ஸ்டாலின் பட்டியல் : அன்புமணி பாய்ச்சல்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஸ்டாலின் பட்டியல் : அன்புமணி பாய்ச்சல்

Added : ஜன 13, 2018 | கருத்துகள் (6)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
ஸ்டாலின்,Stalin, அன்புமணி ,Anbumani, பா.ம.க.,PMK, தி.மு.க., DMK,  தமிழக சட்டசபை,  Tamil Nadu Assembly, தேசிய சித்த மருத்துவ ஆராய்ச்சி நிலையம்,  National Siddha Medical Research Institute,மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக் கல்லுாரி ,  Mohan Kumaramangalam Government Medical College,

சென்னை: 'பா.ம.க., சாதனைகளை, தி.மு.க., சாதனைகளாக, சட்டசபையில், தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின் பட்டியலிடுகிறார்' என, பா.ம.க., இளைஞரணி தலைவர், அன்புமணி கூறியுள்ளார்.

அவரது அறிக்கை: தமிழக சட்டசபையில், ஸ்டாலின் பேசுகையில், பா.ம.க., சாதனைகளை, தி.மு.க., செய்ததாக பட்டியலிட்டு மகிழ்ந்திருக்கிறார். சட்டசபையில், பா.ம.க., இல்லாததை பயன்படுத்தி, அதன் சாதனைகளை சொந்தம் கொண்டாடியது கண்டிக்கத்தக்கது.
மத்திய அரசில், தி.மு.க., இருந்த போது சாதித்த திட்டங்கள் எனக் கூறி, ஒரு பட்டியலை படித்துள்ளார். அதில், 'சென்னை, தாம்பரத்தில், தேசிய சித்த மருத்துவ ஆராய்ச்சி நிலையம் நிறுவப்பட்டது; சேலம், மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, 120 கோடி ரூபாயில் தரம் உயர்த்தப்பட்டது. 'மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு, 27 சதவீதம் இட ஒதுக்கீட்டை உறுதி செய்தது ஆகியவை, தி.மு.க., படைத்த சாதனைகள்' என, ஸ்டாலின் கூறியிருக்கிறார். இவையெல்லாம், பா.ம.க., சாதனைகள் என்பதை, ஸ்டாலின் வரலாற்றை படித்து, அறிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அன்புமணி கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thulasingam Jayaram Pillai - Chenai,இந்தியா
14-ஜன-201800:33:08 IST Report Abuse
Thulasingam Jayaram Pillai அண்ணே அன்புமணி அவர்களே உங்கள் மத்திய அமைச்சர் பதவியே திமுக தயவால் பெற்றது என்பதை மறந்து, உங்கள் சாதனையை அவர்கள் பட்டியலிட்டனர் என்பது சரியா?
Rate this:
Share this comment
Cancel
N.Kaliraj - VANIYAMBADI,இந்தியா
13-ஜன-201817:19:54 IST Report Abuse
N.Kaliraj இவங்கவேற ஆடிக்காத்துல அம்மியே பறக்குதுன்னா......எச்சை இலைய பத்தி கவலபடறாரு...
Rate this:
Share this comment
Cancel
Selvam Pillai - Dammam,சவுதி அரேபியா
13-ஜன-201814:52:00 IST Report Abuse
Selvam Pillai ஐயா அன்பு மணி அவர்களே தங்கள் பா ம க எப்போது ஆட்சி செய்தது தமிழ்நாட்டில் என்று கூறமுடியுமா. அப்பனுக்கு பிள்ளை தப்பாமல் பிறநது உள்ளது என்பது இதுதானோ. தி மு க போட்ட பிச்சை தான் உனது மந்திரி பதவி என்பதை மறக்கவேண்டாம். உன் அப்பன் வாழ் நாளிலோ அல்லது உனது வாழ் நாளிலோ கனவு மட்டுமே காண முடியும். இனி ஒரு இடம் கூட தமிழ் நாட்டில் உங்களுக்கு கிடைக்காது. இது போன்று பேச மட்டும்தான் முடியும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X