விரைவில் உள்ளாட்சி தேர்தல்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
விரைவில் உள்ளாட்சி தேர்தல்
முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

சென்னை : ''தமிழகத்தில், விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும்,'' என, முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

விரைவில்,உள்ளாட்சி,தேர்தல்,முதல்வர்,பழனிசாமி,அறிவிப்பு


சட்டசபையில், கவர்னர் உரை மீதான விவாதத்திற்கு பதில் அளித்து, முதல்வர் பழனிசாமி பேசியதாவது: கடந்த, 10 மாதங்களில், 4,903 கோப்புகள், என் பரிசீலனைக்கு பின் உத்தரவிடப்பட்டுள்ளன. இன்றளவில், என் அலுவலகத்தில், எந்த கோப்பும் நிலுவையில் இல்லை.


உயர் கல்வி சேர்க்கையில், தமிழகம், 46.9 சதவீதம் என்ற அளவுடன், முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது. இது, தேசிய சராசரியான, 25.2 சதவீதத்தை விட, இரண்டு மடங்கு கூடுதலாகும். தமிழகத்தில் உள்ள, அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளில், அதிக அளவிலான, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. இதற்காக, 2011 முதல் தொடர்ச்சியாக, முதன்மை மாநிலத்திற்கான தேசிய விருதை, தமிழகம் வென்றுள்ளது. இந்திய மருத்துவக் குழுமத்தின், புதிய சீரமைப்புகளுக்கு, தமிழக அரசு கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளது.


கச்சத்தீவை மீட்க, மத்திய அரசிடமும், உச்ச நீதிமன்றத்திலும், தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தும். 'ஒக்கி' புயலில் சிக்கி, கரை திரும்பாத, கடைசி மீனவர் கிடைக்கும் வரை,
தேடும் பணியைத் தொடர, பிரதமரிடம் வலியுறுத்தி வருகிறேன்.

Advertisement

தமிழகத்தின் நிதிநிலை, மத்திய அரசைக் காட்டிலும், மற்ற மாநிலங்களைக் காட்டிலும், கட்டுக்குள் நிர்வகிக்கப்படுகிறது.


தமிழகத்தில், புதிய தொழில் முதலீடுகள் பெறப்படுவதை ஊக்குவிக்க, 'தமிழ்நாடு வணிக எளிதாக்கும் சட்டம்' கொண்டு வரப்பட்டுள்ளது. பட்டாசு தொழிலுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதியிலிருந்து, பட்டாசுக்கு விலக்கு அளிக்க, மத்திய அரசை, தமிழக அரசு வலியுறுத்தும்.


கடந்த, 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, உள்ளாட்சி தேர்தலை நடத்த, தமிழ்நாடு மறுவரையறை ஆணையம் உருவாக்கப்பட்டது. இவ்வாணையம், பிப்., 28க்குள் உள்ளாட்சி அமைப்புகளின் வார்டுகளை, மறுவரையறை செய்வதற்காக, இட ஒதுக்கீடு குறித்த பரிந்துரைகளை, அரசுக்கு அனுப்பியுள்ளது. அதன் அடிப்படையில், உள்ளாட்சி தேர்தல், தமிழகத்தில் விரைவில் நடைபெறும். இவ்வாறு முதல்வர் பேசினார்.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Selvam Pillai - Dammam,சவுதி அரேபியா
13-ஜன-201815:02:56 IST Report Abuse

Selvam Pillaiஐயா முதல்வரே முதலில் வரப்போவது சட்டமன்ற தேர்தல். உங்கள் கனவு பலிக்காது இன்னும் எத்தனை நாள் தாக்கு பிடிப்பீர்கள் என்று தெரிய வில்லை. உங்களது முடிவு கோர்ட் கையில் உள்ளது. உங்கள் காட் பாதர் மோடியின் பாச்சா இனி நீதி மன்றத்தில் எடுபடாது. வரலாறு காணாத பிரச்சினையை உச்ச நீதிமன்றம் சந்தித்து உள்ளது. அது வெளிச்சத்துக்கு வந்து இந்திய மானம் சிரிப்பாய் சிரிக்கிறது. இது அனைத்துக்கும் முழு முதல் காரணம் திரு மோடிஜி அவர்கள் தான். போக போக தெரியும்.

Rate this:
Muthu - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
13-ஜன-201812:16:32 IST Report Abuse

Muthuதேர்தல் வரட்டும்.. அப்போ இருக்கு உங்களுக்கு பொங்கலும் தீபாவளியும் ...

Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
13-ஜன-201807:25:12 IST Report Abuse

Kasimani Baskaranஅடுத்த தேர்தல் வரை இழுக்கலாம் போல இருக்கிறது...

Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
13-ஜன-201802:17:32 IST Report Abuse

ஜெய்ஹிந்த்புரம்"பட்டாசு தொழிலுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதியிலிருந்து, பட்டாசுக்கு விலக்கு அளிக்க, மத்திய அரசை, தமிழக அரசு வலியுறுத்தும்"., அதாவது, ஒரு மாதம் ஆகியும், அதற்காக இன்னும் ஒரு ஆணியும் பிடுங்கவில்லை என்று சொல்கிறார் மாண்புகிமு முதல்வர். தீபாவளி முடிந்த கையோடு, சிவகாசியையும் கொழுத்தி விட வேண்டியது தான்.

Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
13-ஜன-201802:15:16 IST Report Abuse

ஜெய்ஹிந்த்புரம்உள்ள ஆட்சியே தேறாத நிலையில், உள்ளாட்சி தேர்தலா? நல்லது தான். தங்களின் அழிவுக்கு நாள் குறித்து கொள்ளும் வாய்ப்பு எத்தனை பேருக்கு கிடைக்கும்.

Rate this:
அன்பு - தஞ்சை,இந்தியா
13-ஜன-201801:10:49 IST Report Abuse

அன்புபிஜேபி இடம் கட்சி மற்றும் ஆட்சியை அடகு வைப்பதை பழனிசாமி நிறுத்தினால், அவரின் செல்வாக்கு கூடும். ஆனால் அவரை இப்போது பதவியில் விட்டு வைத்து இருப்பதே பிஜேபி தான் என்பதால், அவரால் ஒன்றும் செய்ய இயலாது. அதிமுக சசி குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருந்து தப்பிப்பது நல்லது. ஆனால், பிஜேபி இடம் மாட்டி உள்ளவரை, அதிமுக அழிந்து தான் வரும்.

Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
13-ஜன-201808:22:18 IST Report Abuse

ஜெய்ஹிந்த்புரம்அதுக்கு அவர் தனது சம்பந்தியையும், மகனையும் ஜெயிலுக்கு அனுப்பனும். கூடவே பக்கத்து செல்லில் இவரும் இருக்கணும். செய்வாரா? சசி குடும்பத்தை காரணம் காட்டிவிட்டு பிசியாக லஞ்சம் அடித்த கொள்ளைக்காரர்கள் தான் எல்லா களவாணிகளும்....

Rate this:
Agrigators - Chennai,இந்தியா
12-ஜன-201823:41:10 IST Report Abuse

Agrigatorsஎருமை போல் அசைந்து அசைந்து தாமதமாக வந்தாலும் அருமை அருமை

Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
13-ஜன-201808:23:25 IST Report Abuse

ஜெய்ஹிந்த்புரம்இவன் கட்சியை, இவன் கும்பலை ஒரேயடியாக தூக்க ஒரு தேர்தல் போதும்....

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement