போலீஸ் டைரி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் டைரி

Added : ஜன 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

கொலை மிரட்டல்இருவர் மீது வழக்கு
துடியலுார் சேரன் நகர் அருகே உள்ள ஐ.டிஐ., நகரை சேர்ந்தவர் கலியமூர்த்தி,56. முன்விரோதம் காரணமாக இவரை இதே பகுதியை சேர்ந்த ஸ்ரீகாந்த், செந்தில் ஆகியோர் தகாத வார்த்தையால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்தனர். துடியலுார் போலீசார் ஸ்ரீகாந்த், செந்தில் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
இயந்திரம் விழுந்து மெக்கானிக் பலி
நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே உள்ள ராக்கிபாளையத்தை சேர்ந்தவர் சிவன், 37; மெக்கானிக். இவர் சின்னத்தடாகத்தில் செங்கல் சூளை ஒன்றில் மண் அள்ளும் இயந்திரத்தை சாய்வாக நிறுத்தி, பழுது பார்த்துக் கொண்டிருந்தார்.அப்போது இயந்திரம் திடீரென சிவன் மீது சாய்ந்தது. இதில், சிவன் உடல் நசுங்கியது. சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிவன் இறந்தார். துடியலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
சந்தன மரம் கடத்த முயற்சி இருவருக்கு அபராதம்
அன்னுார் அருகே பூலுவபாளையத்தை சேர்ந்தவர் சுரேஷ். நேற்று அதிகாலை, 2:00 மணிக்கு, வீட்டின் காம்பவுண்ட்டுக்குள் மரம் விழும் சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்தார். அப்போது இரு நபர்கள், இவரது வீட்டில் உள்ள சந்தன மரத்தை, வெட்டி எடுத்துக்கொண்டு தப்ப முயன்றனர்.பொதுமக்கள் இருவரையும் பிடித்து, அன்னுார் போலீசில் ஒப்படைத்தனர்; இருவரையும் சிறுமுகை வனத்துறையினர் அழைத்துச் சென்றனர்.
சந்தன மரத்தை வெட்ட முயன்ற இருவரும், வடுகபாளையத்தை சேர்ந்த முருகேசன், 35, கருப்பசாமி, 41, என தெரிய வந்தது. அவர்கள் இருவருக்கும், சிறுமுகை ரேஞ்சர் மனோகரன், தலா 9,000 ரூபாய் வீதம், 18 ஆயிரம் ரூபாய் அபாராதம் விதித்தார். அபராதம் செலுத்தியதை அடுத்து இருவரும் விடுவிக்கப்பட்டனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை