எம் - சாண்ட் மூலம் மேம்பால பணி கோயம்பேடு சந்திப்பில் தீவிரம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

எம் - சாண்ட் மூலம் மேம்பால பணி கோயம்பேடு சந்திப்பில் தீவிரம்

Added : ஜன 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement


எம் - சாண்ட் பயன்படுத்தி, கோயம்பேடு மேம்பால பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
சென்னையில், கோயம்பேடு நுாறடிச்சாலை, ரெட்டேரி சந்திப்பு, பல்லாவரம் சந்தை சாலை, வேளச்சேரி விஜயநகரம் சாலை சந்திப்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களில், மேம்பாலம் கட்டும் பணிகள், நெடுஞ்சாலைத்துறை மூலம் நடந்து வருகின்றன.
மணல் தட்டுப்பாடு காரணமாக, கடந்தாண்டு மேம்பாலப்பணிகள் முடங்கின. ஆற்று மணலுக்கு மாற்றாக, எம் -சாண்ட் பயன்படுத்த, அரசு உத்தரவிட்டது.
இருப்பினும், எம்-சாண்ட் பயன்படுத்தி, கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்கு, நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர்கள் தயக்கம் காட்டினர். இதனால், மேம்பால பணிகளை, மீண்டும் துவங்குவதில் சிக்கல்
ஏற்பட்டது.
இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், நெடுஞ்சாலைத்துறை ஆராய்ச்சி நிலையம் மூலம், எம்-சாண்ட் தரம் குறித்து ஆராயப்பட்டது.
தரமான எம்-சாண்ட் பயன்படுத்தி, கட்டுமான பணிகளை மேற்கொண்டால், எந்த பிரச்னையும் ஏற்படாது என,
கண்டறியப்பட்டது.
இதையடுத்து, எம் -சாண்ட் பயன்படுத்தி, மேம்பால கட்டுமான பணிகளை மேற்கொள்வதற்கு, ஒப்பந்ததாரர்கள் முன் வந்துள்ளனர்.
கோயம்பேடு நுாறடிச்சாலை சந்திப்பில், மீண்டும் மேம்பால பணிகள், தீவிரமாக நடந்து
வருகின்றன.
விரைவில், மற்ற மேம்பாலங்களின் கட்டுமான பணிகளும் துவங்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

-நமது நிருபர் -

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை