helicopter has crashed off Mumbai Coast | ஹெலிகாப்டர் நொறுங்கி 4 பேர் உயிரிழப்பு| Dinamalar

ஹெலிகாப்டர் நொறுங்கி 4 பேர் உயிரிழப்பு

Updated : ஜன 13, 2018 | Added : ஜன 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
ஹெலிகாப்டர் , விபத்து, ஓஎன்ஜிசி, பலி

மும்பை: ஓ.என்.ஜி.சி., அதிகாரிகளுடன் சென்ற ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்து 3 பேர் உயிரிழந்தனர்.
5 ஓ.என்.ஜி.சி., அதிகாரிகள் மற்றும 2 பைலட்களுடன் காலை 10.25 மணிக்கு, ஜூஹூ விமான தளத்திலிருந்து கிளம்பிய அந்த ஹெலிகாப்டர், திட்டமிட்டபடி 11 மணியளவில் மும்பையில் தரையிறங்கியிருக்க வேண்டும். ஆனால், அந்த ஹெலிகாப்டர் தொடர்பை இழந்தது.
இதனையடுத்து இந்திய கடற்படை விமானங்கள், தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. அதில், ஹெலிகாப்டர் மும்பை கடற்கரை பகுதியில் நொறுங்கி கிடப்பதை கண்டுபிடித்தன. சம்பவ இடத்தில் 4 உடல்களை மீட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மற்றவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை