குடிநீர் இணைப்புக்கு உத்தரவு! 'தினமலர்' செய்தி எதிரொலி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குடிநீர் இணைப்புக்கு உத்தரவு! 'தினமலர்' செய்தி எதிரொலி

Added : ஜன 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மேட்டுப்பாளையம்:'தினமலர்' நாளிதழ் செய்தி எதிரொலியாக, புதிய குடிநீர் இணைப்பு கேட்டு காத்திருப்பவர்களுக்கு, உடனடியாக இணைப்பு வழங்க, அமைச்சர் வேலுமணி நேற்று உத்தரவிட்டார்.
கோவை மாவட்டத்தில், 2015, 2016 ம் ஆண்டில் கடும் வறட்சி நிலவியது. அந்த காலகட்டத்தில் புதிதாக வீடு கட்டியவர்கள், குடிநீர் குழாய் இணைப்பு வேண்டி ஊராட்சி, பேரூராட்சி அலுவலகங்களில் விண்ணப்பித்தனர்.கடும் வறட்சி நிலவியதால், புதிதாக குடிநீர் இணைப்பு வழங்க, மாவட்ட கலெக்டர் தடை விதித்தார். இந்த உத்தரவை வேதவாக்காக எடுத்துக் கொண்ட பேரூராட்சி செயல் அலுவலர்கள், ஊராட்சி ஒன்றிய பி.டி.ஓ.,க்கள் மற்றும் ஊராட்சி செயலர்கள், கடந்த ஓராண்டாக குடிநீர் குழாய் இணைப்பு வழங்குவதை நிறுத்தி வைத்திருந்தனர்.
இந்நிலையில், மழை பெய்து, போதிய குடிநீர் ஆதாரம் இருந்தும், குடிநீர் இணைப்பு வழங்காதது குறித்து, நேற்று வெளியான, 'தினமலர் கோவை ரூரல்' முதல் பக்கத்தில், 'மண்டை நனைந்தும் தொண்டை காயுது' என்ற தலைப்பில், விரிவான செய்தி வெளியானது.இந்த செய்தியின் எதிரொலியாக, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் வேலுமணி, நேற்று மாலை அதிகாரிகளுடன், ஆலோசனை நடத்தினார்.
இதனையடுத்து, அந்தந்த ஊராட்சிகள், பேரூராட்சிகளில் குடிநீர் ஆதாரம் இருந்தால், வீடு களுக்கு குடிநீர் இணைப்பு கேட்டு விண்ணப்பிதவர்களுக்கு, முன்னுரிமை அடிப்படையில் இணைப்பு வழங்கலாம் என, உத்தரவிட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை