ரூ.38 லட்சத்தில் நவீன பண்டகசாலை | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.38 லட்சத்தில் நவீன பண்டகசாலை

Added : ஜன 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: மெட்ரோ ரயில் உதிரி பாகங்கள் வைப்பதற்கு, 38 லட்சம் ரூபாய் செலவில், நவீன தானியங்கி பண்டக சாலை நிறுவப்பட்டுள்ளது.சென்னை மெட்ரோ ரயில் உதிரி பாகங்கள், பொருட்கள், சாதாரண அறைகளில் வைக்கப்பட்டிருந்தன. இவற்றை தேடி எடுக்க, நேரமும், உதிரி பாகங்கள் காணாமல் போகவும் வாய்ப்பிருந்தது.
உதிரி பாகங்கள், பொருட்கள் பாதுகாப்பாக வைக்கப்படவும், தேவையான போது, விரைவாக எடுக்கவும் ஏதுவாக, 38 லட்சம் ரூபாய் செலவில், நவீன பண்டக சாலை, கீழிருந்து மேலாக, பல அலமாரிகளுடன், பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த அலமாரிகள், ஒவ்வொன்றிலும், 750 கிலோ எடை வரை, உதிரி பாகங்கள், பொருட்கள் வைக்கலாம். தேவையான உதிரி பாகங்கள், பொருட்கள் குறித்து, இந்த பண்டக சாலை தொடர்பான, கம்ப்யூட்டரில் பதிவு செய்தால், இவை வைக்கப்பட்டிருக்கும் அலமாரி,
தானாக திறக்கும்.
உதிரிபாகங்கள், பொருட்கள் எந்த
பகுதியில் இருக்கிறது என, தெரியும். நேர
விரயமின்றி எடுத்து பயன்படுத்தலாம். இந்த பண்டக சாலை, 38 டன் கொள்ளளவு
கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை