பொங்கல் பண்டிகை: தலைவர்கள் வாழ்த்து| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பொங்கல் பண்டிகை: தலைவர்கள் வாழ்த்து

Added : ஜன 13, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
பொங்கல்,Pongal, முதல்வர் பழனிசாமி,Chief Minister Palanisamy,  ஸ்டாலின்,Stalin, கவர்னர் பன்வாரிலால், Governor Panwarilal,தமிழக கலாசாரம்,Tamil Cultural, தமிழர் நாகரீகம், Tamil civilization, தமிழக பெருமை, Tamil Nadu Pride,பொங்கல் பண்டிகை,Pongal Festival, அறுவடை திருநாள்,Harvarda Thirunal,

சென்னை: பொங்கல் பண்டிகை முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.கவர்னர் பன்வாரிலால்: பொங்கல் எனும் அறுவடை திருநாளாம் மக்களுக்கு வளர்ச்சியையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது. இயற்கை அளிக்கும் கொடைக்கு நன்றி தெரிவிக்கும் நாளாக தை மாதத்தின் முதல் நாள் அமைகிறது. தமிழக கலாசாரம், நாகரீகம், பெருமையைநிலைநாட்ட இந்த பொங்கல் திருநாளில் உறுதி ஏற்போம்.
முதல்வர் பழனிசாமி: உலக மக்களுக்கு உணவளிக்கும் உழவர்களை போற்றிடும் திருநாளாகவும், உழவு தொழிலுக்கு உறுதுணையாக விளங்கும் சூரிய பகவானுக்கும், கால்நடைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் நன்நாளாகவம் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இத்தகைய சிறப்புமிக்க பொங்கல் பண்டிகையை தமிழக மக்கள் இன்புற்று கொண்டாடி மகிழ்ந்திட தமிழக அரசு பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கி சிறப்பித்துள்ளது. அறுவடை திருநாளாம் இப்பொங்கல் திருநாளில், தமிழக மக்கள் அனைத்து நலன்களையும் வளங்களையும் பெற்று சீரோடும் சிறப்போடும் வாழ்ந்திட வேண்டுமென்றும் வாழ்த்தி தமிழக மக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது பொங்கள் வாழ்த்துகளை உரிதாக்கி கொள்கிறேன்
திமுக செயல் தலைவர் ஸ்டாலின்: பொங்கல் திருநாளில் மகிழ்ச்சியுடனும் பெருமிதம் கலந்திருப்பதன் காரணம் இது தமிழர்களின் தனித்துவுமான நாள். உழைப்பின் உயர்வினை உலகுக்கு உரைத்திடும் நாள். திமுகவினர் கட்சி கொடியுடன் பொங்கல் பண்டியை கொண்டாட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R GANAPATHI SUBRAMANIAN - Madipakkam, Chennai,இந்தியா
13-ஜன-201817:44:46 IST Report Abuse
R GANAPATHI SUBRAMANIAN தல, கட்சி கொடி இல்லன்னா, அரிசி வெந்து பொங்கல் ஆகாதா ??? நீங்க உங்க முறைப்படி, ரம்ஜானுக்கு, கிறிஸ்துமஸ் க்கும் வாழ்த்து தெரிவிப்பது தான் நல்லது, அது தான் பகுத்தறிவும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X