bookfair | புததக திருவிழாவில் சில புதுமைகள்| Dinamalar

புததக திருவிழாவில் சில புதுமைகள்

Updated : ஜன 13, 2018 | Added : ஜன 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement

புத்தக திருவிழாவில் சில புதமைகள்...


வழக்கமாக சென்னையில் நடக்கும் புத்தக திருவிழாவிற்கு போய்விடுவது வழக்கம் இப்போது நடந்துவரும் 41 வது புத்தக திருவிழாவிற்கு சென்றிருந்தேன்.
வழக்கமான அரங்குகள் வழக்கமான கழிவுகள் வழக்கமான புத்தகங்கள் இவைகளைத்தாண்டி புதிதாக பார்வையாளர்களை கவர்வதற்கு என்ன விஷயங்கள் வைத்திருக்கிறார்கள் என்பதுதான் என் தேடலாக இருந்தது.

அதிகம் கவர்ந்தது இந்திய பார்வையற்றோர் சங்கம் வைத்துள்ள பார்வையற்றவர்களுக்கான புத்தகம் விற்கும் அரங்குதான்.தமிழ் இலக்கணம்,இலக்கியம்,நாவல்,சிறுகதைகள்,கட்டுரைகள்,கல்வியியல்,வரலாறு,
என்று பல்வேறு வித தலைப்புகளில் நுாற்றுக்கணக்கான புத்தகங்கள் வைத்திருந்தனர்.அனைத்து புத்தகங்களும் பார்வையில்லாதவர்கள் படிக்கும் பிரெய்லி முறையிலான புத்தகங்கள் என்பதுதான் இதில் விசேஷம்.

மேலும் பார்வையற்றவர்களுக்கு பயன்படக்கூடிய பலவித பொருட்களும் விற்பனைக்கு வைத்துள்ளனர்.பார்வையில்லாதவர்கள் இந்த கட்டுரையை படிக்கமுடியாது ஆகவே பார்வை உள்ள நீங்கள் படித்து பார்வை இல்லாதவர்களுக்கு இப்படி ஒர அரங்கு இருக்கிறது என்பதை சொல்லுங்கள் புண்ணியமாகப் போகும்.
கல்கியின் பொன்னியின் செல்வன் புத்தகவடிவைத்தாண்டி நாடகம் வீடியோ என்று பலவித வடிவத்தில் வந்துவிட்டது இப்போது சிறுவர்களை கவரும் விதத்தில் காமிக்ஸாகவும் வந்துள்ளது.சிறுவர்களை கவரும் இன்னோரு புதிய விஷயம் ரோபோ, இதனுடன் உற்சாகமாக விளையாடுகின்றனர்.

புத்தகங்கள் மட்டுமின்றி விதைகளும் கூட விற்கிறார்கள்.
இது விற்பனைக்கு அல்ல இலவசம்தான் என்று காலச்சுவடு தங்களது பழைய பத்திரிகைகளை வைத்துள்ளனர் எப்படியாவது வாசகனை படிக்கவைத்துவிடவேண்டும் என்கின்ற நல்ல நோக்கம்தான்.இதே போல காரல் மார்க்ஸின் சிலைகளும் கூட விற்கின்றனர் பார்க்க அழகாக இருக்கிறது.

சினிமா விஷயங்களை சொல்வதெற்கென்ற உள்ள டிஸ்கவரி புக் பாலஸ் அரங்கின் நிர்வாகி வேடியப்பனிடம் பேச்சுக் கொடுத்த போது முதல் நாள் நல்ல கூட்டம் இருந்தது இந்த இரண்டு நாள் கூட்டம் குறைவாக உள்ளது விற்பனையும் குறைவாக உள்ளது பொங்கல் விடுமுறையில் மக்கள் ஆதரவு நிறைய இருக்கும் என்று நம்புவதாக தெரிவித்தார் அவரது நம்பிக்கை நிறைவேறட்டும் ஏனேனில் புத்தகத்திற்கான செலவு ஒரு செலவல்ல அது ஒரு அறிவு சேமிப்பு என்பதை மக்கள் உணர்ந்துதான் இருப்பர்.
இன்னோரு விஷயமும் கண்ணில் பட்டது வழக்கமாக இந்த புத்தக திருவிழாவில் பத்து கடைகளுக்கு ஒரு கடையில் திரைப்பட பாடலாசிரியர் வைரமுத்துவின் புத்தகங்களும் அவரது படமும் பெரிய அளவில் இடம் பெற்றிருக்கும் இந்த முறை அப்படியொரு காட்சி கண்ணில் படவில்லை புகழின் உச்சத்தை அனுபவித்தவருக்கு அவர் பேசிய வார்த்தையானது புகழின் மறுபக்கத்தைக் காட்டிக்கொண்டிருக்கிறது போலும்.

புத்தக அரங்கில் இருந்த கூட்டத்தை விட உணவு பதார்த்தங்கள் விற்கும் கடைகளில் நிறைய கூட்டம் காணப்பட்டது மக்கள் இதனை இன்னோரு சுற்றுலா கண்காட்சியாக நினைத்துவிட்டார்களோ என எண்ணும்படி எல்லோர் கையிலும் மெகா அப்பளம் பஜ்ஜி சொஜ்ஜி வகையறாக்கள்...
சின்னச் சின்ன குறைபாடுகள் இருந்தாலும் இந்த புத்தக திருவிழா என்பது அனைவரும் அவசியம் போகவேண்டிய ஒன்றாகும்.குழந்தைகளுக்கு வாசிப்பின் நேசிப்பை சொல்லிக் கொடுக்க இந்த இடத்தை விட்டால் வேறு இடம் கிடையாது...

-எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.inAdvertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை