கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த குந்தாரப்பள்ளியில், நேற்று நடந்த வாரச் சந்தையில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகளை, வியாபாரிகள் கொண்டு வந்திருந்தனர்.
வேலுார், தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்திருந்தினர். ஒரு ஆடு, 3,000 முதல், 25 ஆயிரம் ரூபாய் வரை விலைபோனது.
ஆடு வியாபாரிகள் கூறுகையில், 'பொங்கல் பண்டிகைக்காக சீட்டு நடத்தியவர்கள், ஆடுகளை வாங்கி, பங்கு கறி விற்பனை செய்கின்றனர். இதற்காக, ஆடுகளை அதிகளவில் வாங்கிச் சென்றனர். மூன்று கோடி ரூபாய் அளவிற்கு, ஆடுகள் விற்பனையாகி உள்ளன' என்றார்.
ஏராளமான ஆடுகளை, வாகனங்களில் வியாபாரிகள் எடுத்து வந்ததால், குந்தாரப்பள்ளி - வேப்பனஹள்ளி சாலையில், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், வாகன ஓட்டிகள், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்தனர்.