கல் வீச்சில் காயமின்றி தப்பினார் பீஹார் முதல்வர் நிதிஷ்| Dinamalar

கல் வீச்சில் காயமின்றி தப்பினார் பீஹார் முதல்வர் நிதிஷ்

Added : ஜன 12, 2018 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
பீஹார்,கல் வீச்சு,முதல்வர்,நிதிஷ்,தப்பினார்

பாட்னா : பீஹாரில், நலத்திட்டங்களை துவக்கி வைக்க சென்ற முதல்வரின் பாதுகாப்பு வாகனம் மீது, சிலர் கல் வீசி தாக்குதல் நடத்தினர். இதில், முதல்வரின் பாதுகாவலர்கள் காயம்அடைந்தனர்.

பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில், ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது.


சுற்றுப்பயணம்:

மாநிலத்தின் பல பகுதி களிலும், அரசின் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுவதை நேரடியாக பார்வையிடவும், மேலும் பல திட்டங்களை துவக்கி வைக்கவும், முதல்வர் நிதிஷ் குமார் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார்.

'விகாஷ் சமீக் ஷா யாத்ரா' என்ற பெயரில், சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இவர், இன்று(ஜன.,12), புக்சாரில், நலத்திட்டங்களை துவக்கி வைப்பதற்காக காரில் சென்றார். அப்போது அவரின் பாதுகாப்பு வாகனம் மீது, மர்ம நபர்கள் கல் வீசி தாக்குதல் நடத்தினர். இதில், முதல்வரின் பாதுகாவலர்களுக்கு காயம் ஏற்பட்டது. எனினும், முதல்வர் நிதிஷ் குமார் எவ்வித பாதிப்பும் இன்றி தப்பினார்.

நலத்திட்டங்களை துவக்கி வைத்த பின் முதல்வர் நிதிஷ் குமார் பேசியதாவது: என் மீது பொதுமக்களுக்கு எந்த கோபமும் இல்லை. மாநில அரசு நிறைவேற்றும் நலத்திட்டங்களால், மக்கள் பலனடைந்து உள்ளனர். அரசின் புதிய முயற்சிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.


வேடிக்கை:

மக்கள் நலனில் அக்கறை செலுத்தும் இந்த அரசின் செயல்பாடுகளை முடக்க நினைக்கும் சக்திகள், எனக்கு எதிராக, சிலரை துாண்டி வேடிக்கை பார்க்கின்றன. எதற்கும் கவலைப்படாமல், தொடர்ந்து மக்கள் பணியாற்றுவேன். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Agrigators - Chennai,இந்தியா
13-ஜன-201800:33:08 IST Report Abuse
Agrigators காய்க்கும் மரத்தில் தான் கல்லடி விழும்
Rate this:
Share this comment
Cancel
APJ AK - AP,இந்தியா
13-ஜன-201800:29:34 IST Report Abuse
APJ AK 1) அதிக சத்ததுடன் தும்மினால் எக்ஸ்கூஸ்மீ (Excuse Me) சொல்லறோம் 2) முன் பின் அறிமுக இல்லாத நபர் சாவு பற்றி கேட்க நேரிட்டால், "ஐயோ சாரி" (Oh Sorry) சொல்லறோம் 3) என்னதான் நாம் வயதில் பெரியவராக இருந்தாலும், சார் மே இ கம் இன்? கேட்டு செல்கின்றோம் 4) இந்த அளவுக்கு அடுத்தவர் மனம் நோகாமல் பார்த்து பேசுவது, நடந்து கொள்வது தான் பண்பாடு 5) இந்துக்கள் பெரும்பான்மை உள்ள இந்து நாட்டில், இந்துக்களின் மிக உயர்ந்த கடவுள் ஆண்டாளை ஒரு தாசி என்று எப்படி சொல்ல முடிந்தது? 6) இந்துக்கள் மனம் மிக பெரிய காயத்தில்….. இனிமேல் மன்னிப்பு கேட்டால் என்ன? கேட்கவிட்டால் என்ன?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை