கு நீதிபதிகள் தள்ளப்பட்டனர்.
இது இந்திய வரலாற்றில் கறுப்பு நாள். நீதிபதிகள் எழுப்பிய பிரச்னை குறித்து தேசம் விவாதிக்க வேண்டிய நேரம் இது. தலைமை நீதிபதியும், சம்பந்தப்பட்ட நீதிபதியும் இது குறித்து ஆலோசனை நடத்தி பிரச்னைக்கு தீர்வு காண்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

முன்னாள் சட்ட அமைச்சர் பரத்வாஜ் கூறுகையில், சுப்ரீம் கோர்ட்டின் பெருமைக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டால் என்ன இருக்கும். ஜனநாயகத்தின் தூணாக கோர்ட் இருக்க வேண்டும். அது எவ்வாறு இயங்கிறது என்பதை கவனிக்க வேண்டியது சட்ட அமைச்சரின் பொறுப்பு.
மேற்கு வங்க முதல்வர் மம்தா கூறுகையில், நான்கு நீதிபதிகளின் கருத்து எங்களுக்கும், நாட்டு மக்களுக்கும் கவலையை ஏற்படுத்தியுள்ளதாக கூறினார்.

கம்யூனிஸ்ட் கட்சி தேசிய செயலர் சீதாராம் யெச்சூரி கூறியதாவது: சுப்ரீம் கோர்ட்டின் தனித்தன்மை மற்றும் நேர்மை ஆகியவை எப்படி பாதிக்கப்பட்டது என்பது குறித்து விரிவாக விசாரிக்கப்பட வேண்டும். ஜனநாயகத்தின் மூன்று தூண்களில் எந்த பிரச்னை எழுந்தாலும் அவை சரி செய்யப்பட வேண்டும்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர் டி.ராஜா கூறியதாவது: நீதிபதி செல்லமேஸ்வரரை நீண்ட நாட்களாக தெரியும். அவரும் மற்ற நீதிபதிகளும் மிகப்பெரிய நடவடிக்கை எடுத்த போது, அவரை சந்திக்க வேண்டும் என நினைத்தேன். இதற்கு அரசியல் சாயம் பூச வேண்டாம். நாடு மற்றும் ஜனநாயக நலன் குறித்து அனைவருக்கும் கவலை உள்ளது.

முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி கங்குலி கூறுகையில், பிரச்னை குறித்து கேள்விப்பப்பட்டதும் கவலையடைந்தேன். இது நடந்திருக்கக்கூடாது. ஆனால், நீதிபதிகளுக்கு வலிமையான காரணங்கள் உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (53)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
13-ஜன-201809:49:20 IST Report Abuse
Sampath Kumar எதிர் காட்சிகள் அச்சமா ?? உங்க தலைப்பு சரி இல்லை . ஆளும் கட்சி தான் அச்சத்தில் உள்ளது உண்மை இது தான் இதை போட மனம் இல்லை வழக்கம் போல உண்மைன் ஓரை கல் பனியில் உறைந்து போச்சா ????
Rate this:
Share this comment
Cancel
13-ஜன-201807:43:13 IST Report Abuse
ThanuSrinivasan ஐயா, உச்ச நீதி மன்றத்தின் மூத்த நீதிபதிகளான சலமேஸ்வர், ரஞ்சன் கோகாய், ஜோஸப் குரியன், மதன் லோகுர் ஆகியோர் ஊடகங்களிடம் சென்று தலைமை நீதிபதி அவர்களை பற்றிய புகார்களை கூறி தாங்கள் நீதிபதியாக இருக்க தகுதி அற்றவர்கள் என்பதை நிரூபித்துள்ளனர். தாங்கள் எழுதிய கடிதத்திற்கு நான்கு மாதங்களாக தலைமை நீதிபதி பதில் அளிக்காததால் பத்திரிக்கையாளர்களை சந்தித்ததாக கூறுகின்றனர். இவர்களுக்கு அவர் மீது அபிப்ராயம் பேதங்கள் இருந்தால் ஜனாதிபதி, ப்ரதமர் அல்லது சட்ட துறை அமைச்சர் ஆகியோரிடம் அல்லவா கூறியிருக்க வேண்டும். இவர்களின் ஒரு குற்றச்சாட்டு, வழக்குகளை ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சம் காட்டுகிறார் என்பதாகும். உனக்கு எந்த வழக்கை அவர் ஒதுக்கினால் என்ன: ஒதுக்கீடு செய்த வழக்கை நீ நடத்த வேண்டியதுதானே. லட்ச கணக்கில் லஞ்சம் கொட்டும் வழக்குகள் எதனையும் இவர்களுக்கு ஒதுக்க வில்லை என்பதே இவர்களின் குற்ற பாட்டிற்கு காரணம். இல்லாவிட்டால் வழக்குகள் ஒதுக்கீடு குறித்து பேச வேண்டிய அவசியம் என்ன? ரகசிய காப்பு ப்ரமாணத்திற்கு எதிராக நடந்து கொண்ட இவர்கள் நால்வரையும் ஜனாதிபதி டிஸ்மிஸ் செய்ய வேண்டும். இவர்கள் ஏற்கனவே வலது கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் ராஜாவை சந்தித்துள்ளார். இவர்கள் சதியின் நோக்கம் நமக்கு புரிகிறது.
Rate this:
Share this comment
Cancel
Hari Krishnan - Coimbatore,இந்தியா
13-ஜன-201805:00:58 IST Report Abuse
Hari Krishnan நீதிமன்றத்தை சீர்குலைக்கும் வகையில் ஏதாவது நடக்கிறதா என்று சந்தேகம் எழுப்பியுள்ளது ரிபப்ளிக் டிவி... 1984 சீக்கிய படுகொலை பற்றி விசாரணைக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா உத்தரவிட்ட பிறகு தான் இந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடந்தது... உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி திரு தீபக் மிஸ்ரா 1, 1984 சீக்கியர் மரணங்களை திரும்ப விசாரிக்க உத்தரவிட்டுள்ளார், 2, ராம் ஜென்ம பூமி வழக்கை கையாளுகிறார். 3, நரேந்திர மோடி அரசால் நேரடியாக நியமிக்கப்பட்டவர். இரண்டுவாரங்களுக்கு முன்னால் இந்த நாலு நீதிபதிகளையும் கம்யூனிஸ்ட் டி. ராஜா சந்திக்க அவசியம் என்ன ? எதற்காக கம்யூனிஸ்ட் டி. ராஜாவை பேட்டியளிக்கும் முன்பு நீதிபதிகளை சந்தித்க வேண்டும். நிகழ்ச்சிக்கு முன்பு எதற்காக கம்யூனிஸ்ட் டி ராஜவை நீதிபதி சந்தித்து பேச வேண்டும் என்று அர்னாப் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் டி. ராஜா வெளியே சென்று விட்டது ஏன்? ராபர்ட் வதேரா வழக்கு வழக்கறிஞர் துளசி எதற்காக இந்த நீதிபதிகள் செய்தியாளர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று பற்பல சந்தேகங்களை ரிபப்ளிக் டிவி கேட்டு வருகிறது... கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி நாக்பூரில் சக நீதிபதி வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு சென்ற லோயா அறையில் மர்மான முறையில் இறந்து கிடந்தார். அவரது சாவில் மர்மம் இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் நீதிபதி லோயா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. தலைமை நீதிபதி தீபக்மிஸ்ரா, ஏ.எம்.கன்வீல்கர், சந்திரசூட் ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச் மனுக்களை விசாரணைக்கு ஏற்றுக்கொள்வதாக அறிவித்தது. // தீபக் மிஸ்ரா ஏற்றவுடன் அடுத்த நாளே அவர் மீது குற்றச்சாட்டா ? இப்போ புரியுதா ஏன் இந்த நாலு ஜட்ஜூகளின் டிராமாவும் அதன் பின்புலமும்.. இவர்கள் பேசுவதை பார்த்தால் மத்திய அரசை விமர்சனம் செய்ய வருவது போல் உள்ளது இதன் பின்னால் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் இருக்கிறது என்பது தெளிவாகிறது இந்த காங்கிரஸ் பின்னால் சீனா, பாகிஸ்தான் என்று எத்தனை நாடுகள் உள்ளன ?
Rate this:
Share this comment
Cancel
13-ஜன-201800:20:36 IST Report Abuse
அப்பு என்ன செய்வது? சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் ஒவ்வொருத்தரும் ஒரு ஜாதி..ஒருத்தரும் ஜாதிப் பேரை விட்டுக்குடுக்க மாட்டாங்க
Rate this:
Share this comment
Cancel
Mohamed Ilyas - Karaikal,இந்தியா
13-ஜன-201800:10:34 IST Report Abuse
Mohamed Ilyas இந்த நீதிபதிகள் எல்லாம் முதலில் ஹிந்துக்கள் தானா என்று அக்கினியில் இறங்கி சோதனைக்கு உள்ளாக்க வேண்டும் ,
Rate this:
Share this comment
Cancel
திராவிடன் - chennai ,இந்தியா
13-ஜன-201800:09:58 IST Report Abuse
திராவிடன் 2ஜி தீர்ப்புல கடுப்பாகியிருப்பாங்களோ 😉
Rate this:
Share this comment
Cancel
Mohamed Ilyas - Karaikal,இந்தியா
13-ஜன-201800:09:34 IST Report Abuse
Mohamed Ilyas என்னடா ராமா ராஜ்யத்துக்கு வந்த சோதனை ?
Rate this:
Share this comment
Cancel
Siva - Aruvankadu,இந்தியா
12-ஜன-201821:04:28 IST Report Abuse
Siva மோடி என்னும் ஒரு மாபெரும் தலைவர். ஒத்த ஆளை கவிழ்க்க என்ன ஓரு .............தனம். திரும்பவும் மோடி ஜி ஆட்சி தான்..... கண்டிப்பாக இந்தியனுக்கு விமோசனம் தருவார். தறுதலை தமிழன் யோசிக்கனும்
Rate this:
Share this comment
Cancel
Raghu -  ( Posted via: Dinamalar Android App )
12-ஜன-201820:57:02 IST Report Abuse
Raghu இந்த நீதிபதிகள் ஊடகங்களில் பேட்டி அளித்தது மிகவும் மடத்தனம் ! கடுமையான வார்த்தை என்ன செய்வது அவர்கள் நடத்தையை இதை விட நாகரிகமாக விமர்சிக்க முடியாது ! நாம் ஒன்று புரிந்து கொள்ள வேண்டும் பொதுவாக யாரும் நீதிமன்றத்தை அவமரியாதையாக பேசுவதில்லை ஆனால் இவர்களது நடத்தை மிகவும் மட்ட ரகமாக இருக்கிறது !Very very unfortunately !
Rate this:
Share this comment
Cancel
siriyaar - avinashi,இந்தியா
12-ஜன-201820:48:17 IST Report Abuse
siriyaar Next congress will army revolt
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை