Wait Till Day After Tomorrow, Differences Will Be Resolved": Attorney General After Meeting Chief Justice | ஒதுங்கியது மத்திய அரசு:சரியாகி விடும் என்கிறார் வேணுகோபால்:நீதி துறையில் நடப்பது என்ன?| Dinamalar

பொது செய்தி

இந்தியா

ஒதுங்கியது மத்திய அரசு:சரியாகி விடும் என்கிறார் வேணுகோபால்:நீதி துறையில் நடப்பது என்ன?

Updated : ஜன 13, 2018 | Added : ஜன 13, 2018 | கருத்துகள் (62)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
மத்திய அரசு, Central Government,வேணுகோபால், Venugopal,   உச்சநீதிமன்றம் ,Supreme Court, நீதித்துறை,Justice Department, நீதிபதி தீபக் மிஸ்ரா ,Justice Deepak Mishra,  அட்டர்னி ஜெனரல் வேணுகோபால்,  Attorney General Venugopal, நீதிபதி ஜே.சலமேஸ்வர், Judge J. Salamesswar, நீதிபதி ரஞ்சன் கோகோய்,Judge Ranjan Gogoi, நீதிபதி எம்.பி. லோகுர்,Judge MP Lokur,நீதிபதி குரியன் ஜோசப் ,  Justice Kurian Joseph,ஜனநாயகம், Democracy,  சோலி சொரப்ஜி,Choli Sorabjee,  நீதிபதி ஆர்.எம்.லோதா, Judge RM Lodha,

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீதான 4 மூத்த நீதிபதிகளின் கருத்துவேறுபாடு சில நாட்களில் சரியாகி விடும் என அட்டர்னி ஜெனரல் வேணுகோபால் கூறினார்.

நேற்று உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள், ஜே.சலமேஸ்வர், அடுத்த தலைமை நீதிபதியாகவுள்ள ரஞ்சன் கோகோய், எம்.பி. லோகுர், குரியன் ஜோசப் ஆகியோர் நீதித்துறையில் உள்ள பிரச்னைகள் தொடர்பாக, தலைமை நீதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தை வெளியிட்டனர். பின்னர் நீதிபதி சலமேஸ்வர் இல்லத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில்: இது, மிகவும் அசாதாரண சூழ்நிலை. உச்ச நீதிமன்றத்தின் சில நிர்வாக செயல்பாடுகள் முறையாக இல்லை. குறிப்பாக, கடந்த சில மாதங்களில், சில விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்துள்ளன. நீதித் துறையை காப்பாற்றாவிட்டால், நாட்டின் ஜனநாயகத்தை காப்பாற்ற முடியாது என்றார்.


மத்திய அரசு ஒதுங்கியது



நாட்டையே அதிர வைத்த இந்த நிகழ்வு குறித்தும், நீதித் துறைக்குள் எழுந்துள்ள பிரச்னை; அதில் தலையிடுவதில்லை என்று மத்திய அரசு ஒதுங்கிக்கொண்டதாக கூறப்படுகிறது. இதனிடையில், மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல், கே.கே.வேணுகோபாலுடன், தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா நேற்று ஆலோசனை நடத்தினார்.


சில நாட்களில் சரியாகிவிடும்


பின்னர் கே.கே. வேணுகோபால் கூறுகையில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை நான்கு மூத்த நீதிபதிகள் பத்திரிகையாளர்கள் முன்பாக குற்றம்சாட்டியது வருத்தத்திற்குரியது. கருத்து வேறுபாடுகளை வெளிப்படையாக செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்க கூடாது. மாற்று வழியை பயன்படுத்தியிருக்கலாம். இருப்பினும் கருத்துவேறுபாடுகள் சில நாட்களில் தீர்க்கப்படும் பொறுத்திருங்கள் என்றார்.
இது குறித்து நீதியரசர்கள். சீனியர் வழக்கறிஞர்கள் சிலரின் கருத்துகள் வருமாறு


முன்னாள் அட்டர்னி ஜெனரல் சோலி சொரப்ஜி



நீதிபதிகள் செய்தியாளர்களை சந்தித்தது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். நீதிபதிகள் தலைமை நீதிபதியிடம் தான் சென்றிருக்க வேண்டும் நீதித்துறையில் பிளவு ஏற்படக்கூடாது. ஆனால் நீதிபதிகள் பத்திரிகையாளர்களை சந்தித்தது ஏமாற்றம் அளிக்கிறது என்றார்.


மூத்த வழக்கறிஞர் கே.டி.எஸ். துளசி



நீதித்துறை மீதான சந்தேகங்கள் தீர்க்கப்பட வேண்டும் வழக்குகள் பாரபட்சமாக விசாரிக்கப்படுகின்றனவா என சந்தேகம் உள்ளது. உண்மையை நீண்ட நாட்கள் மறைக்க முடியாது. சுப்ரீம் கோர்ட் மூத்த நீதிபதிகளின் புகார் குறித்து உடனடியாக விசாரிக்க வேண்டும்/

முன்னாள் நீதிபதி ஆர்.எம்.லோதா

உச்சநீதிமன்றத்தின் நான்கு மூத்த நீதிபதிகள் வெள்ளிக்கிழமையன்று அளித்த பேட்டி "அதிர்ச்சியை" ஏற்படுத்தியுள்ளது. இந்த விஷயத்தில் அரசு "தலையிடக் கூடாது" என்றார்,


முன்னாள் கூடுதல் சொலிட்டர் ஜெனரல் விகாஷ் சிங்



ஜனநாயகத்தின் ஒரு தூண் நீதித்துறை அவற்றை பாதுகாக்க வேண்டியது நாம் ஒவ்வொருவரின் கடமை. நீதிபதிகளுக்கு பிரச்னை இருந்தால் பேசி தீர்த்துக்கொள்ளலாம்.



பிள்ளையார் சுழி போட்ட கர்ணன்


நீதித்துறையில் நடைபெற்றதாக கூறப்படும், முறைகேடுகளை செய்தியாளர்களை சந்தித்து பேசி சிக்கலில் சிக்கினார் முன்னாள் நீதிபதி கர்ணன். அவர்மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்து சிறையில் தள்ளியது உசசநீதிமன்றம். சில நாட்கள் முன்புதான் விடுதலையானார். அப்போதே அவர் தூக்கிய போர்க்கொடி, மற்றும் அதிருப்திக் குரல் இப்போது வெட்டவெளிச்சமாக்கிவிட்டது.


ஆவேசப்பட்ட சீனியர் வழக்கறிஞர்கள்.



முன்னதாக வழக்கு விசாரணை ஒன்றின் போது தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது அதிருப்தியடைந்த ராஜிவ் தவான், தலைமை நீதிபதியுடன் நடந்த வாதம், என மனதை அதிகளவில் புண்படுத்தி விட்டது 'இனி, வழக்கறிஞர் தொழிலில் ஈடுபடப் போவதில்லை' என கடந்த ஆண்டு டிசம்பர் 11-ம் தேதி கூறினார்.

இவரைபோல மற்றொரு மூத்த வழக்கறிஞரான பிரசாந்த் பூஷண் , தீபக் மிஸ்ராவிடம் மிரட்டல் தொனியில் , எனக்கு வாதாட வாய்ப்பு தராத இந்த கோர்ட்டில் நீதி கிடைக்காது என ஆவேசமாக பேசி கோர்ட் அறையில் இருந்து கோபத்துடன் வெளியேறினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (62)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
INDIAN - Riyadh,சவுதி அரேபியா
13-ஜன-201818:55:45 IST Report Abuse
INDIAN மக்களை பரபரப்பாக வைத்திருக்க வேண்டும். புதிதாக சிந்திக்கவிடக்கூடாது. சிந்தித்தால் கேள்வி கேட்ப்பார்கள் . சொன்னவர் ஹிட்லர் . ஆனால் இதை முழுமையாக நடைமுறை படுத்துகிறவர் யார் என்று புத்திசாலி வாசகர் பெருமக்களுக்கு நன்கு தெரியும்.
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
13-ஜன-201814:27:57 IST Report Abuse
தமிழ்வேல் இங்கே வர்ற தேக்ஸ்சா, ஊசிமணி மேலும் சிலது... மிஸ்ராவை தூக்கிவச்சிகிட்டு ஆடும்போதே அவரு ஆளும்கட்சிபக்கம்னு நல்லா தெரியுதே (நீதிபதி ஒரு கட்சியை சார்ந்தவராக இருக்கக்கூடாது) . மிஸ்ரா தன் இஷ்டத்துக்கு // சட்டத்தை மீறி // கேசை பிரிச்சி கொடுக்கிறது , இஷ்டத்துக்கு சிலருக்கு வேண்டுமென்றே ஒதுக்காதது ன்னு தப்பு செய்த அவரை, எதுக்கு இன்னும் தலையில தூக்கி வச்சிக்கிட்டு ஆடனும் ? இந்த நாலு பேரும் நிருபர்களை சந்தித்ததைத் தவிர்த்து வேறு என்ன செய்து விட்டார்கள் ? அதுவும் நிருபர்களை சந்திக்கும் முன் மிஸ்ராவைப் பார்த்து ஒன்றும் நடக்காத பட்சத்தில் தானே நிருபர்களை சந்தித்தார்கள் ? நிருபர்களை சந்திக்கும் முன் ஜனாதிபதியையோ அல்லது சட்ட அமைச்சரையோ சந்தித்த திருக்க வேண்டும் என்றால்.. அவர்களெல்லாம் ஒரு கட்சியை (ஆளும் கட்சி) சார்ந்தவர்கள் இல்லையா ? இந்த பிரச்சனையே மிஸ்ரா ஆளும் கட்சிக்கு சார்பாக இருப்பதால் தானே வந்தது ?
Rate this:
Share this comment
Cancel
N.Kaliraj - VANIYAMBADI,இந்தியா
13-ஜன-201814:11:47 IST Report Abuse
N.Kaliraj சரியாகிவிடுமா அல்லது சரிகட்டப்படுமா...
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
13-ஜன-201814:10:03 IST Report Abuse
தமிழ்வேல் // சில நாட்களில் சரியாகிவிடும் // சில நாட்கள் என்பதே அதிகம். இன்னும் புகைக்கின்றது, யாரும் படியவில்லை என எடுத்துக்கொள்ளலாம்.
Rate this:
Share this comment
Cancel
Rahim - Riyadh,சவுதி அரேபியா
13-ஜன-201813:26:59 IST Report Abuse
Rahim சீனியர்கள் பல பேர் காத்திருக்க தீபக் மிஸ்ராவிற்கு தலைமை நீதிபதி பதவியை சும்மாவா தந்தார்கள் எல்லாமே தங்கள் சொல்படி நடக்க வேண்டும் என்ற அக்ரீமெண்ட்டில் தான்.
Rate this:
Share this comment
Cancel
13-ஜன-201813:11:34 IST Report Abuse
a.thirumalai நீதி பாதியாகி விதியால் வீதிக்கு வந்து விட்டது. மதி கெட்டோரின் ஆசைதீயால் சதி அம்பலமாகியுள்ளது.
Rate this:
Share this comment
Cancel
N.Purushothaman - Kuala Lumpur ,மலேஷியா
13-ஜன-201813:08:12 IST Report Abuse
N.Purushothaman கர்ணனுக்கு சொம்படிக்கறவங்க அவரு ஏன் தலைமறைவானாருன்னு சொல்ல முடியுமா ?
Rate this:
Share this comment
13-ஜன-201815:13:22 IST Report Abuse
குவாட்டர் கோவிந்தன்பாஜகவுக்கு சொம்படிக்கிறவங்க எல்லாம் அமித்சா வழக்கு நீதிபதி மர்மமான முறைல செத்ததுக்கு காரணம் சொல்லமுடியூனா கர்ணன் தலைமறைவானத்துக்கு காரணம் சொல்லமுடியும் நைனா..இன்னாபா சரியாதான டபாய்ச்சிருக்கேன்???...
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
13-ஜன-201818:01:18 IST Report Abuse
தமிழ்வேல் தப்பு செய்யாமல் ஜெயிலுக்குப் போக யாருக்குத்தான் ஆசை வரும் ? பாரதியாரே பாண்டியில் பதுங்குனார் ஜீஜி....
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
13-ஜன-201818:05:28 IST Report Abuse
தமிழ்வேல் சட்டத்தை மீறி வழக்குகளை தன் இஷ்டத்துக்கு பிரித்துக் கொடுப்பதும், சிலருக்கு ஒதுக்காததும் என, சிலருக்கு சார்பாக செயல் படுவோருக்கு எதனால் நீங்களெல்லாம் தலையில் தூக்கிவைத்து ஆட வேண்டும் ஜிஜி ?...
Rate this:
Share this comment
Cancel
s.f.edison - chennai,இந்தியா
13-ஜன-201812:31:39 IST Report Abuse
s.f.edison இது கருத்து வேறுபாடல்ல நடை முறை மாற்றம் . இந்த மாற்றம் உள்நோக்கம் கொண்டது என்று தான் நீதிபதிகள் வெளிப்படுத்தி இருக்கிறார்கள். கருத்து வேறுபாடு சரியாகிப் போகும் அனால் நடைமுறை அளவுகோல்கள் நிறுவப்படவேண்டும். அதனை தங்கு தடை இன்றி அமுல் படுத்தவேண்டும். அப்போது தான் நீதியும் நமது நாட்டின் ஜனநாயகமும் காப்பாற்ற படும்.
Rate this:
Share this comment
Cancel
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
13-ஜன-201812:14:15 IST Report Abuse
pradeesh parthasarathy அமிதா ஷா மீதான கொலை குற்ற வழக்கை மூடி மறைக்கவே தீபக் மிஸ்ரா இம்மாதிரியான அசிங்கமான செயல்களில் ஈடுபடுகிறார் ...
Rate this:
Share this comment
Cancel
sachin - madurai,இந்தியா
13-ஜன-201811:55:31 IST Report Abuse
sachin தீபக் மிஸ்ரா மத்திய தலைமைக்கு வேண்டப்பட்டவராமே அதனால் தான் டெல்லி இந்த விசயத்தில் ஒதுங்கி கொண்டதாம் என்று சொல்கிறார்கள் ....(டெல்லிக்கு உதவும் வகைகளில் இவர் பல மனுக்களை ஏற்கிறாராமே ....சீக்கியர், லோயா , சோராபுதீன் ....எல்லாத்தையும் இவரே விசாரிப்பாராம் .....யார் சொன்னாலும் கேட்கமாட்டாராம் .....இப்படி எல்லாம் செய்தி வருகிறது ) ...........இவர் மீது உள்ள வழக்கையும் இவரே விசாரிப்பேன் என்று சொன்னாராம் ......(ஐயோ ஆண்டவா இனி மக்கள் எங்கடா போவது " ராணுவ ஆட்சி சிறந்தது இந்தியாவில் ) ..............
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை