உயிர் உரங்கள் தரும் அதிக மகசூல் வேளாண் உதவி இயக்குனர் அறிவுரை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

உயிர் உரங்கள் தரும் அதிக மகசூல் வேளாண் உதவி இயக்குனர் அறிவுரை

Added : ஜன 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

சூலுார்:'பயிர்களுக்கு உயிர் உரங்களை பயன்படுத்தினால், மண் வளம் பெறும், உற்பத்தி பெருகும்' என, விவசாயிகளுக்கு வேளாண் துறை அறிவுரை வழங்கியுள்ளது.சூலுார் வட்டார வேளாண் விரிவாக்க மைய உதவி இயக்குனர் ஷபி அகமது வெளியிட்டுள்ள அறிக்கை:காற்றில் இருக்கும் தழைச்சத்தை நிலைநிறுத்தவும், மண்ணில் கரையாமல் இருக்கும் மணிச்சத்தை கரைக்கவும் ரைசோபியம் மற்றும் அசோஸ்பைரில்லம் உதவுகின்றன. மேலும், சாம்பல் சத்து, துத்தநாகம், சிலிக்கா உள்ளிட்ட இதர சத்துக்களை கரைக்கவும், நுண்ணுாட்ட சத்துக்களை உறிஞ்சி கொடுக்கும் திறனும் இவற்றுக்கு உண்டு. பாக்டீரியா இனத்தை சேர்ந்த இவற்றை கொண்டு, தயாரிக்கப்படுவதே உயிர் உரங்கள் ஆகும்.
பயிருக்கு தேவையான சத்து பொருட்களை அளிப்பதோடு, பயிர் வளர்ச்சிக்கு தேவையான ஊக்கி பொருட்களையும் உயிர் உரங்கள் உற்பத்தி செய்கின்றன. வறட்சியை தாங்கி, மண் வளம் பெறவும், உரச்செலவை குறைத்து, உற்பத்தியை பெருக்கவும் இந்த உயிர் உரங்களை பயன்படுத்துவது அவசியம்.
சூலுார் வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில், விவசாயிகளுக்கு தேவையான திட மற்றும் திரவ உயிர் உரங்கள் உள்ளன. அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, ரைசோபியம், 100 மி.லி., ரூ.36க்கும், 250 மி.லி., ரூ.85க்கும், 500 மி.லி., ரூ. 150க்கும் விற்கப்படுகிறது.உயிர் உரங்களை, கம்பு, மக்காச்சோளம், தென்னை, கரும்பு, வாழை, மஞ்சள், சிறு தானியங்கள் மற்றும் பயிறு வகைகள், காய்கறிகள் உள்ளிட்ட அனைத்து வகை பயிர்களுக்கும், சொட்டுநீர், தெளிப்பு மற்றும் நேரடி பாசனம் மூலமாக நேரடியாகவோ அல்லது தெளிப்பான்கள் மூலமாக பயன்படுத்தலாம்.
உயிர் உரங்கள் குறித்த மேலும் விபரங்களுக்கு சூலுார் வட்டார வேளாண் விரிவாக்க மையத்தை அணுகலாம்.இவ்வாறு, அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை