ஜல்லிக்கட்டு கலவர விசாரணை முடிவு எப்போது: கமிஷன் நீதிபதி தகவல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஜல்லிக்கட்டு கலவர விசாரணை முடிவு எப்போது: கமிஷன் நீதிபதி தகவல்

Updated : ஜன 13, 2018 | Added : ஜன 12, 2018 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மதுரை: ''ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலவரம் குறித்த விசாரணை முடிய ஓராண்டிற்கு மேலாகும்,'' என விசாரணை கமிஷன் நீதிபதி ராஜேஸ்வரன் தெரிவித்தார்.
மதுரையில் இரண்டாம் கட்டமாக மூன்று நாட்களாக நீதிபதி விசாரணை மேற்கொண்டார். நேற்று விசாரணையை முடித்து அவர் கூறியதாவது:கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி நடந்த போராட்டங்களில் பல இடங்களில் கலவரம் ஏற்பட்டது. இதுகுறித்து விசாரணை கமிஷனில் 1,956 பேர் பிரமாண வாக்குமூலம் கொடுத்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடக்கிறது. மதுரை மாவட்டத்தில் 996 பேர் வாக்குமூலம் கொடுத்தனர். இரண்டாம் கட்ட விசாரணைக்காக 56 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதில் 41 பேர் ஆஜராயினர். பிப்., 28, மார்ச் 1, 2 மீண்டும் விசாரணை நடக்கும்.
மதுரையில் ஜல்லிக்கட்டு போராட்டம் பெரியளவில் நடந்ததால் சாட்சிகள் ஆர்வமாக தகவல்களை தெரிவிக்கின்றனர். வாக்குமூலம் தாக்கல் செய்யாதவர்களிடம் விசாரணை நடத்தப்படும். சேலத்தில் விசாரணை முடிந்தது. சென்னை,திருச்சி, கோவையிலும் விசாரணை நடத்த வேண்டியிருக்கிறது. விசாரணை முடிய ஓராண்டிற்கு மேலாகும். போலீசாருக்கு எதிராகவும், ஆதரவாகவும் சாட்சியம் அளித்துள்ளனர். தேவைப்பட்டால் போலீஸ் அதிகாரிகளையும் அழைத்து விசாரிப்போம், என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
13-ஜன-201800:36:19 IST Report Abuse
அப்பு அடப் போங்கப்பு... அடுத்த ஜல்லிக்கட்டே வந்துருச்சு.... ஒரு மாட்டை 25, 30 மறத்தமிழர்கள் வீரமா புடிக்கப் போறாங்க...
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
12-ஜன-201819:22:04 IST Report Abuse
தமிழ்வேல் செலவுதான்...., என்னா பண்றது..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை