சென்னையில் சுற்றுலா பொருட்காட்சி இன்று துவக்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சென்னையில் சுற்றுலா பொருட்காட்சி இன்று துவக்கம்

Added : ஜன 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

சென்னை: சென்னை தீவுத்திடலில், 44வது சுற்றுலா தொழில் பொருட்காட்சி, இன்று துவங்குகிறது.
சென்னை, தீவுத்திடலில், ஆண்டுதோறும் சுற்றுலா பொருட்காட்சி, டிசம்பர் மாதம் துவங்கும்.
இந்த ஆண்டு,
ஆர்.கே.நகர் தேர்தலுக்காக தள்ளிப்போனது.
இதனால், தாமதமாக
இன்று துவங்க உள்ள, 44வது சுற்றுலா தொழில் பொருட்காட்சியை, அமைச்சர்கள் ஜெயகுமார், நடராஜன்
உள்ளிட்டோர் துவக்கி வைக்கின்றனர்.
இந்த ஆண்டு புது வரவாக, உலக அதிசயங்கள், கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. வழக்கம்போல, 20க்கும் மேற்பட்ட அரசு நிறுவனங்களின் ஸ்டால்கள் அமைக்கப்
பட்டுள்ளன. 150க்கும் மேற்பட்ட, தனியார்
நிறுவன ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அதில், குழந்தைகள் முதல் பெரியவர்களுக்கான பீகாக், கமாண்டர், மினி பைக், கொலம்பஸ், டிராகன் கோஸ்டர் உள்ளிட்ட, 50 வகையான ராட்டினங்கள் இடம்
பெறுகின்றன.
மேலும், 3டி ஷோக்கள், கார்னிவல் ஷோ உள்ளிட்டவை, பார்வையாளர்களை கவரும்.
ஜி.எஸ்.டி., வரி விதிப்பு காரணமாக, இந்த ஆண்டு நுழைவு கட்டணத்தில், மாற்றம் கொண்டு வர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இம்முறை, வாகன பார்க்கிங் கட்டணம், ஒழுங்குபடுத்தப்படும் என, சுற்றுலாத்துறை
அதிகாரிகள் தெரிவித்தனர்.
மே மாதம் வரை நடக்குமா?
சுற்றுலா பொருட்காட்சி, ஒவ்வொரு ஆண்டும் 70 நாட்கள் நடத்தப்படும். முன்பு, கிறிஸ்துமசுக்கு முன் துவங்கினால், புத்தாண்டு, பொங்கல் ஆகியவற்றில் வர்த்தகம் களை கட்டும். பார்வையாளர்களும் அதிகளவில் வந்து செல்வர்.
கடந்த சில ஆண்டுகளாக, பொங்கல் பண்டிகை முடிந்த நிலையில் துவங்குவதால், வர்த்தகம்
பாதிக்கப்படுகிறது. வர உள்ள மாதங்களில்,
௧௦ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வுகள், பள்ளி மாணவ - மாணவியருக்கான தேர்வுகள் நடக்க
உள்ளதால், பொருட்காட்சி களையிழந்து போகும்.
எனவே, பள்ளி விடுமுறையை கணக்கில் கொண்டு, மே மாதம் முழுவதும் பொருட்காட்சியை விரிவுபடுத்த வேண்டும் என, வர்த்தகர்கள், பொதுமக்கள் தரப்பில், கோரிக்கை விடப்பட்டுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை