ஞானசம்பந்தர் பாடல் பதிக கல்வெட்டு நெல்லையப்பர் கோவிலில் உடைப்பு | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஞானசம்பந்தர் பாடல் பதிக கல்வெட்டு நெல்லையப்பர் கோவிலில் உடைப்பு

Added : ஜன 13, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
ஞானசம்பந்தர் பாடல் பதிக கல்வெட்டு நெல்லையப்பர் கோவிலில் உடைப்பு

திருநெல்வேலி: நெல்லையப்பர் கோவில் சீரமைப்பு பணிகளின்போது, பழமையான கல்வெட்டை உடைத்து குப்பையில் வீசியதால், பக்தர்கள் வருத்தமடைந்துள்ளனர்.
திருநெல்வேலி, நெல்லையப்பர் காந்திமதியம்மன் கோவிலில், 2004 ஏப்ரல், 7ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. தற்போது, டி.வி.எஸ்., உள்ளிட்ட உபயதாரர்களின் முயற்சியால், 2.92 கோடி ரூபாய் மதிப்பிலான திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நெல்லையப்பர் சன்னதிக்கு அருகே, கச்சேரி விநாயகர் முன்புறம் உள்ள சுவர்கள் இடித்து புதிய பூச்சு நடக்கிறது.
அந்த இடத்தில், திருஞானசம்பந்தரால் பாடல்பெற்ற பதிகங்களை, 1950ல், திருப்பனந்தாள் காசி திருமடம் சுவாமிகள், வெள்ளை பளிங்கு கல்லில் பொறித்துவழங்கியிருந்தார்.
அந்த கல்வெட்டுகளை, நேற்று நடந்த பணிகளின்போது உடைத்துவிட்டனர். அதன் உடைந்த பகுதிகளை, டவுன் ஆர்ச் அருகே உள்ள தாமரைக்குளம் குப்பையில் வீசியுள்ளனர். இதைக் கண்ட சிவனடியார்கள் கொதித்தெழுந்தனர்.
பக்தர்கள் தரப்பில் கூறியதாவது:
பழமையான சிவன்கோவிலின் தொல்லியல் சின்னங்களை தகர்க்கும் நோக்கோடு செயல்படுகின்றனர். கல்வெட்டு இடிபடும்போது அதிகாரிகள் கவனித்திருக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
கோவில் செயல் அலுவலர், ரோஷினியிடம் கேட்டபோது, 'சுவரை இடித்து பூசும்போது, பழைய கல்வெட்டு உடைந்துவிட்டது. அதே இடத்தில், மீண்டும் புதிய கல்வெட்டில், திருஞானசம்பந்தரின் பாடல் பொறித்து தருவதாக உபயதாரர் தெரிவித்துள்ளார்.
'மற்றபடி அறநிலையத்துறை, தொல்லியல் துறை விதிமுறைகளுக்கு உட்பட்டே பணிகள் நடக்கின்றன' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
POLLACHI JEAYASELVAN sanjose USA - SANJOSE,யூ.எஸ்.ஏ
14-ஜன-201803:17:00 IST Report Abuse
POLLACHI  JEAYASELVAN   sanjose USA இதனை நெல்லையப்பர் கோவிலில் அந்த இடத்தில ஒரு தகவல் பலகை மூலமாக தெரிவித்து பக்தர்கள் மனம் நோகாமல் பார்த்துக்கொள்ளலாமே.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X