சீனியர் பிளானர் பதவிக்கு போட்டாபோட்டி : குழும கூட்டத்தில் அனுமதி பெற முயற்சி| Dinamalar

தமிழ்நாடு

சீனியர் பிளானர் பதவிக்கு போட்டாபோட்டி : குழும கூட்டத்தில் அனுமதி பெற முயற்சி

Added : ஜன 13, 2018
Advertisement
சீனியர் பிளானர் பதவிக்கு போட்டாபோட்டி : குழும கூட்டத்தில் அனுமதி பெற முயற்சி


சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ.,வில், திட்ட பணிகளே இல்லாத பிரிவுக்கு, சீனியர் பிளானர் பதவியிடத்தை உருவாக்கி, அதை பிடிப்பதில், அதிகாரிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது.
சி.எம்.டி.ஏ.,வில், சீப் பிளானர்கள், சீனியர் பிளானர்கள், துணை திட்ட அதிகாரிகள், உதவி திட்ட அதிகாரிகள் என, பதவிகள் வரையறை செய்யப்பட்டு உள்ளன.
உருவாக்கம்
இதில், பணிகளை முறையாக ஆராயாமல், அதிகாரிகளின் தேவையை கருத்தில் வைத்து, புதிய பதவியிடங்கள் உருவாக்கப் படுகின்றன.
தற்காலிக அடிப்படையில் உருவாக்கப்பட்ட பதவிகள், காலாவதியாகும் நிலையில், எவ்வித அடிப்படை காரணமும், பணி வரையறையும் இல்லாமல், புதிதாக, சீனியர் பிளானர் பதவியை உருவாக்க, அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
இதை பிடிப்பதில், மூன்று துணை திட்ட அதிகாரிகளிடையே, கடுமையான பேட்டி ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
நகரமைப்பு வல்லுனர்கள் கூறியதாவது:
சி.எம்.டி.ஏ.,வில், வெளிவட்ட சாலை, மெட்ரோ ரயில், மேம்பால ரயில் போன்ற திட்டங்களுக்காக உருவாக்கப்பட்ட பிரிவில், சீப் பிளானர், சீனியர் பிளானர் பதவி
இடங்கள் இருந்தன.
இத்திட்டங்கள் தொடர்பான பணிகள் முடிவடைந்த நிலையில், இங்கு, சீனியர் பிளானர் பதவியை நிரப்பாமல் இருந்தனர்.
இந்நிலையில், ஒரு குறிப்பிட்ட துணை திட்ட அதிகாரிக்கு, பதவி உயர்வு வழங்குவதற்காக, மீண்டும், சீனியர் பிளானர்
பதவியிடத்தை உருவாக்குவதற்கான நடவடிக்கையில், அதிகாரிகள் இறங்கிஉள்ளனர்.
கல்வித்தகுதி
இதில், சீனியர் பிளானர் பதவிக்கான கல்வித்தகுதி தொடர்பாக, நிலுவையில்
உள்ள வழக்குகளை
மறைத்தும், அப்பிரிவுக்கான தேவையை நியாயப்படுத்தாமல், புதிய பதவியை உருவாக்குகின்றனர். இப்பதவியை பிடிக்க, மூன்று துணை திட்ட அதிகாரிகள் போட்டியிடுகின்றனர்.
துணை முதல்வர் தலைமையில், விரைவில் நடக்க உள்ள குழும கூட்டத்தில், இதற்கு ஒப்புதல் பெற, அதிகாரிகள் தயாராகி
வருகின்றனர்.
தற்காலிக பணியிடங்கள் நீட்டிப்பு குழப்பத்தில் இருக்கும் நிலையில், புதிய பதவியிடத்தை உருவாக்க, குழும கூட்டத்தை அதிகாரிகள் பயன்படுத்த இருப்பதை, சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் கவனிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள்
கூறினர்.

- நமது நிருபர் -

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை