ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயத்தில் சுவாமி விவேகானந்தர் ஜெயந்தி விழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயத்தில் சுவாமி விவேகானந்தர் ஜெயந்தி விழா

Added : ஜன 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயத்தில் நடந்த சுவாமி விவேகானந்தர் ஜெயந்தி விழாவில், அவரது உடை அணிந்து பள்ளி மாணவர்கள் அசத்தினர்.பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயத்தில், ஆண்டுதோறும் சுவாமி விவேகானந்தர் ஜெயந்தி விழா, கொண்டாடப்படுகிறது.விழாவையொட்டி விவேகானந்தர் உருவச்சிலை ரதத்தில் அலங்கரிக்கப்பட்டு ஊர்வலம் நடந்தது. ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய குருகுல பள்ளி மாணவர்கள், 52 பேர் சுவாமி விவேகானந்தர் உடை அணிந்து ஊர்வலத்தில் பங்கேற்றனர்.பேரணியில் பங்கேற்ற இவர்கள் சுவாமி விவேகானந்தரின் கருத்துக்களை எடுத்துரைத்து சென்றனர்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய நிர்வாகம் செய்திருந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X