Acted in interest of judiciary, justice: Kurian Joesph | மீடியாக்களுக்கு பேட்டி ஏன்? நீதிபதி குரியன் விளக்கம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

மீடியாக்களுக்கு பேட்டி ஏன்? நீதிபதி குரியன் விளக்கம்

Updated : ஜன 13, 2018 | Added : ஜன 13, 2018 | கருத்துகள் (35)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
மீடியாக்கள்,Media, நீதிபதி குரியன் ஜோசப்,Judge Kurian Joseph,நீதிபதி தீபக் மிஸ்ரா , Judge Deepak Mishra, நீதித்துறை,  Judiciary, உச்சநீதிமன்றம் , Supreme Court,ஜனநாயகம், Democracy, நீதிபதி ஜே.சலமேஸ்வர், Judge J. Salamasver, நீதிபதி ரஞ்சன் கோகோய்,Judge Ranjan Kokai, நீதிபதி எம்.பி. லோகுர்,Judge MP. Lokur, சுப்ரீம் கோர்ட் ,

புதுடில்லி: நீதி மற்றும் நீதித்துறையை பாதுகாக்கவே நாங்கள் மீடியாக்களுக்கு பேட்டி கொடுத்தோம். நாங்கள் எழுப்பிய பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாக உச்சநீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் கூறியுள்ளார்.


போர்க்கொடி

"உச்ச நீதிமன்றத்தின் நிர்வாகம் கடந்த சில மாதங்களாக முறையாக இல்லை; விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்து வருகின்றன. 'இதை உடனடியாக சரி செய்யாவிட்டால், நீதித் துறையை மட்டுமல்ல, ஜனநாயகத்தையும் அது பாதிக்கும்' என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிராக, மூத்த நீதிபதிகள், ஜே.சலமேஸ்வர், அடுத்த தலைமை நீதிபதியாகவுள்ள ரஞ்சன் கோகோய், எம்.பி. லோகுர், குரியன் ஜோசப் ஆகியோர் புகார் கூறினர்.

போர்க்கொடி ஏன்?


நம்பிக்கை

இந்நிலையில், கேரள மாநிலம் காலடியில் டிவி ஒன்றுக்கு நீதிபதி குரியன் ஜோசப் பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது: நீதி மற்றும் நீதித்துறை நலனுக்காக மட்டுமே நாங்கள் செயல்பட்டோம். இதனை தான் நாங்கள் நேற்று டில்லியில் கூறினோம். இந்த விஷயத்தில் இதற்கு மேல் ஒன்றும் இல்லை.நீதித்துறையில் உள்ளவர்களின் நம்பிக்கையை நிலைநாட்டவே நீதிபதிகள் பேட்டி கொடுத்தனர். நாங்கள் எந்த விதிமுறைகளையும் மீறவில்லை. எங்களது நடவடிக்கை சுப்ரீம் கோர்ட் நிர்வாகத்தில் வெளிப்படை தன்மையை கொண்டு வரும். நாங்கள் எழுப்பிய பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
L.Pannneerselvam - chennai,இந்தியா
14-ஜன-201806:18:51 IST Report Abuse
L.Pannneerselvam உச்சநீதி மன்றத்தின் நான்கு நீதிபதிக்களயும் குறை சொல்பவர்கள், அவர்கள் எழுப்பியுள்ள குற்றச்சாட்டுகளுக்கு பதில் என்ன என்று கேட்கவில்லை.புரையோடியுள்ள உச்சநீதிமன்ற விஷயத்தில் ஆளும் கட்சி ஏன் அடக்கி வாசிக்கிறது? குட்டு வெளிப்பட்டுவிட்டதே என்ற வெட்கமும், பயமும்தான் காரணம். ஜனாதிபதியிடம் முறையிட்டால் அவர் என்ன செய்துவிடுவார்? தலைமை நீதிபதியை கண்டித்து விடுவாரா? அல்லது மாற்றிவிடுவாரா? ஒன்றும் நடக்காது. பார்லிமெண்டில் அதிகார பலம் கொண்ட கட்சியும், தலைவரும் எப்படி யாருக்காக ஆதரவு தருவார்கள் என்பது வெளிப்படை. எனவே, அந்த நான்கு நீதிபதிகளும் மக்கள் மன்றத்திற்கு வந்ததே மிகவும் சரி. சொல்லி பார்த்தும், பொறுத்துப்பார்த்தும் இருந்திருக்கிறார்கள். அப்படியும் ஒன்றும் நடக்கவில்லை.அதன் மூலமாவது, தவறு செய்கின்ற தலைமை பொறுப்பில் உள்ளவர் இனிவரும் காலங்களிலாவது தன் தவறை திருத்திக்கொள்ள மாட்டாரா என்பதே இதன் நோக்கம்.
Rate this:
Share this comment
Cancel
Gnanam - Nagercoil,இந்தியா
14-ஜன-201805:16:35 IST Report Abuse
Gnanam இவர்கள் மீடியாவை நம்பிவிட்டார்கள். இனி மீடியாவின் லீலைகளை இவர்கள் அனுபவிக்கட்டும்.
Rate this:
Share this comment
Cancel
balakrishnan - Mangaf,குவைத்
13-ஜன-201822:20:02 IST Report Abuse
balakrishnan இவங்களுக்கு கர்ணன் மாதிரி தண்டனை கொடுக்க வேண்டும் .
Rate this:
Share this comment
Ramesh Lal - coimbatore,இந்தியா
13-ஜன-201823:07:26 IST Report Abuse
Ramesh Lalஜெயலலிதாவின் சமாதியில், ஓ.பி.எஸ். தியானம் செய்து ஜெயலலிதா வின் ஆத்மா யுடன் பேசியதற்கு , இவர்கள் மீடியாக்களுடன் பேசியதற்கு சம்பந்தம் இருக்குமோ.?...
Rate this:
Share this comment
Cancel
13-ஜன-201821:58:43 IST Report Abuse
kulandhaiKannan இவருடைய பெயரே காட்டிக் கொடுக்கிறது
Rate this:
Share this comment
Cancel
m.ramalingam - puducherry,இந்தியா
13-ஜன-201820:26:53 IST Report Abuse
m.ramalingam இவர்கள் முதலில் பதவியில் இருந்து ராஜினாமா செய்து விட்டு பின் பேட்டி கொடுத்திருக்க வேண்டும். அதை விடுத்து கண்ணாடி வீட்டில் இருந்து கொண்டு கல் எறிந்த கதையாய் ஆகியுள்ளது. ராஜினாமா செய்திருந்தால் அவர்கள் மதிப்பு இன்னும் உயர்ந்திருக்கும். மாறாக தற்போது அவர்கள் மரியாதை தான் குறைந்தது. வேலை இல்லை வீதிக்கு வந்து விட்டோம் என்கிற சாதாரண மக்களால் இவர்கள்? அடுத்த வேலை சாப்பிட வழி இல்லாதவர்களா என்ன? இன்னும் குறைந்து போய்விடவில்லை. அவர்கள் அனைவரும் உண்மையில் நீதித்துறை சரியில்லை தீபக் மிஸ்ரா சரியில்லை என எண்ணுவார்கள் ஆயின் இப்போதே ராஜினாமா செய்யலாமே?
Rate this:
Share this comment
Cancel
raja - Kanchipuram,இந்தியா
13-ஜன-201819:47:10 IST Report Abuse
raja இந்த நாட்டில் யாரேனும் குறை கூறினால் உடனே ஒரு கூட்டம் குறை கூறியவர்களை சூழ்ந்து கொண்டு அவர்களை விமர்சிக்கும். மேலும் நம் நாட்டில் நீதித்துறை ஒரு கேள்விக்குறியாகவும் குற்றவாளிகளை பாதுகாக்கும் இடமாகவும் தான் தெரிகிறது.
Rate this:
Share this comment
Cancel
rajan - kerala,இந்தியா
13-ஜன-201818:10:10 IST Report Abuse
rajan JUDICIARY IS A DIRECT OWNER OF THE CONSTITUTION FORMED BY THE PARLIAMENT IN THE DEMOCRATIC INDIA. OF COURSE DIFFERENCE OF ION IS EVERY WHERE AND IF SO IT IS TO BE AMICABLY SETTLED WITHIN THEIR BOUNDRY TILL WITH THE PRESIDENT OF INDIA. BUT THE APPROACH OF THE JUDGES TO THE MEDIA IS VERY SENSITIVE TO THE DEMOCRATIC NATION STANDS AT THE TOP OF WORLD SCENARIO. SINCE THE CITIZENS FIND THE DIFFICULTY OF THE SUPREME COURT JUDGES TO GET ALONG THE MORAL STANDS OF THE NATION THEN THE ENTIRE TEAM OF THE JUDGES NEED TO BE RESTRUCTURED TO THE INTEREST OF THE NATION.MAY BE THE SAFE APPROACH HERE AS WELL THE KELEGIUM TEM IS TO BE REFORMED. IF AT ALL THESE SENIOR JUDGES FEEL TO HIGHLIGHT THEIR GRIEVANCES THROUGH MEDIA IT IS UNFORTUNATE AS WELL FAILED TO BOW THE CONSTITUTIONAL OWNERSHIP OF THE NATION AS WELL THE VISIT OF A POLITICIAN TO THE CHIEF JUSTICE IS STILL THE CHEAPEST. SOMEHOW TODAYS INCIDENT PUT THE STRENGTH OF THE PRESTIGIOUS PROFESSION OF JUDGES FALL INTO THE BLACK BOOKS. NOTHING CANNOT BE RESOLVED IN THIS WORLD WHEN YOU FEEL THE BREATH OF FREEDOM IN DEMOCRACY. LET US WORK TOGETHER FOR THE HARMONY OF THE NATION. ALL JUDGES MUST KEEP UP THEIR DIGNITY FOR THE NATION TO STAND FOR EVER IN THE COMING GENERATIONS. PLEASE ACCEPT OUR PONGAL GREETINGS TO WARM UP FOR A NEW DAY TO START.
Rate this:
Share this comment
Cancel
Ram - ottawa,கனடா
13-ஜன-201818:07:46 IST Report Abuse
Ram இந்த நாலுபேரும் நீதிதுறைமேல் நம்பிக்கை இல்லாமல் மீடியாவுக்கு வந்திருக்கிறார்கள் என்றால், இந்த நீதிபதிகள் கையாலாகாதவர்கள் என்று புரிகிறது,
Rate this:
Share this comment
Cancel
Narasimhan - Manama,பஹ்ரைன்
13-ஜன-201817:55:54 IST Report Abuse
Narasimhan இது நாலும் நேரு குடும்பத்துக்கு கூஜா தூக்கற கேஸுங்க. இரண்டு தினங்களுக்கு முன்னால் இந்திரா மரணத்திற்கு பிறகு சீக்கியர்கள் கொல்லப்பட்ட கேஸை மீண்டும் விசாரணை செய்ய உத்தரவிட்டார் தீபக் மிஸ்ரா. அது இந்த கூஜா தூக்கிகளுக்கு பிடிக்கவில்லை. இதுகளை நம்பி நீதி மன்றம் செயல்படுகிறது
Rate this:
Share this comment
Cancel
vns - Delhi,இந்தியா
13-ஜன-201817:25:22 IST Report Abuse
vns 1 கம்யூனிஸ்ட் மற்றும் khancross கட்சியால் இயக்கப்படும் இவர்கள் பொதுமக்களிடம் தங்கள் குறையைக் கூறியதால் பொதுமக்கள் இவர்களுக்கு நீதி கொடுப்பார்கள் என்று நினைக்கிறார்களா ? 2 அப்போது நாளைக்கு இவர்களை பொதுமக்கள் அவமதித்தால் அது நீதிமன்ற அவமதிப்பாகாதா ? 3 இதே நீதிபதிகள் உயர் நீதிமன்ற தீர்ப்புகளை மாற்றி எழுதினால் உயர் நீதிமன்ற நீதிபதிகள் இதேபோல ஊடகங்களுக்கு பேட்டிகொடுத்து இவர்களை காரசாரமாக திட்டலாமா ? 4 தலைமை நீதிபதி தங்களில் ஒருவர் நீதிபதிகள் எல்லோரும் சமம் என்றும் முதல் வரியில் கூறும் இவர்கள் வழக்குகள் இளைய (ஜூனியர்) நீதிபதிகளுக்கு சீனியரிட்டியை மீறி கொடுக்கப்படுகின்றன என்றும் கூறுகின்றனர். தலைமை நீதிபதிக்கு துல்லியமாகத் தங்களைக்காணும் இவர்கள், ஜூனியர் நீதிபதிகள் தங்களுக்கு இணையானவர்கள் அல்ல என்றும் கூறுகின்றனர்.. 5 முக்கியமான வழக்குகள் தங்களுக்கு வருவதில்லை என்று கூறும் இவர்கள் வழக்குகள் முக்கியமானதா அல்லவா என்று தீர்மானித்துதான் தீர்ப்பளிக்கிறார்களா ? பொதுமக்களின் பொது வழக்குகள் இவர்களுக்கு வேண்டாமா ? 6 இருந்த நான்கு நீதிபதிகளுக்கும் சரியாக ஆங்கிலத்தில் உச்சரிக்கவும் முடியவில்லை அவர்களது கருத்துக்களை சரியாக எடுத்துரைக்கவும் முடியவில்லை..இந்தியா உச்ச நீதிபதிகளிடம் கொஞ்சமும் திறமை இல்லை என்பதை உலகிற்கு கூறி நன்மை ஏளனப்படுத்தி விட்டனர்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை