தலைமை நீதிபதிக்கு எதிராக 4 நீதிபதிகள் போர்க்கொடி Dinamalar
பதிவு செய்த நாள் :
தலைமை நீதிபதிக்கு எதிராக
4 நீதிபதிகள் போர்க்கொடி

புதுடில்லி : 'உச்ச நீதிமன்றத்தின் நிர்வாகம் கடந்த சில மாதங்களாக முறையாக இல்லை; விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்து வருகின்றன. 'இதை உடனடியாக சரி செய்யாவிட்டால், நீதித் துறையை மட்டுமல்ல, ஜனநாயகத்தையும் அது பாதிக்கும்' என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிராக, நான்கு மூத்த நீதிபதிகள் திடீர் போர்க் கொடி துாக்கியுள்ளனர்.

தலைமை நீதிபதி,எதிராக,4 நீதிபதிகள்,போர்க்கொடி,சுப்ரீம் கோர்ட்உச்ச நீதிமன்றத்தில், தலைமை நீதிபதி உட்பட, 31 நீதிபதிகள் பணியிடங்கள் உள்ளன. தலைமை நீதிபதியாக கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் பதவியேற்ற தீபக் மிஸ்ரா, இந்தாண்டு, அக்டோபர், 2ல் ஓய்வு பெறுகிறார்.


அசாதாரண சூழ்நிலை:இந்நிலையில், மூத்த நீதிபதிகள், ஜே.சலமேஸ்வர், அடுத்த தலைமை நீதிபதியாகவுள்ள ரஞ்சன் கோகோய், எம்.பி. லோகுர், குரியன் ஜோசப் ஆகியோர், நீதிபதி சலமேஸ்வர் இல்லத்தில், நிருபர்களை நேற்று சந்தித்தனர்.


அப்போது, நீதிபதி, சலமேஸ்வர் கூறியதாவது: இது, மிகவும் அசாதாரண சூழ்நிலை. உச்ச நீதிமன்றத்தின் சில நிர்வாக செயல்பாடுகள் முறையாக இல்லை. குறிப்பாக, கடந்த சில மாதங்களில், சில விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்துள்ளன. நீதித் துறையை காப்பாற்றாவிட்டால், நாட்டின் ஜனநாயகத்தை காப்பாற்ற முடியாது.


உச்ச நீதிமன்றத்தின் நிர்வாகம் குறித்து, தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ராவை காலையில் சந்தித்து பேசினோம். அப்போது, நீதிமன்றத்தை பாதிக்கும் பிரச்னைகள் குறித்து அவருடன் விவாதித்தோம். இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காணும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். ஆனால், எங்களுடைய முயற்சிகள் பலிக்கவில்லை.


பல முக்கிய வழக்குகளை, தலைமை நீதிபதி அமர்வே விசாரிக்கிறது. மூத்த நீதிபதிகள் அமர்வுக்கு ஒதுக்கப்படுவதில்லை. அதேபோல பல வழக்குகளை, மூத்த நீதிபதிகள் அமர்வுக்கு ஒதுக்காமல் மற்ற அமர்வுகளுக்கு ஒதுக்கப்படுகிறது.


மகிழ்ச்சி இல்லை:குறிப்பாக, குஜராத்தில் நடந்த சொராபுதீன் ஷேக் என்கவுன்டர் தொடர்பான வழக்கை விசாரித்து வரும், சிறப்பு, சி.பி.ஐ., நீதிபதி, லோயா மர்மமான முறையில் இறந்தது தொடர்பான வழக்கு, மூத்த நீதிபதிகள் அமர்வுக்கு ஒதுக்காமல், 10வது கோர்ட்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.


நாங்கள் நீதித் துறைக்கும், தேசத்துக்கும் பதில் சொல்லும் பொறுப்பில் உள்ளோம். எந்த ஒரு நாட்டிலும், குறிப்பாக நம் நாட்டில், நீதித் துறையில் இதுபோன்ற அசாதாரண சூழ்நிலை உருவானதில்லை. இந்த பத்திரிகையாளர் சந்திப்பு நடத்துவதில் எங்களுக்கு மகிழ்ச்சி இல்லை. ஆனால், கடந்த சில மாதங்களாக, நீதித் துறை நிர்வாகம் முறையாக நடக்கவில்லை. நாங்கள் எங்களுடைய பொறுப்பில் இருந்து மீறவில்லை. நாட்டுக்கு கடமை பட்டுள்ளோம்; அதனாலேயே இதை தெரிவித்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.


இந்த பிரச்னை தொடர்பாக, தலைமை நீதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தையும் அவர்கள் வெளியிட்டனர். இதனிடையில், மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல், கே.கே.வேணுகோபாலுடன், தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா நேற்று ஆலோசனை நடத்தினார். இந்தப் பிரச்னை, நீதித் துறைக்குள் எழுந்துள்ள பிரச்னை; அதில் தலையிடுவதில்லை என்று மத்திய அரசு முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது.


மோடி ஆலோசனை:


உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிராக, நான்கு நீதிபதிகள் திடீர் குற்றச்சாட்டுகளை கூறிஉள்ளது தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி, சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், இணையமைச்சர், பி.பி.சவுத்ரி ஆகியோருடன் தன்னுடைய அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினார். மத்திய நிதி அமைச்சரும், மூத்த வழக்கறிஞருமான அருண் ஜெட்லியும் உடனிருந்தார்.


Advertisementஐந்து முக்கிய பிரச்னைகள் :


தலைமை நீதிபதிக்கு எதிரான குற்றச்சாட்டுகளை கூறியுள்ள, நான்கு நீதிபதிகள் சுட்டிக் காட்டியுள்ள, ஐந்து முக்கிய பிரச்னைகள்: 1. அனைத்து மிகவும் முக்கிய வழக்குகளையும், தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு மட்டுமே விசாரிக்கிறது. மற்ற மூத்த நீதிபதிகள் அமர்வுக்கு அவை ஒதுக்கப்படுவதில்லை. 2. மிகவும் முக்கியமான பிரச்னை உள்ள வழக்குகளை, விதிகளின்படி இல்லாமல், தனக்கு விருப்பமான அமர்வுகளுக்கே தலைமை நீதிபதி ஒதுக்குகிறார். 3. குறிப்பாக, சி.பி.ஐ., நீதிபதி, லோயா மர்ம மரணம் குறித்த முக்கியமான வழக்கு, மூத்த நீதிபதிகள் அமர்வுக்கு ஒதுக்காமல், 10வது நீதிமன்ற அமர்வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 4. மூத்த நீதிபதிகள் புறக்கணிக்கப்படுகின்றனர். உதாரணத்துக்கு, மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை தொடர்பான ஊழல் வழக்கை, தலைமை நீதிபதி, நீதிபதிகள், கோகோய், எம்.பி.லோகுர், குரியன் ஜோசப் மற்றும் தான் அடங்கியுள்ள, ஐந்து நீதிபதிகள் அமர்வுக்கு மாற்ற, நீதிபதி சலமேஸ்வர் அமர்வு பரிந்துரைத்தது. ஆனால், அந்த வழக்கு, 7வது நீதிமன்ற அமர்வுக்கு மாற்றப்பட்டது. 5. முன்பு, ஐந்து நீதிபதிகள் அமர்வு விசாரித்த வழக்குகளை, சிறிய அமர்வில் இடம்பெற்றுள்ள தலைமை நீதிபதி விசாரித்து வருகிறார். இவ்வாறு நீதிபதிகள் சுட்டிக் காட்டினர்.
சமமானவர்களில் முதன்மையானவர் :


நீதித் துறையில் உள்ள பிரச்னைகள் குறித்து, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ராவுக்கு, நான்கு நீதிபதிகள் எழுதியுள்ள கடிதத்தின் முக்கிய அம்சங்கள்: * தலைமை நீதிபதி என்பவர், சமமானவர்களின் முதன்மையானவர். அவர் உயர்ந்தவரும் இல்லை, தாழ்ந்தவரும் இல்லை. * இந்த நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட சில நீதித் துறை உத்தரவுகள், நீதித் துறையின் செயல்பாட்டுடன், உயர் நீதிமன்றங்களின் சுதந்திரத்தையும் பாதித்துள்ளது; உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அலுவலகத்தின் செயல்பாட்டிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. * மிக முக்கியமான பல வழக்குகள், எவ்வித கோட்பாடுகளும் இல்லாமல், தலைமை நீதிபதியால், தனக்கு விருப்பமான அமர்வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. * உச்ச நீதிமன்றத்துக்கும், நீதித் துறைக்கும் பாதிப்பு, களங்கம் ஏற்படக் கூடாது என, பல விஷயங்களை நாங்கள் குறிப்பிடவில்லை. ஆனால், அந்த பாதிப்பு ஏற்கனவே செய்யப்பட்டு விட்டது. * வழக்குகளை ஒதுக்குவது போன்ற அதிகாரங்கள், தலைமை நீதிபதிக்கு நீண்டகால நடைமுறையாக இருந்து வருகிறது. தன்னுடன் பணியாற்றுபவர்களைவிட, தலைமை நீதிபதிக்கு என்று எந்த தனிப்பட்ட உரிமையும் வழங்கப்படவில்லை. இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (15+ 202)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
balakrishnan - Mangaf,குவைத்
13-ஜன-201822:32:43 IST Report Abuse

balakrishnanஇந்த நீதிபதிகள் அனைவரும் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் களின் கை தடிகள் .

Rate this:
Appan - London,யுனைடெட் கிங்டம்
13-ஜன-201811:53:43 IST Report Abuse

Appanகடைசியில் ஆர்.எஸ்.எஸ் , பிஜேபி அதன் கைங்கரியத்தை காட்டி விட்டது..பிஜேபி ட்சிக்கு வந்ததிலிருந்தே , நீதிபதிகள் தேர்வில் அரசாங்கம் ஈடுபட வேண்டும் என்று சொல்லியது..இதை உச்ச நிதி மன்றம் ஏற்று கொள்ளவில்லை. .அதனால் பிஜேபிக்கு வேண்டிய ஆர்.எஸ். எஸ் நீதிபதிகளை நியமிக்கமுடியவில்லை..இதனால் தொடர்ந்து வேலை செய்து இப்போ இந்த நீதிபதிகளில் போரை துவக்கி உள்ளது..இப்போ நீஇ துறையை சரி செய்கிறோம் என்று ஆர்.எஸ்.எஸ் நீதிபதிகளை சப்தமில்லாமல் நியமிப்பார்கள் ..நாடு எங்கே போகிறது..இந்த நீதி துரைபுரட்சி இந்திராவின் எமெர்ஜென்சியை விட மோசம்..இதன் விளைவுகள் நாட்டை அழித்து விடும். ..இது மக்களுக்கு தெரியுமா..?. சந்தேகம் தான்..?.பிஜேபி நாட்டை முன்னேற பாடுபடவில்லை..நாட்டை காவி மயம் ஆக்கச்செயல் படுகிறது..உலகளவில் மதம் அரசியலிலிட்டு பட்டால் முடிவு வன்முறை. கொலை, அழிவு..இந்தியா இப்படிக்கணுமா.?. வட இந்தியாவின் இந்து மதம் தென் இந்தியாவின் இந்து மதம் வேறு.. பிஜேபி முழு அளவில் ஆட்சிக்கு வந்தால் தென் இந்தியாவை வட இந்திய போல் மாற்றுவார்கள்..அதில் முதல் அடி தமிழ் மொழி..அதை அழிக்காமல் பிஜேபி தமிழகத்தில் வெறுண்ணமுடியாது..இது தேவையா..பின் தென் இந்தியாகோவில்கள் ஆகம முறைப்படி பிரமாண்டமாக கட்டப்பட்டது...ஆனால் வட இந்திய கோவில்களோ இப்படி கட்ட படவில்லை..லண்டலில்ன் சாமிநாராயண கோவில் சிலை பொம்மை மாதிரித்தானிருக்கும்..ஏன் எல்லா வட இந்தியாகோவில் சிலைகளும் இப்படித்தான் இருக்கும்..பிஜேபி தமிழா கோவில்களை அப்படி மாற்றினால் என்ன செயவீர்கள்..?..பிஜேபியை ஆதரிக்கும் தமிழர்கள் இதை சிந்திக்கவேண்டும்..

Rate this:
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
13-ஜன-201811:33:57 IST Report Abuse

pradeesh parthasarathyஒரு கொலையை மறைக்க மற்றொரு கொலை ... சொராபுதீன் ஷேக் என்கவுன்டர் வழக்கிலிருந்து விடுதலை செய்ய மறுத்த சிபிஐ நீதிபதி லோயா வை கொலை செய்தது யார் என்று இப்பொழுது அனைவருக்கும் விடை தெரிந்திருக்கும் .... Deepak மிஸ்ரா அவர்கள் பத்தாவது அமர்வுக்கு தனக்கு சாதகமான நீதிபதியிடம் மாற்றி ஆளும் கட்சிக்கு க்ளீன் சிட் வழங்கும் வகையிலேயே இந்த காரியத்தை செய்துள்ளார் .... நாட்டையே உலுக்கிய 2g கேஸிலிருந்து குற்றவாளிகளை விடுதலை செய்ததிலிருந்தே நன்றாக தெரிகிறது இந்த நீதித்துறையை தனது கைப்பாவையாக எவ்வாறெல்லாம் ஆட்டுவிக்கிறது என்று .... எது எப்படியோ அமித் ஷா விற்கு சனி ஆரம்பம் என்பது உறுதி ....

Rate this:
Mohamed Ibrahim - Chennai ,இந்தியா
13-ஜன-201809:28:30 IST Report Abuse

Mohamed Ibrahim கேடுகெட்ட ஆட்சியில் இதுவெல்லாம் சாதாரணமப்பா......

Rate this:
Hari Ariyaputhry - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
13-ஜன-201809:19:13 IST Report Abuse

Hari Ariyaputhryஇதில் இருந்தே தெரிகிறது மத்திய அரசின் உள்ளடி வேலைகள் நீதி துறையில் இருக்கிறது காவியின் காவலன் திரு மோடி அவர்களின் வேலை இருப்பதை காட்டு கிறது, மத்திய அரசின் ஆட்சியில் இன்னும் என்ன என்ன பார்க்க போறம் தெரிய வில்லை

Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
13-ஜன-201807:08:51 IST Report Abuse

Kasimani Baskaranஇந்த ஐந்து நீதிபதிகளின் கூற்றுப்படி தலைமை நீதிபதி பதவி ஒரு பொம்மை பதவி... ஐவரில் முதல்வர் என்றால் அதன் பொருள் அதுதான்... பசை உள்ள வழக்குக்களை இந்த இடதுசாரிக்கூட்டம் விசாரிக்க விடாமல் தீபக் மிஸ்ரா வேறு பெஞ்சுக்கு மாற்றி இருக்கிறார்... இதில் தவறு என்ன இருக்கிறது... கோடிக்கணக்கான வழக்குகள் தேங்கும் பொழுது கேவலப்படாத ஜனநாயகம் இப்பொழுது மட்டும் கெட்டுப்போகும் என்று சொல்வது கேவலம்... பிரிட்டிஷ் காலத்தை போலவே இவர்கள் இன்னும் இரண்டு மாதம் கோடை விடுமுறை எடுத்துக் கொண்டு இருக்கத்தான் செய்கிறார்கள்... வழக்குகள் தேங்குவதை நினைத்து இருந்தால் ஓவர்டைம் செய்தாவது வழக்குக்களை முடித்து இருப்பார்களே... இந்தியா நாசமாக காரணமாக இருந்ததே இந்த கேடுகெட்ட நீதித்துறைதான்... குறிப்பாக இடதுசாரி எண்ணம் கொண்ட நீதிபதிகளே..

Rate this:
Anandan - chennai,இந்தியா
14-ஜன-201809:28:46 IST Report Abuse

Anandanஉங்க கட்சிக்கு வினோத் ராய் போன்ற அடிமைகள் பலர் கிடைக்கின்றன....

Rate this:
Kumar -  ( Posted via: Dinamalar Android App )
13-ஜன-201806:56:33 IST Report Abuse

Kumarஇப்படி இருக்கும்போது 2G போன்ற வழக்குகள் யாருடைய குறுக்கீடுகள் இல்லாமல் தீர்ப்பு நியாயமாக நடந்திருக்கும் என்று எப்படி நம்புவது

Rate this:
Anandan - chennai,இந்தியா
13-ஜன-201806:31:52 IST Report Abuse

Anandanதலைமை நீதிபதி மோடியால் நியமிக்கப்பட்டவர். அவருக்கும் மோதி போலவே ஜனநாயகம் பிடிக்காது போலவே.

Rate this:
Vanavaasam - Dallas,Fort Worth,யூ.எஸ்.ஏ
13-ஜன-201803:59:50 IST Report Abuse

Vanavaasamநீதிபதி தீபக் மிஸ்ரா இனி ஜாக்கிரதையா இருக்கோணும் ... கூடவே ஒரு கமாண்டோ படையை பாதுகாப்புக்காக வைத்திக்கொள்வது நலம் ...

Rate this:
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
13-ஜன-201802:52:14 IST Report Abuse

தமிழ்வேல் எவை எல்லாம் நடக்க கூடாதோ அவை எல்லாம் நடந்து விட்டது... மற்றவர்களுக்கு அறிவுரை கூறுபவர்கள் சட்டத்தை மீறி நடக்கின்றார்கள்.

Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement