ஆம்னி பேருந்துகளால் வெளியூர் செல்வோர் அவதி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆம்னி பேருந்துகளால் வெளியூர் செல்வோர் அவதி

Added : ஜன 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

தாம்பரம்: ஜி.எஸ்.டி., சாலையில், தாறுமாறாக நிறுத்தப்படும் ஆம்னி பேருந்துகளால், அனைத்து தரப்பினரும் அவதிக்குள்ளாகி
வருகின்றனர்.
பொங்கல் விடு
முறையை கொண்டாட, வெளியூர்களுக்கு செல்லும் பயணியர் கூட்டம், அதிகரித்து வருகிறது.
போக்குவரத்து தொழிலாளர்கள், நேற்று காலை வேலைக்கு திரும்பி,
பேருந்துகளை இயக்கு
கின்றனர்.
நேற்று முன்தினம் இரவு, திருச்சிக்கு செல்லும் அரசு பேருந்துகள், பெருங்களத்துார் வழியாக இயக்கப்பட்டன; காலையில் விழுப்புரம், புதுச்சேரி, திருவண்ணாமலை மார்க்கத்தில் செல்லும், பேருந்துகளும் இயக்கப்பட்டன.
அதனால், பேருந்து போக்குவரத்து சகஜமாகியது. நேற்று, அரசு சார்பில் விடுமுறை அறிவிக்கப்பட்டதால், காலை முதல், வெளியூர் செல்லும் பயணியர் கூட்டம், புறநகர் பகுதிகளில் அதிகரித்தது.
ஜி.எஸ்.டி., சாலையில், ஆம்னி பேருந்துகள், தங்கள் பயணியரை ஏற்றிச் செல்வதற்காக, சாலையை ஆக்கிரமித்து நிறுத்துவதால், அரசு பேருந்துகள், வாகன ஓட்டிகள், நேற்று காலை முதல் அவதிக்கு
உள்ளாகி வருகின்றனர்.
தாம்பரம் ரயில் நிலைய நுழைவாயில் துவங்கி, முடிச்சூர் சாலை மேம்பாலம் முடியும் இடம் வரை, சாலையை ஆக்கிரமித்து ஆம்னி பேருந்துகள், தாறுமாறாக நிறுத்தப்பட்டு, பயணியரை ஏற்றிச்
செல்கின்றனர்.
ஆம்னி பேருந்துகளை, கூடுதல் போக்குவரத்து போலீசார் மூலம் கட்டுப்படுத்தி, பொது போக்குவரத்து சீராக உதவ வேண்டும் என, பயணியர் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை