MP Pappu offers resignation | எனக்கு எதிராக நிதீஷ் அரசு சதி: சபாநாயகர் சுமித்ரா மகாஜனிடம் பப்பு யாதவ் புகார்| Dinamalar

எனக்கு எதிராக நிதீஷ் அரசு சதி: சபாநாயகர் சுமித்ரா மகாஜனிடம் பப்பு யாதவ் புகார்

Added : ஜன 13, 2018 | கருத்துகள் (5)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
சபாநாயகர் சுமித்ரா மகாஜன் , Speaker Sumitra Mahajan, பப்பு யாதவ் ,  Pappu Yadav, ராஜேஷ் ரஞ்சன்,Rajesh Ranjan, பீஹார்,Bihar,   ராஷ்ட்ரீய ஜனதா தளம், Rashtriya Janata Dal,ஜன் அதிகார் லோக்தந்திரி, Jan adhikar Lok Thandri, இந்திரா காந்தி அறிவியல்மருத்துவ மையம் , Indira Gandhi Scientific Center,நிதீஷ்குமார் ,Nitish Kumar,  லாலு,  Lalu,


பாட்னா: தனக்கு எதிராக நிதீஷ் அரசு சதி செய்வதாக பிரபல எம்.பி. பப்பு யாதவ் தனது பதவியை ராஜினாமா செய்ய விருப்பம் தெரிவித்து சபாநாயகரிடம் கடிதம் கொடுத்துள்ளார்.

பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த ராஜேஷ் ரஞ்சன் என்ற பப்பு யாதவ், முன்னர் லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியில் இருந்து பின்னர் அக்கட்சியில் விலகினார். இவர் மீது பல்வேறு கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஜன் அதிகார் லோக்தந்திரி கட்சியின் தலைவராகவும் பீஹாரின் மாதேபுரா லோக்சபா எம்.பி.யாக உள்ளார்.

கடந்த 7 -ம் தேதி இந்திரா காந்தி அறிவியல்மருத்துவ மையம் சென்று 60 நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சைக்கான நிதி உதவி வழங்கினார். ஆனால் அவர் மீது பொது அமைதிக்கு பங்கம் விளைப்பதாக போலீசார் எப்.ஐ.ஆர்.பதிவு செய்தனர்.

இந்நிலையில் நேற்று லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜனிடம் இரு பக்ககடிதம் ஒன்று வழங்கினார். அதில் பீஹார் மாநில நிதீஷ்குமார் அரசு தம்மை எந்த பணியையும் செய்ய விடாமல் சதி செய்கிறது. எனவே பதவியை ராஜினமா செய்ய விரும்புகிறேன். என் மீது பொய் வழக்குகளை பதிவு செய்ய முயற்சிக்கிறது. நான் யாருக்கும் எந்த தொந்தரவு கொடுக்காமல் அமைதியான வாழக்கை வாழ்ந்து எம்.பி.யாக மக்களுக்கு சேவை செய்து வருகிறேன்.. இவ்வாறு அந்த கடிதத்தில் பப்பு யாதவ் கூறியுள்ளார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vns - Delhi,இந்தியா
13-ஜன-201819:03:12 IST Report Abuse
vns பப்பு யாதவ் ஒரு கொடியவன்.. அவனை அரசு அல்லது காவல்துறை என்கவுன்டரில் கொன்றாலும் தவறில்லை..
Rate this:
Share this comment
Cancel
N.Purushothaman - Kuala Lumpur,மலேஷியா
13-ஜன-201813:10:39 IST Report Abuse
N.Purushothaman கப்பு யாதவின் சாதனைகள் கணக்கில் அடங்காதவை
Rate this:
Share this comment
Cancel
Rpalnivelu - Bangalorw,இந்தியா
13-ஜன-201811:11:49 IST Report Abuse
Rpalnivelu இந்த 'புனிதமானவன்' மீது ஏனிந்த 'பாய்ச்சல்' எல்லா கட்சிகளையும் பார்த்து விட்டு, தற்போது சொந்த கம்பனிக் கட்சியை துவக்கி 'அமைதியாக' கொலை, கொள்ளை, நில/சொத்து அபகரிப்பு, கற்பழிப்பை செய்து வருகிறார். அவர்மீது நிதீஷ் ஏன் ' காட்டமாக' இருக்கிறார்? அவர் மக்கள் நல பணியை 'தொடர' சுமித்ரா மகாஜன் 'அநுமதி' வழங்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Hari Ariyaputhry - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
13-ஜன-201809:08:18 IST Report Abuse
Hari Ariyaputhry அது சரி
Rate this:
Share this comment
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
13-ஜன-201808:50:13 IST Report Abuse
Kasimani Baskaran நம்ம பாம்பு தான் புகார் கொடுத்து விட்டாரோ என்று பார்த்தேன்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை