காய்கறிகளுக்கும் எம்.ஆர்.பி., : விவசாய அமைப்பு எதிர்பார்ப்பு Dinamalar

பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
காய்கறிகளுக்கும் எம்.ஆர்.பி.,
விவசாய அமைப்பு எதிர்பார்ப்பு

புதுடில்லி : விவசாயிகள் உற்பத்தி செய்யும் காய்கறிகளுக்கும், எம்.ஆர்.பி., எனப்படும், அதிகபட்ச விற்பனை விலையை நிர்ணயிக்கும் அறிவிப்பு, பட்ஜெட்டில் இடம் பெறும் என, எதிர்பார்ப்பதாக, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின், பாரதிய கிசான் சங்கம் தெரிவித்துள்ளது.

காய்கறி,எம்.ஆர்.பி.,,விவசாய அமைப்பு,எதிர்பார்ப்பு,MRP


ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின், பாரதிய கிசான் சங்கத் தலைவர், மோகினி மோகன் மிஸ்ரா கூறியதாவது: தான் உற்பத்தி செய்யும் தக்காளியை, விவசாயிகள், ஒரு கிலோ, ஐந்து ரூபாய் என்ற விலையில், கொள்முதல் சந்தைகளில் விற்கின்றனர். அங்கு அது, ஒரு கிலோ, 30 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

மக்களுக்கு கடைகளில் கிடைக்கும் போது, இது, 50 ரூபாயாக உயர்கிறது.


விவசாயி, தனக்கு தேவையான அனைத்து இடுபொருட்களையும், எம்.ஆர்.பி., விலைக்கே வாங்குகிறார். ஆனால், அவர் உற்பத்தி செய்யும் பொருளை, குறைந்தபட்ச விலைக்கே விற்கும் அவலநிலை உள்ளது.


விவசாய பொருட்களுக்கு, குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிப்பதால் மட்டும், இதற்கு தீர்வு கிடைக்கப் போவதில்லை. குறைந்தபட்ச ஆதார விலையைக் கூட, விவசாயிகளுக்கு தருவதற்கு வியாபாரிகள் முன்வருவதில்லை.


ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறையில், உள்ளீட்டு பொருட்களுக்கான வரியை குறைத்துக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது. ஆனால், விவசாயிக்கு அந்த வாய்ப்பும் இல்லை.


Advertisement


விவசாயிகளின் வருமானத்தை, 2022க்குள் இரட்டிப்பாக்க, அரசு நினைக்கிறது. அதன் முயற்சிகள் பாராட்டுக்குரியவை. ஆனால், விவசாயிகளுக்கு பலன் கிடைப்பதில்லை. விவசாயிகளுக்கு பலன் கிடைக்கும் வகையில், காய்கறிகளுக்கு, குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிப்பதுடன், எம்.ஆர்.பி., விலையையும் நிர்ணயிக்க வேண்டும். அதிக விலைக்கு விற்பது தடுக்கப்பட வேண்டும்.


விவசாயிகளுக்கு உள்ளீட்டு வரி சலுகை கிடைக்க வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும். இதற்கான அறிவிப்பு, இந்த பட்ஜெட்டில் இடம் பெறும் என, எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Meenu - Chennai,இந்தியா
13-ஜன-201819:02:09 IST Report Abuse

Meenuவிவசாயிங்ககிட்டேர்ந்து அடிமாட்டு வாங்கி, வியாபாரி அதிக விலைக்கு மக்கள் தலையில் வைத்து விக்கிறான். இடையில் வரும் வியாபாரிதான் கொள்ளை மக்களிடம் கொள்ளை அடிக்கிறான். பாதிக்க படுவது, விவசாயும், பொது மக்களும் தான்.

Rate this:
அறிவுடை நம்பி - chennai,இந்தியா
13-ஜன-201811:25:00 IST Report Abuse

அறிவுடை நம்பி அம்பானியும் அதானியும் அந்நிய நாட்டுக்காரனும் காய் கறி விக்க போறானுங்க...அதற்கு தான் இந்த யோசனை..

Rate this:
Power Punch - nagarkoil,இந்தியா
13-ஜன-201810:40:14 IST Report Abuse

Power Punch அறிவில்லாதவனுங்க எது வேண்டுமானாலும் செய்வார்கள்..தினக்கொள்ளை நடக்கும் பெட்ரோல், டீசல் இரண்டுக்கும் ஏன் MRP வைக்கவில்லை??

Rate this:
மேலும் 10 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)