இஸ்ரேல் பிரதமரை வரவேற்க தயாராகும் குஜராத்| Dinamalar

இஸ்ரேல் பிரதமரை வரவேற்க தயாராகும் குஜராத்

Added : ஜன 13, 2018 | கருத்துகள் (27)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
இஸ்ரேல் பிரதமர் நேதன்யாஹூ, Israel Prime Minister Natyanahu,  பிரதமர் மோடி,Prime Minister Modi, குஜராத் விமான நிலையம்,Gujarat Airport,  சபர்மதி ஆஸ்ரமம்,Sabarmati Ashram,  குஜராத் முதல்வர் விஜய் ரூபானி , Gujarat Chief Minister Vijay Rupani,வெளியுறவு அமைச்சர் சுஷ்மா , Foreign Minister Sushma,ஜனாதிபதி ராம்நாத், President Ramnath, பேச்சுவார்த்தை, தாஜ்மஹால், Taj Mahal, குஜராத்,Gujarat,

புதுடில்லி: குஜராத் விமான நிலையத்திலிருந்து, சபர்மதி ஆஸ்ரமம் வரை இஸ்ரேல் பிரதமர் நேதன்யாஹூவும், பிரதமர் மோடியும் திறந்த காரில் பேரணியாக செல்ல உள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றன. இஸ்ரேல் பிரதமருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும் என குஜராத் முதல்வர் விஜய் ரூபானி கூறியுள்ளார்.


விருந்து நிகழ்ச்சி

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹூ, ஜன.14ம் தேதி அரசு முறை பயணமாக டில்லி வருகிறார். அவருக்கு பிரதமர் மோடி விருந்தளிக்கிறார். இதில் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா கலந்து கொள்கிறார். மறுநாள், ஜனாதிபதி ராம்நாத்தை சந்திக்கும் அவர், பிரதமர் மோடியுடன் இரு நாட்டு உறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். செவ்வாய் கிழமை அன்று தாஜ்மஹால் சென்று பார்வையிட உள்ளார்.


பாலிவுட்டுக்கு அழைப்பு

தொடர்ந்து 17 ம் தேதி நேதன்யாஹூ, விமானம் மூலம் ஆமதாபாத் வருகிறார். அங்கிருந்து நேதன்யாஹூவும், பிரதமர் மோடியும் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திறந்த காரில் செல்கின்றனர். சுமார் 9 கி.மீ., தூரம் பயணித்து சபர்மதி ஆஸ்ரமம் செல்கின்றனர். இருவரும், தொழில்முனைவோர் தொடர்பான அரங்கு மற்றும் விவசாயம் சார்ந்த மையத்திற்கும் செல்கின்றனர். பின், மும்பை செல்லும் இஸ்ரேல் பிரதமர், பாலிவுட்டை சேர்ந்தவர்களை சந்தித்து படப்பிடிப்புக்கு இஸ்ரேல் வருமாறு அழைப்பு விடுக்க உள்ளார்.
கடந்த 2016 செப்டம்பரில் புல்லட் ரயில் துவக்க விழாவிற்கு ஜப்பான் பிரதமர் வந்த போது, திறந்த காரில் பிரதமர் மோடியுடன் சென்றார். இது இருநாட்டு உறவை வலுப்படுத்தியது. இதனையடுத்து இஸ்ரேல் பிரதமரையும் அவ்வாறு அழைத்து செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rathinasami Kittapa - San Antonio,யூ.எஸ்.ஏ
13-ஜன-201818:47:32 IST Report Abuse
Rathinasami Kittapa தமிழ்நாட்டின் விவசாயத்தை மேம்படுத்தவேண்டி திண்டுக்கல் அருகே ரெட்டியார் சத்திரத்தில் இஸ்ரேல் கூட்டுடன் ஒரு விவசாய ஆராய்ச்சி நிலையம் ஆரம்பித்தனர். நிதி மத்திய அரசுடையது. திட்டத்தை நிறைவேற்றுவது மாநில அரசு. ஒவ்வொரு கட்டுமானத்திற்கும் பாதியை கமிஷனாக எதிர்பார்த்தால் வேலையின் தரம் எப்படி இருக்கும். அந்த மையத்தின் பொறுப்பு அதிகாரி மத்திய அரசுக்குப் பயந்து ஹைதராபாத் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் கொடுத்துள்ளார். அதனால் மையம் செயல்படுவது தாமதமாகிறது. இப்படியிருந்தால் தமிழ் நாட்டில் விவசாயம் வெளங்குமா ? ஆந்திராவில் இந்த மாதிரி இஸ்ரேல் தொழில் நுட்பப் பயிற்சி விவசாயிகளுக்குக் கொடுக்கப்பட்டு வெற்றிகரமாக விவசாயம் செய்ய ஆரம்பித்து விட்டனர் . இங்கே.....
Rate this:
Share this comment
Cancel
sam - Bangalore,இந்தியா
13-ஜன-201818:46:42 IST Report Abuse
sam Any comments from muslim brothers.
Rate this:
Share this comment
Cancel
தமிழர்நீதி - சென்னை ,இந்தியா
13-ஜன-201818:04:11 IST Report Abuse
தமிழர்நீதி நாட்டுக்கு நல்லகாலம் பொறக்கப் போகுது . இஸ்ரேல் சென்றுவந்ததும் இஸ்ரேல் பிரதமரை இந்தியாவுக்கு வரவைத்ததும் தவிர்த்து , மோடி கடந்தகாலத்தில் நல்லது எதுவும் செய்துவிடவில்லை. இதுவரை ஒரே ஒரு நல்லகாரியம் செய்திட்ட மோடிக்கு வாழ்த்துக்கள் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X