இன்று இந்திய ராணுவ தினம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

இன்று இந்திய ராணுவ தினம்

Added : ஜன 13, 2018 | கருத்துகள் (1)
Advertisement
இந்திய ராணுவ தினம்,Indian Army Day,  ராணுவ வீரர்கள், Army soldiers, கரியப்பா, Kariappa, ஜனாதிபதி,President, பிபின் ராவத்,Bipin Rawat,  தரைப்படை, Army,கப்பல்படை,Navy,  விமானப்படை,Air Force, கடலோர காவல்படை,Coast Guard,  துணை ராணுவப்படை,Paramilitary, டில்லி,Delhi, முப்படை,

நம் விழி நிம்மதியாக உறங்க, விழி உறங்காமல் எந்நேரமும் நாட்டின் எல்லையில் எதிரிகளை எதிர்த்து நாட்டையும், மக்களையும் காக்கும் உயரிய பணியை செய்பவர்கள் தான் ராணுவ வீரர்கள்.

உயரமான மலைகள், பனி படர்ந்த குன்றுகள், நடுங்க வைக்கும் குளிர், மழை, சுட்டெரிக்கும் வெயில், என பல இன்னல்களுக்கும் மத்தியில் புன்னகையுடன் போர் முனையில் பணியாற்றும் தேசத்தின் உண்மையான ஹீரோக்கள். எதிரிகளிடமிருந்து நாட்டையும், மக்களையும் காப்பாற்றுவதோடு, இயற்கை சீற்றம், தேசிய பேரிடர், உள்நாட்டு கலவரம் உள்ளிட்ட நிகழ்வுகளின் போது மீட்பு மற்றும் அமைதி பணிகளிலும் ராணுவம் ஈடுபடுகிறது.

ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்த போது, ராணுவ தலைமை பொறுப்பை அவர்கள் தான் கவனித்தனர். சுதந்திரம் பெற்ற பின்பும் இது தொடர்ந்தது. இந்நிலையில் 1948 ஜன., 15ல், ராணுவ தலைமை தளபதி பொறுப்பை, ஆங்கிலேயர் ராய் பட்சரிடம் இருந்து, இந்தியாவின் 'கரியப்பா' ஏற்றார். இந்த வரலாற்று நிகழ்வை கவுரவிக்கும் விதமாகவும், நாட்டுக்காக உயிர் நீத்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும், ஜன., 15ம் தேதி, இந்திய ராணுவ தினம் கடைபிடிக்கப்படுகிறது.


இரண்டு:

இந்திய ராணுவம் உலகின் இரண்டாவது பெரியது. தலைமையகம் டில்லி. முப்படைகளின் தலைவர் ஜனாதிபதி. தற்போதைய ராணுவ தலைமை தளபதியாக பிபின் ராவத் பதவி வகிக்கிறார். ராணுவத்துக்கான கட்டளையை, பிரதமர் தலைமையிலான அமைச்சரவைக் குழு மற்றும் ராணுவ அமைச்சகம் வெளியிடுகிறது.

இந்திய ராணுவத்தில் தரைப்படை, கப்பல்படை, விமானப்படை, கடலோர காவல்படை, துணை ராணுவப்படை என ஐந்து படைப்பிரிவுகள் உள்ளன. தற்போது ராணுவத்தில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் பணியாற்றுகின்றனர்.

பல விஷயங்களில் கவனம் செலுத்தும் மக்கள், ராணுவ வீரர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்க தயங்கக்கூடாது. அவர்களுக்கு உரிய பாதுகாப்பு, மரியாதை மற்றும் சிறப்பு வசதிகள் வழங்கப்பட வேண்டும். ராணுவத்தில் சேர்வதற்கான ஆர்வத்தை, பள்ளி மாணவர்களிடம் இருந்து ஏற்படுத்த வேண்டும்.

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
JeevaKiran - COONOOR,இந்தியா
13-ஜன-201811:02:11 IST Report Abuse
JeevaKiran நம் விழி நிம்மதியாக உறங்க, விழி உறங்காமல் எந்நேரமும் நாட்டின் எல்லையில் எதிரிகளை எதிர்த்து நாட்டையும், மக்களையும் காக்கும் உயரிய பணியை செய்பவர்கள் தான் ராணுவ வீரர்கள். இதை படித்து அரசியல் வியாதிகள் திருந்தினால் நல்லது. இந்நேரத்தில் வீரர்களுக்கு ஒரு பெரிய சல்யூட்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை