மண்டபங்களில் குப்பை : மாநகராட்சி திடீர் முடிவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மண்டபங்களில் குப்பை : மாநகராட்சி திடீர் முடிவு

Added : ஜன 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஆலந்துார், ஜன. 1௩--
ஆலந்துார் மண்டலத்தில் உள்ள, 40 தனியார் திருமண மண்டபங்கள், 63 லட்சம் ரூபாய் பாக்கி வைத்துள்ளதால், அந்த மண்டபங்களில், குப்பை அள்ளுவதை நிறுத்த, மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
ஆலந்துார்
மண்டலத்தில், 41 தனியார்
திருமண மண்டபங்கள் உள்ளன. அனைத்தும், 500 இருக்கைக்கும்
குறைவானவை.
ஒவ்வொரு மண்டபத்திற்கும், ஆண்டுக்கு, 28 ஆயிரத்து, 800 ரூபாய் துப்புரவு கட்டணம்
நிர்ணயிக்கப்பட்டு உள்ளன.
ஒரு மண்டபத்தை தவிர,
இதர மண்டப உரிமை
யாளர்கள், 2012ம் ஆண்டு முதல், மாநகராட்சிக்கு
துப்புரவு கட்டணம்
செலுத்தவில்லை.
அந்த வகையில், 63 லட்சம் ரூபாய், மாநகராட்சிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக, தணிக்கை
ஆய்வில் தெரிய வந்துள்ளது.
நிலுவை கட்டணத்தை செலுத்த, கடந்த ஆண்டு, செப்., மாதம், ஒவ்வொரு மண்டப உரிமையாளர்களுக்கும், 'நோட்டீஸ்' வழங்கப்பட்டது; அதன் பிறகும், கட்டணத்தை செலுத்தவில்லை.
இதனால், துப்புரவு கட்டணம் செலுத்தாத திருமண மண்டபங்களில், குப்பை அள்ளுவதை நிறுத்த, மாநகராட்சி
அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர். இதற்கான
அறிவிப்பு, வார்டு துப்புரவு
அதிகாரிகளுக்கு
வழங்கப்பட்டு உள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை