ஜெ.,வை பார்க்கவே இல்லை என அரசு மருத்துவர்... 'பகீர்!' ; சிகிச்சையும் அளிக்கவில்லை என கமிஷனில் சாட்சியம் Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
'பகீர்!'
ஜெ.,வை பார்க்கவே இல்லை என அரசு மருத்துவர்...
சிகிச்சையும் அளிக்கவில்லை என கமிஷனில் சாட்சியம்

சென்னை : 'மறைந்த தமிழக முதல்வர், ஜெயலலிதா, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த போது, அவரை நான் பார்க்கவில்லை; அவருக்கு, சிகிச்சை அளிக்கவில்லை' என, ஜெ.,க்கு சிகிச்சை அளிப்பதை கண்காணிக்கும் குழுவில் இருந்த, அரசு டாக்டர் சுவாமிநாதன் கூறியுள்ளார். இது, ஜெ., மரணத்தில், மேலும் பல சந்தேகங்களை கிளப்பியுள்ளது.

ஜெ.,பார்க்கவே இல்லை,அரசு மருத்துவர்,பகீர்,சிகிச்சை,அளிக்கவில்லை,கமிஷன், சாட்சியம்,A.D.M.K,Jayalalithaa,அ.தி.மு.க,ஜெயலலிதா


மறைந்த தமிழக முதல்வர், ஜெயலலிதா மர்மமான முறையில் மரணம் அடைந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.


அரை மணி நேரம்:இதுகுறித்து விசாரணை நடத்த, ஓய்வுபெற்ற நீதிபதி, ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. ஜெ.,க்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், ஜெ., உறவினர்கள், சசிகலா குடும்பத்தினர் என, அனைத்து தரப்பினரிடமும் விசாரணை நடந்து வருகிறது.


அப்பல்லோ மருத்துவ மனையில் சிகிச்சை பெற்ற ஜெ.,க்கு இதயம் செயலிழந்ததாக கூறப்பட்டது. இதையடுத்து, சென்னை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை இதய நிபுணர், டாக்டர் சுவாமிநாதன் சிகிச்சை அளித்ததாக கூறப்பட்டது. ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் உத்தரவுப்படி, நேற்று ஆஜராகி, சுவாமிநாதன் விளக்கம் அளித்தார். அவரிடம், அரை மணி நேரம் விசாரணை நடந்தது.


விசாரணை முடிந்து வெளியே வந்த, சுவாமிநாதன் கூறியதாவது: ஜெயலலிதாவிற்கு இதயம் செயலிழந்ததாக கூறப்படும், 2016, டிச., 4ம் தேதி, சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் ஐந்து டாக்டர்கள் இருந்தோம்.


'எக்மோ' கருவி:என்னிடம் கேட்கப்பட்ட மருத்துவ குறிப்புகளுக்கு மட்டும், விளக்கம் அளித்தேன். ஆனால், ஜெ.,வை பார்க்கவும் இல்லை; சிகிச்சை அளிக்கவும் இல்லை. 'எக்மோ' கருவி

பொருத்தும் சிகிச்சை உட்பட, ஜெ.,க்கு அளிக்கப்பட்ட அனைத்து சிகிச்சைகளையும், அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகமே செய்தது. இவ்வாறு அவர் கூறினார்.


ஜெ., மரணம் தொடர்பாக ஏற்கனவே பல்வேறு யூகங்கள் உலவி வரும் நிலையில், தற்போது, டாக்டர் சுவாமிநாதன், ஜெ.,க்கு சிகிச்சை அளிக்கவே இல்லை என்றும், அவரை பார்க்கவே இல்லை என்றும் கூறியிருப்பது, மேலும் பல புதிய சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது.


இழுத்தடிக்க சசி தரப்பு சதி!மறைந்த தமிழக முதல்வர், ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையை, இழுத்தடிக்கும் முயற்சியில், சசிகலா தரப்பு ஈடுபட்டுள்ளதாக, கமிஷன் வட்டாரங்கள் புகார் கூறியுள்ளன.


ஜெ., மரணம் குறித்து விசாரித்து வரும், ஓய்வுபெற்ற நீதிபதி, ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை கமிஷன், சசிகலா தரப்பு விளக்கத்தை கேட்டு, 2017 டிச., 21ல், பெங்களூரு சிறைக்கு, 'சம்மன்' அனுப்பி இருந்தது. இதையடுத்து, சசிகலா தரப்பு வழக்கறிஞர், ராஜா செந்துார்பாண்டியன், சசிகலா மீது புகார் அளித்தவர்கள் பட்டியலை தருமாறும், பட்டியல் கிடைத்த, 15 நாட்களில் ஆஜராகி அறிக்கை சமர்ப்பிப்பதாகவும், கமிஷனில், ஜன., 5ல், மனு தாக்கல் செய்திருந்தார்.


இம்மனு மீதான விசாரணைக்கு, கமிஷனில், ராஜா செந்துார்பாண்டியன் ஆஜரானார். அதன்பின், அவர் கூறியதாவது: விசாரணை கமிஷன், சசிகலாவிற்கு, 'சம்மன்' அனுப்பி இருந்தது. விசாரணைக்கு, நாங்கள் ஒத்துழைக்க தயார் என்றும், சசிகலா மீது புகார் கூறியவர்கள் குறித்த தகவல்களை அளிக்க கோரியும், மனு தாக்கல் செய்திருந்தோம். இந்நிலையில், நாங்கள் மனு அளித்த பின்னும், பலரிடம் விசாரணை நடந்து வருகிறது. எனவே, அனைவரிடமும் முழுமையாக விசாரணை முடிந்த பின், இயற்கை நீதி அடிப்படையில், அவர்களிடம், நாங்கள் குறுக்கு விசாரணை நடத்துவதற்கு, மற்றொரு புதிய மனுவையும் தாக்கல் செய்துள்ளோம்.


அதனால், சசிகலா மீது புகார் அளித்தவர்கள் யார்; என்ன புகார் கூறினர் போன்ற தகவல்கள் கிடைத்த, 16வது நாள், கால அவகாசமின்றியும், தாமதமின்றியும், கமிஷன் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிப்போம். மேலும், இந்த மனு மீதான வாதம், ஜன., 22ம் தேதி நடைபெற உள்ளது. இந்த விவகாரத்தில், தமிழக அரசு மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. ஆனால், சட்டத்தின் மீதும், கமிஷன் மீதும், எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


Advertisementசசிகலா தரப்பு, முதலில் மனு தாக்கல் செய்தபோதே, அனைத்து தகவல்களையும் தர, கமிஷன் தயராக இருந்தது. ஆனால், சசிகலா, தங்களிடம் உள்ள ஆவணங்கள் எதையும், இதுவரை தாக்கல் செய்யவில்லை. ஆனால், மற்றவர்களிடம் விசாரணை முழுமையாக முடிந்த பின், விசாரணைக்கு ஒத்துழைப்பதாக, மனு தாக்கல் செய்துள்ளனர். இதனால், விசாரணையை இழுத்தடிக்கும் முயற்சியில், சசிகலா தரப்பு ஈடுபட்டுள்ளதாக, கமிஷன் வட்டாரங்கள் கூறுகின்றன.2 சூட்கேஸ்களில் அறிக்கை! :


ஜெ.,க்கு அளித்த சிகிச்சைகள் குறித்த, அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய, சென்னை, அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்திற்கு, நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவிட்டு இருந்தது. இதைதொடர்ந்து, இரண்டு சூட்கேஸ்களில், சிகிச்சை தொடர்பான அனைத்து ஆவணங்களையும், அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம், கமிஷனில், நேற்று சமர்ப்பித்தது. இது தொடர்பாக, சென்னை, அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்ட செய்தி குறிப்பு: கடந்த, 2016, செப்., 22ம் தேதி, மருத்துவமனையில், ஜெ., அனுமதிக்கப்பட்டதில் இருந்து, டிச., 5ம் தேதி வரையிலான, அனைத்து அசல் மற்றும் நகல் மருத்துவ ஆவணங்களை, 30 தொகுப்புகளாக தாக்கல் செய்துள்ளோம். மேலும், இது தொடர்பான பிரமாண பத்திரத்தையும் தாக்கல் செய்துள்ளோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
22ல் அடுத்த விசாரணை:


பொங்கல் பண்டிகை முடிந்து, ஜன., 22ல், கமிஷனில் மீண்டும் விசாரணை துவங்குகிறது. அன்று, டாக்டர் சிவகுமாரிடம் விசாரணை நடைபெறுகிறது. வரும், 23ல், ஜெ., உதவியாளர் பூங்குன்றன்; 24ல், பெங்களூரு முத்துமாணிக்கம்; 25ல், டாக்டர் பாலாஜி ஆகியோரிடம் விசாரணை நடைபெறும்.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramakrishnan - Attur,இந்தியா
13-ஜன-201821:07:57 IST Report Abuse

Ramakrishnanஉண்மை கண்டறியும் கருவி மூலம் அப்போது இருந்த அமைச்சர்கள்,கவர்னர்,சசி குடும்பம், அப்போலோ மருத்துவமனை,எய்ம்ஸ் மருத்துவர்கள், லண்டன் மருத்துவர் மற்றும் இந்திய ப்பிரதமர் போன்றோரிடம் விசாரிக்கப்படவேண்டும்

Rate this:
C.Elumalai - Chennai,இந்தியா
13-ஜன-201815:51:51 IST Report Abuse

C.Elumalaiஅப்போலா ரெட்டியும், வேலைக்காரி சசியும் கூட்டு களவாணிகள். இருவரையும் லாடம்கட்டி உண்மைகளை கூறவைக்க வேண்டும்.

Rate this:
dandy - vienna,ஆஸ்திரியா
13-ஜன-201815:47:48 IST Report Abuse

dandyஜெயா உயிர் இல்லாமல் ..மருத்துவமனைக்கு அனுப்ப பட நாளில் இருந்தே ...சம்பந்த படடவர்கள் எல்லோரின் தொலை பேசி பதிவுகள் ஆராய பாடல் வேண்டும் ..இதை அளிக்க முடியாது ...

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
13-ஜன-201815:43:07 IST Report Abuse

Endrum Indianபிணத்துக்கு ஏன் இருதய சிகிச்சை என்று அவரை பார்க்க விடவில்லை, அவ்வளவு தானே?????

Rate this:
dandy - vienna,ஆஸ்திரியா
13-ஜன-201814:01:30 IST Report Abuse

dandyசிறையில் இருக்கும் இந்த கிரிமினல் இவ்வளவு திமிர் என்றால் ..வெளியில் இருந்தால் இவள் எதுவும் செய்வாள் ..உலகில் எந்த நாட்டிலும் இந்த மாதிரி வேண்டு கோள் வைக்க மாடடார்கள் ...

Rate this:
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
13-ஜன-201811:24:18 IST Report Abuse

D.Ambujavalliபட்டியல் கிடைத்ததும் அதில் உள்ளவர்களுக்கு 'பதினாறு' செய்து முடித்துவிடுவோம். அப்புறம் விசாரணை (கமிஷன் நீதிபதிக்குத் துணிவிருந்தால், ). க்கு ஒத்துழைப்போம்

Rate this:
christ - chennai,இந்தியா
13-ஜன-201811:12:32 IST Report Abuse

christரொட்டி அன்னைக்கு ஒன்னு சொல்றன் ,இன்னைக்கு ஒன்னு சொல்றன் இவனே மாத்தி மாத்தி பேசுறான் ,அவன் முழிக்கிற முழியும் சரியில்லை . ரொட்டியும் ,பெங்களூரு கைதியையும் உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்தினால் எல்லா விஷயங்களும் வெளியில் வந்து விட போகிறது ? புகார் கொடுத்தவர்களின் பட்டியல் இவர்கள் எதற்க்காக கேட்கிறார்கள் அவர்களையும் போட்டு தள்ளவா ?

Rate this:
elangovan - TN,இந்தியா
13-ஜன-201811:08:25 IST Report Abuse

elangovanThe prime suspect and Sasi total family who is in poes garden to be enquire and no one will be escape from the investigation. God will not come to the real world same time god some where in the humun beings to punish the criminal people’s through law and judgement. We feel arumugaswami in same kind. We want justice in Ammas death case and criminals to be punished.

Rate this:
Rajarajan - Thanjavur,இந்தியா
13-ஜன-201810:59:42 IST Report Abuse

Rajarajanகடைசியாக நமக்கு கிடைக்கப்போகும் தகவல், ஜெயலலிதா என்று ஒருவர் உலகத்தில் பிறக்கேவே இல்லை என்பது தான்.

Rate this:
dandy - vienna,ஆஸ்திரியா
13-ஜன-201813:54:38 IST Report Abuse

dandyஇல்லை தற்கொலை செய்து கொண்டார் என்றாலும் நம்ப ஆட்கள் தயார்...

Rate this:
rajan - kerala,இந்தியா
13-ஜன-201809:31:54 IST Report Abuse

rajanஅப்போ சின்னத்தாயி மேல புகார் கொடுத்தவர்கள் பட்டியலை அவுக கிட்டே கொடுத்த பதினாறாவது நாளில இந்த கமிஷன் முன் ஆஜராவாளோ. அந்த 15 நாட்களுக்குள் புகார் கொடுத்தவர்களை ஒரு வழிபண்ணி அதுக்கு ஏத்தமாதிரி இந்த சின்னத்தாயி கமிஷன்ல விளக்கம் கொடுப்பாளாம். இப்படி இந்த விசாரணையை ஊத்தி மூடுற வேலைக்கு ஒரு கைக்கூலி வக்கீல் கூட்டம் ஆராய்ச்சி பண்ணி கொண்டிருக்கிறது என்பது நிதர்சனம். அதுக்கு தானையா இந்த பில்லாவை கொண்டு போயி நார்க்கோ அனாலிசிஸ் பண்ணி விட்டு இந்த விசாரணையை தொடருங்கள் என்கிறோம். ஆக இப்படியே போனால் இந்த மொத்த விசாரணையும் நீர்த்து போய்டும் சாமியோவ்.

Rate this:
மேலும் 19 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement