விவேகானந்தரை பின்பற்றுங்கள்!| Dinamalar

விவேகானந்தரை பின்பற்றுங்கள்!

Added : ஜன 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

நான் சிறு வயது முதலே, விவேகானந்தரின் அறிவுரைகளை பின்பற்றி வருவதால், இன்று, மாநில முதல்வராக உயர்ந்திருக்கிறேன். நம் உடலும், மனமும் உறுதியாக இருக்க, உடற்பயிற்சி செய்வது அவசியம். இதற்காகவே, ஒவ்வொரு ஆண்டும், விவேகானந்தர் பிறந்த நாளன்று, பிரமாண்ட, 'சூரிய நமஸ்காரம்' நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

சிவ்ராஜ் சிங் சவுகான், ம.பி., முதல்வர், பா.ஜ.,

நாட்டு மக்களுக்கு பெருமை!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், நாடு முன்னேற்றப் பாதையில் செல்கிறது. உலக நாடுகள் மத்தியில், நம் நாட்டின் மதிப்பு உயர்ந்துள்ளது. இது, வளர்ச்சிக்கான பரிசு. உலக தலைவர்களில், மோடி சிறந்து விளங்குகிறார். இது, நாட்டு மக்கள் அனைவருக்கும் கிடைத்துள்ள பெருமை.

அமித் ஷா, தேசிய தலைவர், பா.ஜ.,

பயம் வேண்டாம்!

இன்றைய இளைஞர்கள், தொழில் முனைவோராக மாற வேண்டும். எந்த பயமும், தயக்கமும் இன்றி, இளைஞர்கள் ஓரடி முன்வைத்தால், அரசு அவர்களை துாக்கி விட தயாராக உள்ளது. இளைஞர்கள், தொழிலில், மென்மேலும் வளர்ச்சி அடைந்து, வேலைவாய்ப்பை உருவாக்கும் நபர்களாக திகழ வேண்டும்.

நரேந்திர மோடி, பிரதமர், பா.ஜ.,

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை